ஞாயிறு, ஜூலை 13, 2014

சனாதன தர்மமும் சீரடி சாய்பாபாவும்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் இடுகை .

ஏன் ?

நமது மதம் மூலம் இயற்கையை இறைவனாக வழிபட்டது.

இயற்கையின் ஆற்றலை வெல்ல முடியாமல் 

இருக்கும் வரை சூரிய  பகவான் ,சந்திர பகவான் ,வாயு பகவான்  என்ற இயற்கையே இறைவன்.

பின்னர் ஆறுகள் ,காட்டாற்றுவெள்ளம் ,சமுத்திர அலைகள் .

காடு ,வனதேவதை ,மரங்கள் ஸ்தல வ்ருக்ஷமாக  வழிபாடு ,

மனிதன் ஆற்றலில் அறிவியல் வளர்ச்சி 

கணினி வரை,சிகிச்சை முறைகள் வளர்ச்சி .
இயற்கையிலிருந்து  தன்னை பாது காத்துக்கொள்ளும் 

உயர்வு  சற்றே அவனை
கடவுளின் ஆற்றல் மீது ஐயப்படும்
 ஒரு பிரிவு  . ஆனால் இந்த பிரிவால் 

ஒரு பேராற்றல் அல்லது இறைவன் உள்ளான்
 என்பதை மறுக்க முடியா நிலை.

அது தான் மூப்பு ,மரணம்.

இந்த நிலையில் அறிவு செயல்படத்தொடங்கியதுமே 

மனிதனின்  ஆணவம் .பேராசை ,பொறாமை ,சுயநலம் ,கோபம் ,பழிவாங்கல்,வெறுப்பு ,அபகரித்தல் போன்ற தீய குணங்களும் வளர்ந்தன,
சிவபுராணம் படிக்கும் போது அரக்க குணங்கள் உடையவனை 

சிவன் ,விஷ்ணு ,ப்ரம்மா மூவரும்
 இணைந்தே படைக் கின்றனர்.

இதில் சிவன் அரக்கர்களுக்கு
 அவர்கள் வேண்டிய வரமளிப்பவர் ,
விஷ்ணு அரக்கர்களை அளித்து காப்பவர்.
இப்பொழுது சிவ ,வைஷ்ணவ் பக்தர்கள் 
தங்கள்  தங்கள்  இறைவனின்
 ஆற்றல்  படி பிரிந்தனர்.

ஒருவர் சுடலையில் வாழ்பவர். மற்றொருவர் லக்ஷ்மி யுடன் 

இருப்பவர்.இவர்களை எல்லாம் யார் உயர்ந்தவர் 
என்ற நிலை. 
இப்படி  இருக்கும் நிலையில் 
ஆசார்யர்கள் தோன்றினர்.
.அவர்கள் தங்களுக்கு இறைவன் கொடுத்த ஆற்றலால் 
எளிமையாக வாழ்ந்து 
தங்கள் எண்ணங்களால் ,செயல்களால் ,வாக்கால் 
மக்களை நெறி படுத்தினர்.
அவ்வாறன  ஒரு அறநெறி ,அன்புடன் வாழ்ந்த 

கடவுள் எல்லோருக்கும் எஜமானர்  ஒருவரே என்று 

அனைவரையும் ஒற்றுமைப் படுத்த 

தோன்றியவரே  சீரடி சாய்பாபா.

அங்கு மத சண்டைகள் இல்லை .

அவரை ராம் என்பவரும் உள்ளனர்,
அவரை கிருஷ்ணர் என்பவரும் உள்ளனர்.
அவரை சிவன் என்றும் கூறுகின்றனர்.

அல்லா சாய் என்கின்றனர் .
பஜனைப்பாடலில் ஏசு சாய் என்கின்றனர்.

இப்படிப்பட்ட  சாய் பக்தர்கள் ஒருவர் மற்றொருவரை 
சந்திக்கும் போது  மிக சிரத்தையுடன் கூறுவது சாய் ராம் .
ராம் நாம ஜபம் உடன் இணைகிறது.
சாய்பாபா கோயில் இல்லாத இடம் இல்லை.
இப்பொழுது  ஜ்யோதிர் மட் ஸ்ரீ ஸ்ரீ  ஸ்ரீ சங்கராச்சாரியார் 

சாய் பக்தர்களுக்கு "ராம்"என்று சொல்ல தகுதி இல்லை.

சாய் பக்தர்கள் புனித கங்கையில் குளிக்கக்கூடாது.

சாய் பக்தர்களுக்கு எதிர் விளைவுகள் ஏற்படும்.
அவர்கள் இந்து மதத்தை துண்டுபோட்டு அழிக்கப்பார்க்கிறார்கள் 

என்று தன தொண்ணூற்று இரண்டாவது அகவையில் 

அறிவிக்கிறார்.
இதில் உண்மை இருக்குமா ?என்று சிலருக்கு ஐயம் எழுந்துள்ளது.

எதிர்ப்பு அலைகளும் கிளம்பியுள்ளன.

நமது சனாதன தர்ம ஒற்றுமை உயர நாம் பாடு படும் 
நேரத்தில் இப்பாடிஎல்லாம் பிரிவினை ஏற்படுத்துவதும் 
யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறியதும் அவரைப்பின் பற்றி சிலர் மாறப்போவதாகவும்  இந்த மாற்றத்திற்கு 
பயங்கரவாதிகள் சதி என்றும் பல வதந்திகள்
 வந்து கொண்டிருக்கின்றன.

சனாதனதர்மத்தை பேராற்றல் கொண்ட 
இறைவன் காப்பாற்றுவார்.
நானும் சாய் பக்தர் தான் .
சாய் ராம் துணை இருப்பார்.