வியாழன், மே 03, 2012

education

அன்பு  அறம் அகலா சமுதாயம்.ஆனந்தமுள்ள  ஆற்றல்  மிக்க சமுதாயம்.
படித்து  பணம் சம்பாதிப்போரால் முடியுமா?
கற்றோர்  கற்ற கல்வி குறைந்த சிலவானால்
கடமை சேவை அன்பு அறமாகும்.
கல்லூரியில் சேரவே லக்ஷங்கள் கறுப்புப் பணமானால்,
கள்ளக் கணக்கு,அநீதிக்கான வழக்கு ஆடல்.
குறுக்குவழியில் பணம் தேடல் என,
சமுதாயம் ஒரு சாபக்கேடாகும்.
கற்றோரால் தான் வருமான வரி  குறைப்பு.
சட்டத்தை ஏமாற்ற வழி  காட்டுதல்.
லக்ஷங்கள் சிலவு செய்து மருத்துவரானால்
சேவை லட்சியங்கள் பறந்தே போகும்.
பரந்த மனப்பான்மை குறுகிப்போகும்/
கட்டணங்கள்  கல்விக்கே அதிகமானால்
கடன் சுமைகள் அதிகமாகும்.
பெற்றோர் கடன்,தன கடன்
என்ற நிலை தன்னிலை  மறக்கச்செய்யும்.
ஐந்தாண்டில் செலவு செய்யும் பணம்
தேடும் அரசியல் வாதிக்கும்.
கல்விக்கு  முதலீடு செய்த கல்வி  பயின்றவனுக்கும்
முதலீடு செய்து கல்வி நிறுவனங்கள் ,கடைகள்
நடத்துவோருக்கும்  வேறுபாடு வெளிச்சமாகும் .
ஏழைகள் வாழ அருகதை இல்லை என்ற நிலை
உண்மையாகும்.


  

school fee and public

நானூறு  பள்ளிகள் தொடர்ந்த வழக்கில்  15% கட்டணம் அதிகம்  வசூலிக்க நீதிமன்றம் அனுமனுமதித்து உள்ளது.
அரசியல் வாதிகள் மிகவும்  சாமார்த்திய சாலிகள்.
மேட்ரிக்  பள்ளிகளுக்கு காட்ட அனா விதி அமைத்து விட்டு
அரசியல் தலைவர்களின் பள்ளிகளை மத்திய அரசுப்  பள்ளிகளாக  அங்கீகாரம்
பெற்று நடத்தும் இரட்டைவேடம். மக்களை கல்வி விஷயத்திலும் ஏமாற்றும்
c.b.s.e. பள்ளிகள்.சமசீர் கல்வி என்பது சீர் படுத்த வேண்டுமானால்  கல்வி என்பது ஒரே வாரியமாக மாற்றவேண்டும்.

இப்பொழுது இந்தியாவில்  இருக்கும் கல்வி வாரியங்கள்.

C.B.S.E., I.C.S.E., STATE BOARD., MATRIC., ANGLO INDIAN. ORIENTAL SCHOOL.,INTERNATIONAL SCHOOL.

THANIYAAR PALLIKAL; தனியார் பள்ளிகள் :
சிறு பான்மை ;பெரும்பான்மை;
இதில் ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு,பதவி முன்னேற்றம்,விடுப்பு எடுப்பதில் 
சலுகை அனைத்திலும் பாரபட்சம்.
சிறுபான்மை பள்ளிகளில் அந்த மதம் சார்ந்தவர்கள் தான் அரசு உதவி பெரும்
பள்ளிகளில் கூட தலைமை ஆசிரியராக முடியும்.

சிறுபான்மை  சலுகைகள் பெரும்பான்மை பள்ளிகளுக்கு கிடையாது.

