புதன், ஏப்ரல் 17, 2013

வாக்களித்து பாரதத்தின் நற்பெயரை,புகழை வானளாவச் செய்வதே கடமை .தேசப்பற்று.


    ௨௦௧௪   பாராளுமன்ற தேர்தல்.

பார் புகழ்  பாரதம்,
 இன்று  ஊழல்,லஞ்சம் ,பலாத்காரம்  என்று

பார் இகழ் பாரதமாக
பாரினில் களங்கப்  பெயருடன்
பயணிகள் வெளிநாட்டுப் பயணிகள்
பயப்படும்  படி  எச்சரிக்கைகள்
கொடுக்கும் பத்திரிகைச் செய்திகள்.


குற்றவாளிகள் தண்டிக்கப்  பட்டாலும் ,
நாட்டை இரத்தக் கிளறி ஆக்கும் குண்டுவெடிப்புக்குத்

துணை போனாலும் நீதிமன்ற தீர்ப்பிற்கு மேல்

ஆதரவளிக்கும் மத்திய அமைச்சர்கள் ,மின்னும் விண்மீன்கள் ,
குடித்து காரோட்டி பலரைக் கொன்றாலும்
வழக்கு நடந்துகொண்டே இருக்கும் அவல நிலை.
அவர்களை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் .

இவைகளைக்  கருத்தில் கொண்டு ,
இந்தியாவின் இன்னல்களைத் தீர்க்கும்
அச்சம் போக்கும் அனைவருக்கும்
ஆனந்த மளிக்கும் நேர்மைக்கும்
உரிமைக்கும் நீதிக்கும் உண்மைக்கும்
ஊக்கமளிக்கும் அரசாங்கம் அமைய
இந்திய இளைஞர்கள்
இந்த பாராளுமன்ற தேர்தலில்
 வாக்களித்து பாரதத்தின் நற்பெயரை,புகழை
வானளாவச் செய்வதே கடமை .தேசப்பற்று.






இதை நாட்டு நலனுக்கும் ,ஏழை எளியோருக்கும் பயன் படுத்தலாமே ?

 இறைவனைப் பற்றி ,
பற்றுக  என்பதே ஆன்றோர் வாக்கு.
அனுபவத்தில்  மனிதன் தனக்கும்
 தன் சமுதாயத்தில்  மிக உயரிய நிலையில்
இருப்பவர்களை ஒப்பிடுகிறான்.

அவனுக்கு  இறவனைப் பற்றுக என்ற எண்ணம் மேலோங்குகிறது.

சாய்பாபா  கோயிலுக்கு ௨௦௦ கோடி ரூபாய் நன் கொடை கொடுத்த செய்தி.

திருப்பதி எழுமலையானுக்கு 16 கோடி .

வைரக்கிரீடம் .

காணிக்கைகள் குவி கின்றன.

அரசர் காலத்திலிருந்தே  பணமும் தங்கமும் குவியும் இடம் கோயில்.

இந்த ஆலயங்களில் இருக்கும் பணம் ,ஆஷ்ரமங்களில் இருக்கும் பணம் .

இதை நாட்டு நலனுக்கும் ,ஏழை எளியோருக்கும்  பயன் படுத்தலாமே ?

என்பது நாத்திக வாதமா?பகுத்தறிவு சிந்தனையா? இறை  நிந்தனையா?

என்ற சிந்தனையில்  என் மனத்தில் தோன்றும் சிந்தனை  இந்த துகை/நகை/
மூலம் ஊழலற்ற ,லஞ்சம் அற்ற நேர்மையான அரசு ஊழியர்கள்,அமைச்சர்கள்
மற்றவர்கள் இருக்க ஏற்பாடு செய்யலாமே?

ஆண்டவனிடம் ஒரு பிரார்த்தனை --
(  ஏனென்றால் பல நிகழ்வுகள் ஆண்டவனைஉணர ச்செய்கின்றன.)

ஊழல் ஒழிக்க  / இரக்கமற்ற லஞ்சம் ஒழிய ஒரு அரசு சக்தியை
அசுர சக்தியாக ஏற்படுத்தட்டும்.பணம் தான் எல்லாமே சாதிக்கும் என்ற எண்ணம் ஒழிய கருணை காட்டட்டும்.
மக்கள் குறிப்பாக அதிகாரம் படைத்தவர்கள் மனதில் கடமை /நேர்மை
கோப்புகளை உடனுக்குடன் முடித்தல்,பொதுமக்களை வீணாக அலைக்களைத்தல்  ஆகியவை மாற ஆண்டவனிடம் பிரார்த்தனை.