அதிகாலை நேரம்,
ஆண்டவனைத் தொழும் நேரம்.
இன்றைய நாட்களில் , பொருள்
ஈட்டும் தொழில் நுட்பப் பணியில்,
கடமையைச் செய் .
கடவுள் கருணை உண்டு
என்ற கீதை உபதேசம்.
ஏற்புடையதாயிற்று.
ஹிந்தியில் நான் படித்த தோஹை,
வீரர்கள் செயலில் இறங்குவர்.
கோழைகள் வீண் பெருமை பேசுவர்.
வீரர்கள் களத்தில் குதிப்பர் .
கோழைகள் தற்பெருமை பேசுவர்.
காலம் மாறுகிறது.
கருத்துக்கள் மாறுகின்றன.
ஒரு கிணறுவெட்ட பழைய முறை
உதவாது.
நெசவு நெய்ய கைத்தறி ,
காலத்திற்கேற்ற நூற்பாலை.
அகல் விளக்கு ,
இன்று மின் விளக்கு.
கட்டை வண்டி
இன்று ஜெட் விமானம்.
கதை பேச நேரமில்லா உழைப்பு.
நான் சிறுவனாக இருந்த போது .
ஒருவர் உழைப்பு;
பலர் அமர்ந்து உண்பர்.
வெட்டிப்பேச்சு ;
திண்ணைப்பேச்சு;
வீண் வம்பு;
அரசியல் கூட்டம்;
அலை மோதும்.
இன்று மோதியின்
ஒருமேடைப் பேச்சு .
நான்கு ஊர்களில் .
பொதுமேடைப் பேச்சு.
தொலைக்காட்சியில் வீட்டில் இருந்தே,
நேரடி ஒளி பரப்பு.
அறிவியல் விந்தைகள்.
அன்றாட வாழ்வில்.
பல மொழிகள் அறிவு பாமரனுக்கும் தேவை.
பொருட் செல்வம் இருந்தால் ,
தன் இனம் வளரும்.
தன் மொழி வளரும்.
வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றும் சேவை,
ஆர்வம் தோழி நுட்ப வசதியால் தானே?
மடி கணினி இலவசம்.-ஆனால்
மின்சாரம் இல்லை.
தொலை பேசி வசதி இல்லை.
வலை அலை வசதி இல்லை.
பயன் படுத்த முடியவில்லை.
அலைகற்றை ஊழல் அலை ஓயவில்லை.
வீண்பேச்சுக்கள் தான்.
பொருளாதாரம் இருந்தால்,
தமிழ் மொழி வளரும்.
திரைகடலோடியும் திரவியம் தேட,
தமிழ்,தமிழ் என்ற வீண் பேச்சுப் பேசி,
காலத்திற்கேற்ப கல்வி இன்றி ,
கல்வித்துறையில் நேர்மையின்றி,
காசேதான் கல்வி,
இல்லாருக்கு இல்லை என்ற நிலை இன்று.
அரசுப்பள்ளி தரம் உயர,
என்னதான் செய்தாலும்.
பெற்றோர்கள் பொருளீட்ட அலையும் பொது,
நல் ஒழுக்க சூழல் சமுதாயத்தில்,
ஊடகங்களில்,
திரைப்படங்களில் .
ஆடைகளில் கவர்ச்சிகள் கண்ணைப்பறிக்கும் போது ,
ஊழல்,கொலை,கொள்ளை,லஞ்சம் என்பதே
பேச்சாக
இருக்கும் போது ,
ஒழுங்கீனங்கள் தானே மிஞ்சும்.
ஆன்மிகம் அமைதி தந்தது.
ஆனால் அதில் ஆஸ்தி தேடுவோர் அதிகமானதால்,
பொருளின்றி அருள் இல்லை
என்ற நிலை.
எல்லா இடத்திலும் இருக்கும் இறைவன்,
அவன் அருள் பெற உள்ளார்ந்த பிரார்த்தனை,
உள்ள இடத்திலேயே போதும்.
உண்மை சொன்னால் ஊர் நகைக்கும்.
ஊர்க்கோடியில் ஒரு சாமியார்,அவரோ போலி,
அவருக்கு பல கோடி சொத்து.
இதுவா இறைவன் அருள் பெறும் இடம்.
பணம் இருந்தாலே பத்தும் செய்யும்.
அங்கு எங்கே தர்மம் தலைக்கும்.
காலம் மாறினாலும்,
கல்வி அறிவு பெருகினாலும்
போலிகளிடம் ஏமாந்தாலும்.
உண்மை புரிவதில்லை.