வெள்ளி, டிசம்பர் 30, 2011

andanan

பார்ப்பனை ஐயரென்ற காலமும் போச்சு என்று பாடியவர் பார்ப்பான்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியவன் பார்ப்பான்.
எங்கே பிராமணன் தொடர் எழுதியவன்  பார்ப்பன்.
குலம் தாழ்ச்சி சொல்வது பாவம்  என்று முழங்கியவன் பார்ப்பான்.
பெரியார் தலைவராக ஏற்ற திராவிடக்கட்சிகள் 44  ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வருகின்றன.அக்ரகாரங்கள் இன்று சமத்துவ புரமாக காட்சி அளிக்கின்றன.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற ஆட்சி 1969  முதல் தமிழகத்தில்.ஆனால் பட்டி தொட்டி எல்லாம் மம்மி-டாடி கலாச்சாரம் வந்தது அதற்குப்பின்னர் தான்.
இன்றும் இணைய தளத்தில் பார்ப்பனை திட்டி செய்தி வருவது மனசாட்சி இல்லா செயல்.நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆகியும் ஒரு இனத்தை மட்டும் அதுவும் சிறுபான்மை  இனம் அது எப்படி மாறிஉள்ளது என்று
எங்கே பிராமணன் தொடர் வந்தும் தாக்குவது மன சாட்சி இல்லா செயல்.குடுமிவைத்த பாப்பான் இல்லை. பஞ்ச கச்சம் கட்டும் பாப்பான் அதிகம் இல்லை.
இன்றும் தாக்கி அரசியல் நடத்துவது அநாகரீகம்.

raheem ke dhohe---tamil

ரஹீமின் ஈரடி.


ஹிந்தியில் ரஹீமின் தோஹை புகழ் பெற்றது.
அவர் பேரரசர் அக்பரின் சேனாபதி.வடமொழி,அரபி,பாரசி போன்ற மொழிகளின் பண்டிதர்.அவரின் ஈரடி கருத்துரை.

௧.ஒருவர் கூறிய கடுஞ்  சொற்கள், 
முயன்றாலும் திருத்திக்கொள்ள முடியாது.
திரிந்த பால் கடைந்தாளும்
 வெண்ணெய் கிடைக்காது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

௨.மரங்கள் பழங்கள் சாப்பிடாது.
ஏரி நீர் பருகாது.
அவ்வாறே,
நல்லவர்கள் மற்றவர்களுக்காகவே,
சொத்து சேர்ப்பார்கள்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

௩.அனைத்து செயல்களுமே,மெதுவாகவே  நடக்கும்,.
தோட்டக்காரன் நூறு குடம் தண்ணீர் ஊற்றினாலும்,
பருவ காலத்தில் தான் பழுக்கும்.
௫.ஒரு செயலை செம்மையாகச் செய்தால்,
அனைத்து செயலும் செம்மையாக நடக்கும்.
அனைத்து செயலும் செய்தால்,ஒரு செயலும் நடக்காது.
வேருக்கு ஊற்றும் நீரால்,மரம் முழுவதும் பூத்துக் குலுங்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
௫.மற்றவர்களிடம் யாசிக்கச் சென்றால்,
பெரியவர்களும் சிறியவர் ஆவர்.
மகா பலி சக்கர வர்த்தியிடம் யாசிக்கச் சென்ற,
நாராயணன் குள்ளமாக,௫௨ அங்குலமாக ஆனாரே.
************************************************************
மகான்கள் தான் தான் பெரியவர் என்று ஒருபொழுதும் சொன்ன தில்லை.
வைரம் ஒருபொழுதும்  தன் விலை ஒரு லக்ஷம் என்று கூறுவது இல்லை.
மற்றவர்கள் தான் அதன் மதிப்புக் கூறுவார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

.





a

hindi poet vrunda --eeradi

ஹிந்தி கவி வ்ருந்தரின் ஈரடி.

