புதன், மே 09, 2012

tamil ---special தமிழ் --சிறப்பு ---கிருபாநந்தவாரியார்



தமிழ் --சிறப்பு ---கிருபாநந்தவாரியார் .

ஆயிரம் பொய்  சொல்லி ஒரு கல்யாணம்  என்பது தவறு.போய் சொல்லி திருமணம் செய்தால் நிம்மதி எப்படி?
ஆயிரம் முறை போய்  சொல்லி  திருமணம்  என்பது தான் சரி.

மணமகன்/மணமகள் பற்றி விசாரிப்பது.

ஜாதகம் பார்ப்பது,
பெண் மாப்பிள்ளை பார்க்கப்போவது 

பத்திரிகை அடிப்பது /கொடுப்பது 

இவ்வாறு   ஆயிரம் முறை போய்  என்பதுதான் சரி.  பொய்  என்பது தவறு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


சொற்கள்  பயன் பாடு.

உரைப்பது====ஒரு பொருளைப்பற்றி விரிவாகச் சொல்வது.
பகர்தல்==எதையும் ஒளிவு மறைவு இன்றி கூறுவது.
இயம்புவது===உரத்த குரலில் சொல்வது.
முழங்குவது==ஒரு செய்தியை உரக்க அறிவிப்பது.
சொல்வது--உள்ளதை உள்ளபடி சொல்வது 
புகல்வது==ஒருவனுக்கு தெரியாத விஷயத்தை அவனுக்கு தெரியப்படுத்துவது.
கூறுவது==ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் விளங்கும்படி தெளிவாகச்சொல்வது.
பேசுவது====இதயத்திற்கும் மூளைக்கும் தொடர்பில்லாமல் வார்த்தைகளைக் 
கொட்டுவது 
##################################################################################