வியாழன், டிசம்பர் 01, 2011

clean the temple tank and temple environment pakuththarivaalar sinthanaikku

பகுத்தறிவாளர்கள் சிந்தனைக்கு

சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி.அதாவது உடல் தூய்மை,உள்ளத்தூய்மெய்மனிதனுக்கு உடல் ஆரோக்கியம்,உள்ள ஆரோக்கியம் அளிக்கும்.

பாத ரக்ஷை என்பது இராமாயண காலத்திலேயே உண்டு.பல மகான்கள் கோவணத்துடன் தான் வாழ்ந்துள்ளனர்.உலகில் எங்குமே செல்லாமல் உலகில் உள்ள   அனைவருக்கும் ஆன்மீக ஞானம் அளித்தவர் ரமண மகரிஷி.அவர் இறுதிவரை அணிந்தது கோவணம்தான்.

இந்த இரண்டையும் கேலிசெய்வது ஆரம்ப கால இந்து தர்ம சாதுக்களை மட்டம் தட்டுவது.
பரதன் பாதுகை வைத்து ஆட்சி செய்தான் என்று மகிழும் நாம், ,கிரிவலப்பாதையில் செருப்புப்போட்டு நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடும்பாவி எரிக்கிறோம்.நான் திருவண்ணாமலை கிரிவலம் சென்றேன். கார்த்திகை தீபம் அன்று சென்றேன்.கோயில் மதில் சுவரைச்சுற்றி மல ஜலம் கழித்து நாற்றம்.எத்தனையோ கோயில் குளங்களை குப்பை மேடாக்கும் காட்சிகள்.கடவுள் இல்லவே இல்லை.என்ற வசகத்தைக்கண்டு படித்து கொதிப்படையாத இந்து நெஞ்சங்கள்,செருப்பு போட்டதற்கு செய்த ஆர்பாட்டம் வெட்ககேடானது.மேலும் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, கோயில் வீட்டில் குடியிருப்போர் கோயில் நிலம் குத்தகை எடுப்போர் என பல ஊழல்கள்.இவர்களுக்கு பணபலம் அதிகாரபலம்.சிவில் வழக்குகள்.பாத ரக்ஷை அதாவது செருப்பு. அழகான தமிழ்சொல் பாத அணி.அணிகலன்.அதை கல்லும் முள்ளும்,மலமும் மூத்திரமும் நாய்  கழிவும் மாட்டின் சாணியும் உள்ள கிரிவலப்பாதை. தூய்மை எங்கே/எச்சில் வேறு.சிந்திப்பீர்.பகுத்தறிவாளர்களே.

கோயில்கள் காலத்திற்கேற்ற மாற்றம் அடைகின்றன,பக்தர்கள் வசதிக்காக குளிர் சாதனங்கள்,மலையேற வசதியாக பேருந்துகள்,இழுவை ரயில்கள்,கரிபிடிக்காமல் இருக்க கர்ப்பூரம்  ஏற்றாமை என எவ்வளவோ புதுமைகள் ஏற்கிறோம். கோவணம்  பஞ்சகச்சத்தைவிட ஆணுறுப்பு ஆடுவது தெரியா பிரம்முதாஸ் என்ற அரைக்கால் சட்டைக்குத்தடை. புடவையை விட சூடிதார் பெண்கள் அங்கம் மறைக்கும் சாதனம்.மரப்பட்டை அணிந்த மனிதன் நாகரீக வளர்ச்சிக்கேற்ற ஆடைகள் மாறுகின்றன.நமது சம்பிரதாயங்களும் மாறுகின்றன, கோயில்களில் குடுமி வைத்த அர்ச்சகர்கள் குறைவு. இதை எல்லாம் சிந்தித்து ஆக்கபூர்வ செயலில் ஈடுபடாமல் சினேகா செருப்புபோட்டு நடந்தாள்.இன்னொருவன் புகைபிடித்தான் என்று போராடுவது பைத்திக்காரத்தனம். இளைஞர்களே சிந்தித்து களம் இறங்குவீர் கட் அவுட்டுக்கு அபிஷேகம் செய்யும் பாலை அநாதை ஏழை குழந்தைகளுக்கு கொடுங்கள்.சுவாமிக்கு பால் அபிசேகத்தை கிண்டல் செய்த பெரியார் கட் அவுட்டுக்கு அபிசேகம் செய்யும் பகுத்தறிவாளர்களை  என்ன செய்வார்.
என்மேல் ஆத்திரப்படாமல் சிந்திப்பீர். ஆத்திரக்கரனுக்கு புத்திமட்டு.