1.அரசன் அழிவான் ஆலோசனை  தப்பானால்,
ஆன்மீக சாதுக்கள் சேர்க்கை தப்பானால் அழிவர்.
அன்பு அதிகமானால் புத்திரர்கள் அழிவர்.
அந்தணர்கள் கல்வி கற்கவில்லையானால் அழிவர்.
************************************************************
௨.இனிய சொற்கள் மருந்துக்கு ஒப்பாகும்,
கசப்பான சொற்கள் கூறிய அம்பாகும்.
செவி வழி சென்று,முழு உடலையும்
நடுங்கச்செய்யும்.
*************************************************************
௩.எதையும் அறியாமல்,காணாமல்,தீர விசாரிக்காமல்,
சிந்திக்காமல்,மற்றொரு வரைப்பற்றி
 எப்படி கருத்துக் கூற இயலும்.?
கிணற்றுத் தவளை கடலின்
விஸ்தீரணம் எப்படிக் கூறும்.?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7
௪. வீரனின் வேடம் தரித்தாலும்,
கோழை வீரனாக முடியாது.
சிங்கத்தின் தோல் போர்த்தினாலும் ,
நரி சிங்கமாக முடியாது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
௫.முட்டாளும் தன் இடைவிடா,
முயற்சியால்,பயிற்சியால்,
மேதை ஆகலாம்.
கல்லும் கயிறு பட்டு ,
இழுக்க,இழுக்க குழியும்.
++++++++++++++++++++++++++++++++++++++++===




thulasidass eeradi

துளசிதாசர்  ஹிந்தியில் இராமாயணம் எழுதினார்.அது மக்கள் புரியும் அவதி மொழியில் எழுதப்பட்டதால் வால்மீகி சமஸ்கிருதம் மூல காவியத்தை   விட அதிகமாக பூஜிக்கப்படுகிறது.இன்று துளசிதாசரின் சில தோஹாக்கள் அதாவது ஈரடி களின் கருத்துரைகள் .படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

