வியாழன், அக்டோபர் 18, 2012

வையக அமைதிக்கு, சனாதன தர்மம் கூறிய கூற்று, மெய்யாகும் காலம் வரும். ஓம் சாந்தி.ஓம் சாந்தி.ஓம் சாந்தி.

வையக அமைதிக்கு, சனாதன தர்மம்   கூறிய  கூற்று,
மெய்யாகும்  காலம் வரும்.
ஓம் சாந்தி.ஓம் சாந்தி.ஓம் சாந்தி.


அகவை  கூடக் கூட ,
அறுபதுக்குப்பின் ,
அறிவுடன் வாழ்ந்தோமா?
அறிவிழந்து  வாழ்ந்தோமா?
ஆஸ்தி சேர்த்தோமா?
அன்புச் செல்வங்களுக்கு 
ஆதரவளித்து,
அறிவு புகட்டி,
அவர்கள் அகம் மகிழ வளர்த்தோமா?
ஒய்வு பெற்று  ,
ஓய்வூதியம் பெற்றாலும்.
நன்மக்கள் பெற்று 
செல்வச் செழிப்புடன் 
வாழ்ந்தாலும் .
எதோ ஒரு மனக்குறை மனதில் 
எதோ ஒரு ஓரத்தில் 
தோன்றுகிறது.
காரணம்  அறிவியல் வளர்ச்சியா?
இளம் தலைமுறையின் ,
அறிவுமுதிர்ச்சியா?
கணினி இல்லா
 காலத்தில் வளர்ந்து,
இன்று கணினி மூலம்,
பெறு ம் அறிவு,தொடர்பு,
அவ்வையின் 
கற்றது கைமண் அளவு,
கல்லாதது உலக அளவு 
என்ற மொழி  காலத்தால் அழியாதது.
மடிகணினி   தட்டினால்,
அறிவில் நாம் எவ்வளவு 
ஞான சூனியமாக வாழ்ந்தோம் 
என்ற ஞானம் பெற்றேன்.
நமது குழந்தைகள்.
தங்கள் சட்டைப்பையில் ,
அகிலத்தை அடக்கி வைத்துள்ளனர்.
கைபேசியில்.
வணிகத்தொடர்பு 
அரை நொடியில்,
வேலைவாய்ப்பு  நேர்காணல்,
விண்ணப்பம் அனுப்புதல்,
தங்கள்  பள்ளி நண்பர்கள்,
கல்லூரி  நண்பர்கள்,
பல காத தூரம்,
சீனாவில் இருந்தாலும்.
சிங்கப்பூரில் இருந்தாலும்,
ரஷ்யாவில் இருந்தாலும்.
அமெரிக்காவில் 
இருந்தாலும்,
இந்தியாவின் ஒரு 
குக்கிராமத்தில் 
இருந்தாலும் 
முகம்  பார்த்துப் பேசும் 
உன்னத வளர்ச்சி.
நாம் வாழ்ந்த பழைய காலம்,
ஒரு குறுகிய வட்டம்.
எத்தனை எத்தனை குறுகிய 
எண்ணங்கள்.
மதங்களின் பெயரால்,
ஜாதியின் பெயரால்.
இன்று பரந்த உலகம் காணும் போது ,
வையகம் வாழ்க.
வையகம் ஒரு குடும்பம்.
மனித இனம் ஒன்று
சூரியன் ஒன்று.
சந்திரன் ஒன்று.
வையக அமைதிக்கு,
சனாதன தர்மம்   கூறிய 
கூற்று,
மெய்யாகும் 
காலம் வரும்.
ஓம் சாந்தி.ஓம் சாந்தி.ஓம் சாந்தி.




முப்பெரும் தேவிகளின் ஆராதனை , மட்டும் நவராத்திரிப் பண்டிகை நோக்கம் அல்ல.


முப்பெரும்  தேவிகளின் ஆராதனை மட்டும்
 நவராத்திரிப்  பண்டிகை நோக்கம் அல்ல.


நவராத்திரி

முப்பெரும்  தேவிகளின் ஆராதனை  ,
மட்டும் நவராத்திரிப்  பண்டிகை
நோக்கம்   அல்ல.
பொம்மை செய்யும் கைவினைஞருக்கு
ஒரு ஊக்கம்.
குழந்தைகளுக்கு ,
குதூகூலம்.
பெண்கள் தங்கள்
உறவினர்கள்,
நண்பி களுடன்,
சந்திக்க
ஒரு வாய்ப்பு.
இசைக்கலை ஆர்வம்  
வளர ஒரு வாய்ப்பு.
தெய்வங்கள் பொம்மைகள்
ஆன்மீகம்  வளர்த்த
ஆசார்யர்கள்
பொம்மைகள்
செட்டியார் பொம்மைகள்,
விலங்குகள்,
தோட்டக்கலை
என அனைத்துச்
சிறப்புகளுக்கும்
ஆர்வம் ஊட்டும் பண்டிகை.
சக்தி தர மலைமகள்.
கல்விதர கலைமகள்,
செல்வம் தர அலைமகள்
தினம் ஒரு சுண்டல்,
உடல் ஆரோக்யத்திற்கு.
நம் முன்னோர்கள்,
ஆன்மிகம் என்பதை,
அறிவியல் ,கலைகள்
ஆகிய வளர்ச்சிக்கும் சேர்த்தே
வளர்த்துள்ளனர்.
இந்த நாட்களில்
அனைவரும் தேவிகளைவணங்கி
ஞானம்பெறுவோம்.

हमारे साथ कभी माया है तो कभी ममता है।

अपराधी  हम नहीं हैं।

एना हज्जारे,केजरीवाल    हम  पर आरोप  लगाते  हैं।
मैं  कांग्रेस  दल में हूँ।
हमारे  स्थायी अनुयायी है।

वह भारतीय जनता दल में हूँ।
उस के स्थायी  अनुयायी हैं।

हमारे साथ  कभी  माया है  तो
कभी  ममता है।
कभी लाल है तो
कभी यादव है।
अतः  हम सब बनते हैं
सांसद;  विधायक।
क्या थोड़े ही हम अपराधी हैं?
मतदाताओं  में  बदल-बदलकर
माया-या   ममता
अक्सर घेर लेती हैं।
हम बनते हैं  शासक।
अपराध हम नहींकरते।
मतदाता अपराध  करते हैं।
भोगते  हैं कष्ट .
हम सुखी हैं।
अतः  हम हैं भाग्यवान।
जो कष्ट भोगते हैं ,
वहीं पापी है।
हम अपराधी हैं नहीं;
हम है पुण्यात्मा।
हमें बिजली का कष्ट नहीं है।
हमारी सड़कें पक्की हैं।
हमारे  लिए इलाज  की कमी नाहीं।
महंगाई की चिंता नाहीं।
चिंताएं उनको सताती हैं ,
जो अपराध करते हैं;
वे ही बेचारे मत दाता।