proverb

பழமொழி

சிந்தித்து செயல்படு.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
ஆராயாமல் சிந்திக்காமல் மற்றவர்கள் கருத்து கேட்காமல் ஆத்திரப்பட்டால் உண்மை தெரியாமல் அறிவு மட்டமாகி காரியத்தில் வெற்றி கிட்டாது.
தான கோபம் தான சத்துரு. என்பது தெலுங்கு பழமொழி.ஒருவனுக்கு அவன் படும் கோபமே அவனுக்கு விரோதி.
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு என்பர்.மற்றவர் செய்யும் தீங்கைக்கண்டு  வெகுண்டு எழவேண்டும். நியாயமான கோபத்திற்கு குணம் உண்டு
பதறாத காரியம் சிதறாது என்பதும் பழமொழி.

spoken wrtten tamil

WRITTEN/SPOKEN TAMIL

     1.I  get up early in the morning.=naan kaalaiyil seekkiram elunthirukkiren./(w)/ENTHIRUKKIRE.
நான் காலையில் சீக்கிரம் எழுந்திருக்கிறேன்./எந்திருக்கிறேன்

2.WHEN DO YOU PLAY== NEE EPPOLUTHU  VILAIYADUKIRAAY.(w) EPPA VILAYAADURE/
நீ எப்பொழுது  விளையாடுகிறாய் ?      நீ எப்ப விளையாடுறே  ?

3.சரளா மாலையில் விளையாடுகிறாள்./சரளா மலையிலே விளையாடுறா

SARALA  MAALAIYIL VILAIYAADUKIRAAL.(WRITTEN)=SARALA  MAALAIYILE VILAIYAADURAA.(SPOKEN)
SARALA PLAYS IN THE EVENING.

4.WE WORK TILL 5 O'CLOCK.==NAANGAL 5 MANIVARAI VEL AI SEIKIROM.//SEYROM.

         நாங்கள் 5 மணிவரை  வேலை செய்கிறோம்.//   ( எழு)செய்றோம். (பேச்)

5 .WHERE DO YOU BATHE,=NEE ENGE KULIKKIRAAY.?written-KULIKKIRE.
நீ எங்கே குளிக்கிறாய்.?      குளிக்கிறே ? 

proverb in tamil

பழமொழி  proverb  कहावत  या लोकोक्ति

மக்கள் தங்கள் அனுபவத்தாலும் பட்டறிவாலும் எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச்சென்ற  அறிய கருஊலம்  பழமொழி.இந்த பழமொழிகள்  அனுபவ ரீதியால் உணர்ந்து வாழ்க்கையில் பின்பற்றக்கூடியவை.

தங்கம் செய்யாதது சங்கம் செய்யும். 
தனிமரம் தோப்பாகாது.

இந்த பழமொழி தான் இயலாத காரியங்களை  முடியாத காரியங்களை உலகில் நடக்கும் செயல்களாக மெய்ப்பித்து காட்டுகிறது.ஆண்டவன் சக்தியை விளக்குவது அறியச்செய்வது சத்சங்கம்.சத்சங்கத்தால் ஞானம் பெற்றோர் இறைவனை உணர்ந்துள்ளனர்.கண்டுகளித்துள்ளனர்.மெய்ஞானம் பெற்று பல

காவ்யங்களையும்   கவிதைகளையும்  இயற்றி உலகையும் சமுதாயத்தையும் சீர் திருத்தி உள்ளனர்.ஹிந்தி கவிஞர் கபீர்தாசர் படிக்காதவர்.அவர் ஞானம் பெற்றது சத்சங்கத்தால்.ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு உலகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்
.தமிழ் மொழி வளர்ந்ததே சங்கத்தால் தானே.
பழமொழி ஒற்றுமைக்கானது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. அதே கூட்டுறவு நாட்டுஉயர்வு. சிந்தித்து செயல்படுவோம்.

changing thoughts old is gold old age homes

பழையன புதிய முறையில்
முதியோர் இல்லம்.


