திருமணம் என்பதில் மன ஒற்றுமைக்கும் ,
அன்பிற்குமே முதலிடம் கொடுக்கவேண்டும்.
ஆனால் அதில் பெற்றோர்கள் இளம் உள்ளங்களை
பாதிக்கும் அளவிற்கு பேசும் பேச்சுக்கள்,
அதை மறந்து வாழ்ந்தாலும் அதை நினைக்கச் செய்யும்
மீண்டும் மீண்டும் சம்பவங்கள்.
இன்றைய கல்விப்புரட்சி யுகத்தில்
பிரிந்தோ பிரிக்கப்பட்டோ வாழும்
இளம் தலைமுறையினர்,
சின்ன சின்ன விஷயங்கள்,அதனால் வரும்
மன அழுத்தங்கள் ,விளைவாக விவாகரத்துக்கள்.
பெண்கள் வீட்டிலும் சரி,ஆண்கள் வீட்டிலும் சரி
இளம் உள்ளங்களை பிரித்துவிடும் ஆலோசனைகள்
விவாக ரத்து வழக்குகள்.
கொலை ,தற்கொலை ,வெறுப்பும் எல்லை.
பொறுமை,சகிப்புத்தன்மை இல்லா நிலை.
கட்டுப்பாடற்ற வாழ்க்கை ,
குழந்தைகள் படும் திருமணத்திற்குப் பின் ,
இல்வாழ்க்கை கசக்கும் நிகழ்ச்சிகள்.
அநாதை நிலையில் பெற்றோர்கள்,
கல்விப்புரட்சி யுகத்தில்
திருமண பந்தங்கள் போராட்டமே.
ஐம்பது சதவிகிதம்.