நாடு விடுதலை அடைந்து ஐம்பதாண்டுகளாகியும்
பிற்பட்ட மிகப்பிற்பட்ட அட்டவணை ஜாதிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது
என்றால் போராட்டங்கள் நடக்கிறது என்றால்
இது அரசின் பலவீனமா ?
சுயநல அரசியலா ?
ஜாதி அரசியல் தான் ஆட்சி பிடிக்க தூண்டிலா?
மக்கள் பலவீனமா ?
சோம்பேறித்தனமா ?
தன் திறமை அதிகரிக்க
அரசு விடவில்லையா ?
நடிகர் களுக்கு கட்அவுட் பாலாபிஷேகமா ?
பேனர் ஸ்டிக்கர் கலாசாரமா ?
தமிழ் வழி கல்வி வேலைவாய்பப்பு தரா தமிழக அரசா ?
ஆங்கிலப்பள்ளியால் பணம் கொள்ளை யடிக்கும் தலைவர்கள் அரசியல் வாதிகள் பள்ளிகளா ?
உடனடியாக அனைவரும் சமம் திறமைக்கும் பொருளாதார நிலைக்கும் வசதி வாய்ப்பு தராமல்
அரசுப்பள்ளிகள் மூடவைத்து தனியார் பள்ளிகள் அதிகரிக்கச் செய்து வரும் சூழ்ச்சி ஏன்?
தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்க ஏன் அரசு வலியுறுத்தவேண்டும்.
அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது தானே அரசாங்கம் சொல்ல வேண்டும்
அதை விடுத்து தனியார் பள்ளியில் இருபது சதவீதம் சேர்க்க வேண்டும் என்பதும் ஏன் சேர்க்கவவில்லை என்பதும் மக்களை ஏமாற்றும் கலை.
அரசு மருத்துவ மனை தனியார் மருத்துவ மனை .
மக்கள் சிந்திக்க வேண்டும்.
எத்தனையோ பட்டதாரிகள் இலவசமாக கல்வி அளிக்கத்தயார்.
பணக்காரர்கள் தான் பள்ளி நடத்தவேண்டும் என்றநிலையில்
ஏன் சட்டம். பினாமிகள் தான் நடத்தவேண்டும் என்ற சுயநலம்.
அனைவரும் கற்கலாம் அனைவரும் பள்ளிநடத்தலாம். குறிப்பிட்ட வயதில் அரசுத்தேர்வு எழுதலாம் என்று சொன்னால் கல்வி வளரும்.
ஒரு வளைவு கட்டி இடிக்க பலகோடி முடியும் என்றால் கிராமங்களை குடிசை இல்லாமல் செய்முடியாதா ?
ஓட்டு வாங்கனும் .?
கருவேலமரம் ஒழிக்கும் திட்டம் கொண்டு வந்தால் பல விளை நிலங்களை உண்டாக்கலாம்.
வீடுதோறும் கட்டாயம் முருங்கை மரம் வளர்க்கலாம்.
லஞ்சமின்றி தண்ணீர் இனணப்பு இல்லை
லஞ்சமின்றி பத்திரப்பதிவு பட்டா இல்லை.
பட்டா இன்றி நில விற்பனை மட்டும்
ஏன் ? விற்பனை செய்யலாம்
வாங்கலாம் ஆனால் பட்டா வாங்கனும் . இதை ஒரே துறையாக்கலாம்
பணம்பணம் பணம்
நிச்சயம் மரணத்தை பணம் வைத்து
வெல்லமுடியாது.