௧.துளசி கூறுகிறார்:---
மரங்கள் வளர்ந்து
 அந்த அந்த பருவங்களில்
 பழங்களைத் தருகின்றன.
அப்பழங்கள் சுவை
அப்பொழுதான் தெரியும்.
அவ்வாறே ஒரு மனிதனின்
 குறைகளும் நிறைகளும்
நேரம் வரும்போதுதான்
தெரியவரும்.
============================
௨.விளக்கு  ஏற்றியதும்
இருள்போய்
    ஒளி தெரியும்.
அவ்வாறே குரு
வந்ததுமே,
அறியாமை
இருள் நீங்கி
சீடர்களுக்கு
ஞான ஒளி
கிடைக்கும்.
=============================
௩.தேன்  பருகி இறப்பவனுக்கு,
விடம் தர வேண்டியதில்லை.
உலகை வெற்றி பெற்ற
பரசுராமர்,
ராமரின் இனிய   சொற்களாலும்,
பணிவாலும் தோற்றுப்போனார்.
தோற்ற ராமன் வென்றார் அவரை.
======================================
௪.தன் அனுபவத்தாலும் ,நன்கு விசாரணை   செய்தும்,
கண்டும் கேட்டும் துளசி  சொல்கிறார்---
கெட்ட மனிதன்  பட்டம் போன்றவன்.
பட்டக் கயிரை இழுத்தால் மேலே பறக்கும்.
தளர்த்தினால் தரையில்   விழும்.
கேட்டவனு அவ்வாறே.
=============================
௫.துளசி  கூறுகிறார் :-----
மற்றவரின் புகழை,
களங்கப்படுத்தி,
தன் புகழை உயர்த்துவோரின்
முகத்தில்  ஏற்படும்
களங்கம் அவர்கள்
இறப்பின் பின்னும் போகாது.
நிலையான களங்கம் ஏற்படும்.
==============================
௬.துளசி  கூறுகிறார் ,
 இரண்டு பெரியவர்கள்,
சண்டை  இடும்போது,
இடையில் சென்றால்,
அழிந்துவிடுவீர்கள்.--எப்படி
கல்லும் இரும்பும் உரசி மோதினால்,
எழும் நெருப்பின் இடையில் மாற்றிய ,
பஞ்சுபோல்.
====================================
௭.  நம்மைப்பற்றி  நன்கு அறியாமல்  ஒருவன் ,
நம்மைப் புகழ்ந்தாலும் ,இகழ்ந்தாலும் ,
அதைப்  பொருட்படுத்திஅதும் ,மகிழ்தலும் ,
வருந்துவதும்  வேண்டிய தில்லை.
----------------------------------------------------------------------
௮. தீராத  நெடுநாள் நோய்வாய்ப்பட்டவன்,
கடும் சொற்கள் பேசுவான்,தரித்திரன் ,பேராசைக்காரன்,
ஆகியோர் உயிர் நண்பராயிருந்தாலும் உடனே விட்டு ஒதுங்குவதே
சாலச்சிறந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
௯.மழை பொழிவதை  அனைவரும் பார்க்கின்றனர்.
சூரியன் மழை நீரை ஆவியாக்கி,மேகமாக மாற்றுவதை
யாரும் கண்டதில்லை.மழை நீர் கண்டு மகிழ்  கின்றனர்.
அவ்வாறு  மக்களுக்கு துன்பம் வராமல் வரிவசூல் செய்து,
கதிரவன் போல் ஆளுநர்கள் அதிர்ஷ்ட வசத்தால் நாட்டிற்குக்
கிடைப்பார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------௧௦.துஷ்டர்கள்  தங்கள்  கெட்ட குணத்தை ,
நல்லவர்களுடன்  இணைந்தாலும் ,
விடமாட்டார்கள்.எப்படி பாம்பானது,
சந்தன மரத்தில் சுற்றியிருந்தாலும்,
விஷமில்லாமல் போகாது.
****************+++*****************************************************************





;



புத்தாண்டு ௨௦௧௨,

புத்தாண்டு ௨௦௧௨,
 புதிய தலைமுறையினர்
மனதில்,
இன்றைய திரைப் படத்தாக்கங்கள் இன்றி,
பெற்றோரின் நிலை அறிந்து,
காதல் உணர்வே பெரிது என்று,
தோல்வியால் தற்கொலை,கொலை,
மதுமயக்கம்,மாது மயக்கம்,
கள்ளக்காதல்,கூலிப்படை,என்ற
எண்ணங்கள் வராமல்,
இறைவணக்கம் எண்ணங்கள் தோன்றி,
ஆமைபோல்  ஐந்தடக்கல்  ஆற்றி,
வளமான வருங்காலம் அமைய,
௨௦௧௨ ஜனவரி திங்களில் என் பிரார்த்தனைகள்.
துளசிதாசர் பெண் பித்தர்,
அவர் மனைவி  அவரைத்திருத்த,
கூறி மொழிகள்,
எழும்பும் சதையும்,
கொழுப்பும் அழகும் உள்ள
 இந்த உடலின் அழகு
நிலையற்றதல்ல.
அழியும் உடலாசை தவிர்த்து,
ஆண்டவன் மேல் பற்று கொண்டால்.
அவனியில் தங்கள் பெயர்,
புகழ் ஓங்கி  நிலைத்திருக்கும்.
அவ்வாறே அருணகிரியின் அவல வாழ்க்கை,
ஆன்மீகத்தால் முருக பக்தியால்
தமிழுக்கு பெருமை சேர்த்தது.
அவர்களின் பட்டறிவு அறிந்து,
இளமை நிலையாமை என்பதை
நினைவில் கொண்டு ,
நானிலம் போற்றும் உத்தமர்களாக,
மாணவர்களுக்கும் ,மக்களுக்கும்
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பிரார்த்தனைகள்.