இன்றைய சமுதாயம் நல்ல வற்றை ஏற்கிறதா?ஏற்கும் சூழ்நிலை உள்ளதா/?வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ற நவீன கால தொழில்நுட்ப காலத்திற்கேற்ப நம் செயல்பாடுகள் பண்பட்டு உள்ளதா? இல்லை என்றால் ஏன்/?ஆம் .என்றால் எப்படி?

இன்று இளம் தலைமுறையினர்  அனைவரும் இளங்கலை முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்.பட்டம் பெரும்  முன்பே வேலை உத்திரவாதம்.பெற்றோர்கள் மிகவும் தங்களை தங்கள் தனிப்பட்ட ஆசைகளை ஒதுக்கி  அல்லது துறந்து தான் பெற்ற ஒன்று அல்லது இரண்டு வாரிசுகளை மேலை நாட்டிற்கோ அல்லது அண்டை மாநிலத்திற்கோ நல்ல வேலைக்கு அனுப்பி மகிழ்கின்றனர்.குழந்தைகளும் இறக்கை கட்டி பறந்து விடுகின்றனர்.
அவர்கள் பாசத்திற்கு குறைவில்லை/பெற்றோரின் கனவுகள் ஒன்றே தன் குழந்தை நல்ல பணியில் அமைதியான சூழலில் பணியாற்றவேண்டும் என்பதே.பாசமுள்ள குழந்தைகள் தன் பெற்றோர் பட்ட பொருளாதார மற்றும் தியாகங்களை உணர்ந்து அன்பைப்பொழிய தொலை பேசி கணினி என்ற தொலை தொடர்பு சாதன்களைப் பயன்படுத்துகின்றனர்.பணம் அனுப்புகின்றனர் .விமான டிக்கட்டுகள் வாங்கி அனுப்புகின்றனர். மகிழ்விக்கின்றனர்.அனால் இவை எல்லாம் நல்ல மனைவி அமையும் போது.
தான் படித்துள்ளோம்/ பட்டம் பெற்றுள்ளோம்.நாமும் பணியாற்றுகிறோம் என்ற எண்ணத்தில்  இளம் தலை முறையினர் எனக்கு அப்பா என்ன செய்தார்/அம்மா என்ன செய்தார்/அப்பா தண்டம்  நான் ஆசைப்பட்டதை அவர் வாங்கித்தரவில்லை.அவர் என்ன செய்தார்.என பெற்றோரை உதாசீனம் செய்யும் குழந்தைகளும் உண்டு.

வயதானால் மடிவது உறுதி. பிரிவது நிச்சயம் என்ற மன நிலையில் இன்றைய தலை முறையினர்  பண்பட்டு வாழத் தொடங்கி விட்டனர்.அன்றைய தலைமுறையினர் பாசம் என்ற வலையில் பிரியாமல் வறுமையில் வாடினர்.இன்றைய தலைமுறையினர் வசதி வாய்ப்புகளை இழக்காமல் பாச நேசத்தோடு பண்பட்டு மென்மையாக வாழ்கின்றனர்.
அன்றைய பிரம்மச்சர்யம் ,க்ருஹஷ்தம்  ,வானப்ப்ரஷ்தம்  ,சன்யாசம் என்ற வாழ்க்கை நிலை புதிய சூழலில் முதியோர் இல்லங்களாக மாறிவருகின்றன.
பழைய கோட்பாடுகள் என்றென்றும் புதிய பெயரோடு வாழ்கின்றன .