சனி, நவம்பர் 10, 2012

இந்த பேச்சு இந்துக்கள் மனதில் ஒரு எழுச்சியும் ஒரு மறுமலர்ச்சியும் ஏற்படுத்துமா?



   ராமர்  தமிழ்  நாட்டில்  எப்பொழுதுமே  விமர்சனைக்கு  உரியவர்.

 விமர்சிப்பவர் ஈ.வே.ராமசாமி .தந்தை பெரியார்.

ராமர் என்ற சொல் வடநாட்டில் மிகவும்   போற்றக்கூடிய  கடவுள்.

ஆனால்  அவர் இன்று ராம் ஜெத்மலானி என்று ராம் பெயர் கொண்ட,

  ராமர்  கோயில்  கட்ட முயற்சிக்கும் வட  நாட்டில்  ஆதர்ச  கணவர் இல்லை என்றும்

 அது  கதை என்றும் பேசி விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளார்.

 ராமர்  உண்மையோ பொய்யோ தொன்று தொட்டு கோடிக்கணக்கான  இந்துக்களால் 

வழிபடும்உத்தமர். மரியாதை புருஷோத்தமர்.

ராம்,ராம் என்று நாமாவளி எழுதி கோடிக்கணக்கில்

 மக்கள் மனசாந்தி பெற்றுவருகின்றனர்.

 அப்படிப்பட்ட ராமர் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

            இந்த விமர்சனம் ஒரு வண்ணானின் சொல்லுக்காக மனைவியை  காட்டில் விட்டவர் 

எப்படி ஒரு எடுத்துகாட்டன கணவர் என்பதுதான்.

  சீதை அக்னியில்  குளித்து  தன்னை புனிதமானவள் என்று நிரூபித்த உத்தமி

.அப்படி இருந்தும் மக்களின்   நல வழிக்காக  கானகம் அனுப்பயுள்ளர்.

 ஆனால்  அவர் தந்தைக்கு மூன்று மனைவிகள்.

இதை சிந்திக்கும் பொழுது மக்களிடம் ஒரு மத உணர்வு என்ற வேகம்  குறைவது இயல்பு. 

மேலும் நம் நாட்டில் சேலத்தில்  ஊர்வலமாக  ராமர் படத்தை எடுத்துச் சென்று செருப்பால் 

அடித்தபோதும்,கடவுள் இல்லை என்று கல்வெட்டில் பொறித்த 

போதும்  நாம் ஹிந்துக்கள் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்கிறோம்.

ஆலயங்கள்  அதிகமாகின்றன.பக்தர்கள் கூட்டம் அதிகமாகிறது.

ஹிந்துமதத்தில் தான் இருவகை பூசாரிகள்.கிரமக்கோயில் பூசாரிகள்.நகரக்கோயில் 

பூசாரிகள்.தமிழ் அர்ச்சனை.வடமொழி அர்ச்சனை.  ஜாதிக்கோவில்கள்.

ஹிந்து மதம் ஒரே சக்தியாக வளர்வதில் 

,ஹிந்துக்கள் ஒரே குரலில் ஒன்று சேராததில் 

 இந்துக்களே காரணமாகின்றனர்.

மற்ற மதங்களில் வேறுபாடுகளிருந்தாலும்  ஒற்றுமை உள்ளது.

  அத்தகைய ஒற்றுமை  ஏற்படும் என்ற நிலையில் ராதாவையும்,ராமனையும் விமர்சிக்கின்றனர்.  

இது நல்லதற்காகவா ?என்றெல்லாம்  யோசிக்காமல் ஹிந்துக்கள் மனம் புண்படும்படி பேசுவது 

வேதனை அளிக்கிறது. இது கண்டனத்திற்கு உரியது.

எல்லாம் நன்மைக்கே. எல்லாம் அவன் செயல்.




i