கிட்டத்தட்ட மாநகரங்களிலும்  சிற்றூர்களிலும் அரசு அரசு உதவிபெறும் பள்ளிகள் எண்ணிக்கை குறைந்து
 கொண்டே  ஆசிரியர்கள் -மாணவர்கள்  மூடும் நிலை .

ஒரே  கட்டடத்தில் c.b.s.e., matric.,arasu udavi perum pallikal.
மற்றொரு கேலிக்கூத்து.
20%சதவிகிதம் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு.
ஒரு எழுதும் பொருள் ரூபாய் 2/--முதல் 500 வரை.
கால் சூக்கள்  50 ரூ.முதல் 2000/ வரை
குறிப்பேடுகள்  தரத்திர்கேற்றவாறு.
ஒரே வகுப்பறையில்  ஒரே பெஞ்சியில்  சீருடை துணி முதல் குறிப்பேடு 
வரை ஏற்ற தாழ்வு. தந்தை தாய் படும் வேவேதனை  வர்ணிக்க முடியுமா./
கல்வி விளையாட்டு கண்ணீர் வடிக்கவே,
அரசின் போலி நாடகம் மக்கள்  கஷ்டம்  எப்போது  தீரும்.
பொருளாதார ஏற்றத்  தாழ்வு  உள்ள நாட்டில்  சமச்சீர் கல்வி ,கட்டணம் ,
என்ற நாடகம் சரியல்ல.
கல்வி  என்பது ஒரு நாட்டின் ஜீவநாடி.
அதில் பணம் நாடி ஓடுவதால் அது ஒரு புற்று நோயாகும்.
பணம் இல்லையேல் படிப்பில்லை என்பது  அரசுக்கல்வி அதிகாரிகளின் மனச்சாட்சிக்கு 
விட்டுவிடுகிறேன்.


educational system.

 தான் பெற்ற அறிவை ,கற்ற கல்வியை மற்றவர்கள் அறியும் வண்ணம்
 எடுத்துக் கூறுவதுஒரு கலை
எல்லோராலும் அதை மற்றவர்கள் புரியும் வண்ணம்
 விளக்குவது என்ற தனித் திறமையால்  ஆசிரியர்கள் மாணவர்களின் மதிப்பைப் பெறுகிறார்கள்
.என் அனுபவத்தில்  அத்தகைய  ஆசிரியர்கள்  எண்ணிக்கையில் 
குறைவு தான்.
மிக அறிவுத்திறன் கொண்ட ஆசிரியர்கள் தனது சொல்வன்மை
 திறன் குறைவதால் ஆசிரியர்கள் இறைவன் வரத்தால் பிறவியிலேயே அந்த 
திறன் வரவேண்டும்.

ஆசிரியர் பயிற்சி பெறாத எத்தனையோ பேர் நல்ல
 ஆசிரியர்களாகப் பாராட்டபடுகின்றனர்.
கால மாறு பாட்டிற்கேற்ப ஆசிரியர்கள்  தன் கற்பித்தல்  முறையை 
மாற்றிக்கொள்ள வேண்டும்.
நமது கல்வி .முறை மனப்பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
பாடப்புத்தகத்தில் உள்ள சொற்கள் மாறினால் மதிப்பெண் குறைகிறது.
இந் நிலை மாறி சொந்த வாக்கிய சொல் அமைப்பு எழுதும் மாணவர்கள் திறமை
 போற்றப்பட  வேண்டும்.
மாணவர்கள் ஆர்வம்,திறமை,அறிந்து கல்வி தரப்பட வேண்டும்.
எனது நண்பன் ஒருவன் ஒரு பாடத்தில் பள்ளியல்  முதல் மாணவன்.ஆனால் அவன் தேர்ச்சி பெறாததால் அவன் பாராட்டப்படவில்லை.
அவனுக்கு அந்த பாடத்தின் மதிப்பெண் படி பரிசு தரவேண்டும்.
இத்தகைய கல்விமுறை  தனித் திறனுக்கு மதிப்பளிப்பதில்லை.