யார் குற்றம்?
அதிகமான அரசுப்பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் கிடையாது.
கழிப்பிட கட்டடங்கள் இருந்தாலும் சுத்தமாக இருக்காது.
சுத்தமாக தண்ணீர் வசதி இருக்காது.
நீர்வசதிகள் இருந்தாலும் மாணவர்கள் சிலரின் ஒழுங்கீனத்தால்
குழாய்கள் உடைக்கப்பட்டிருக்கும்.
தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கும்.
மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.
ஆண்டுத் தேர்வின் இறுதிநாளன்று,பள்ளியின் பொது சொத்துக்களை பாழ்
படுத்துவதில் மாணவர்களுக்கு வரும் ஆனந்தம்,ஆசிரியர்கள் படும் அல்லல் ,
இதைப்பயன் படுத்தி குளிர் காயும் ஆசிரியர்கள் ,ஊழியர்கள்.
சிலர் மாணவர்களின் இந்த செயல்களை வேடிக்கை பார்க்கும் காட்சிகள்.
மீண்டும் மராமத்து வவுச்சர்கள் எழுதுவதில் காட்டும் தாராளம்.
இக்காட்சிகள் பள்ளிகளில் மட்டுமல்ல;
பொதுக்கழிப்பிடங்கள்,பொது குடி தண்ணீர் வசதிகள் செய்யப்பட இடங்கள்,ஆலயங்கள் அனைத்து இடங்களிலும் காணப்படும் அவலங்கள்.
ஆயுள் காப்பீட்டு 14 மாடி கட்டட மாடிப்படி ஓரங்களில் வெற்றிலை பாக்கு
மென்று துப்பி ய எச்சல் . அதுவும் மிகவும் படித்து பலரைக் கவர்ந்து பிரிமியம்
பெற்று வரும் முகவர்கள் என்ற அறிவு ஜீவிகள் செய்வது.
இதெல்லாம் யார் குற்றம் .
அடிப்படைதவறுகள் எங்கு ஏற்படுகின்றன.
விடுதலை அடைந்து பல
ஆண்டுகளுக்குப்பின்னும் பொதுச்சொத்து
நம் சொத்து .அதை சேதப்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வு வராததற்குக்
காரணம் முறையான கல்வி இல்லை என்பதாலா?
அரசியலா? இயற்கை யான பண்பா/?!!
பூனா ,முபாய் சென்றால் ஒரு காலடி எடுத்துவைத்து நடந்தால் எவ்வளவு
கவனமாக இருந்தாலும் பாண்-பராக் எச்சியை மிதிக்காமல் நடக்க முடியாது.
ஆலயங்களில் குறிப்பாக திருவண்ணாமலை,பழனி போன்ற பெரும் திரளாக
பக்தர்கள் வரும் இடங்களில் கழிப்பிடம் என்பது மிகவும் மோசமாக
இருக்கும்.காரணம் போதிய கழிப்பிடங்கள் இல்லை
.
;இருக்கும்கழி ப்பிடங்களையும் பக்தர்களோ சுய நல வாதிகளோ
சேதப்படுத்தி இருப்பார்கள் .இக்கோவில்களுக்கு கோடிக்கணக்கான
வருமானம் .
மதுரை,சென்னை போன்ற நகரங்களில் போராட்டம் என்றால்
அரசு பேருந்துகளை சேதப்படுத்துவதுதான் முதலில் நடக்கும்.
இந்த பேருந்துகளைத் தாக்குவது அரசியல் கொடிகள் வைத்துள்ள
கும்பல்களும் அதை பயன்படுத்தி கொள்ளை அடிக்கும் சமுதாய
விரோதிகளும் தான்.அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுத்தால் மீண்டும்
இச்செயல்கள் நடக்காது.ஆனால் அதில் அரசியல் புகுவதால் ,
ஒரே குற்றங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன என்பதில் சற்றும்
ஐயமில்லை.
மக்கள் மனதில் மன மாற்றம் தேவை.
பொதுச்சொத்துக்களை ,பொது இடங்களை சேதப்படுத்த மா ட்டோ ம் என்று.
மி ன் சார பல்புகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அடிக்கடி உடையும்.
ஒரு முறை இச்செயல் அடைந்ததும் கண்காணித்து கடும் தண்டனை
அ ளித்தால் அந்த இடத்திலேயே மீண்டும் நடக்காது.
அந்த இடங்களில் அமோகமாக பல சட்ட விரோத செயல்கள் நடக்கும்.
ஒரு ரவுடியோ திருடனோ பல முறை சிறை செல்ல ஆசைப்படும் அளவுக்கு
நமது நாட்டின் தண்டனைகள் உள்ளது வருந்தத் தக்கது.
ஒரு ரவுடி ஒரு வழக்கறிஞரையோ/காவல் துறையினரையோ அறைந்து
விட்டு நான் உள்ளே சென்று விட்டு ஓரிரு மாதங்களில் திரும்பி வ ந்து
விடுவேன். சட்டம் உன்னை எப்படி பாதுகாக்கும் /என்னை என்ன செய்து
வி டும்.??
என்கின்ற அளவிற்கு தண்டனைகள் மலிவாகி விட்டன.
பொருள் சேர்ந்தால் குற்றங்கள் பொருளற்றதாகி விடும்.
பொறுக்கிகள் காவலதிகாரிகளை அடித்து
நாயகனாவது தான் இன்றைய திரைப்பட கதைகள்.