நீயா -நானா
கலைக் கல்லூரி மாணவர்கள் - நடத்துனர்-பேராசிரியர்-பெற்றோர்கள்.
கல்லூரி அது கலைக் கல்லூரிகள் ,
அடிதடிக்கென கல்லூரி,
அறிவுக்கு என கல்லூரி,
பணம்படைத்தோருக்கு ஒரு கல்லூரி,
அடிப்படைவசதிகள் இல்லா கல்லூரி,
கல்லூரிகளுக்கு ஒரு ரூட் தலை,
சுதந்திர நாட்டில்,
ஒரு கல்லூரி மாணவர்கள் ஏறும்
பேருந்தில் வேறு கல்லூரி ஏறினால்
அடிதடி.
வேறு கல்லூரி மாணவர்கள்
ஒருகல்லூரி மாணவர்கள்
ஏறும் பேருந்து நிலையத்தில் நின்றால்
அடிதடி.
தீண்டாமைவிட இது பெரும் கொடுமை
நடுத்தர மக்கள் ,மனக்கவலை மறக்க,
அழகுதேவதைகளைக் கண்டால்
காளை வயதில் கலாட்டா.
வயிற்றுப்பசி மறக்க கானாப்பாட்டு.
ஒரு கல்லூரிக்கு ஒருவகை தாளம்.
மாணவர்களிடை கல்லூரி பேதம்.
சிறப்பு விருந்தினர்
பிடித்த பாடம் உள்ள கல்லூரி
பிடித்த கல்லூரி. வேறு வேறு.
பிடித்த கல்லூரியில் அழகுதேவதைகள்
நடமாட்டம்.
நானூறு மாணவர்கள் நாலாயிரத்தில்.
தொலைந்து போனவர்கள்.
காதல்,ஜாதி,இனம்,கல்லூரியில் வெளி ஆட்கள்
நுழைதல். இது பல்லாண்டு நடைமுறை.
அடியாட்கள் நுழைந்து அடித்தல்.
அரசியல் சுயநலத்தின் உச்ச கட்டம்.
சட்டக்கல்லூரியில்
காவலர் முன்னிலையில்
மாணவனை தடியால் அடித்த காட்சி,
பேருந்து நிறுத்தம் விட்டு கல்லூரிக்குள்
பேருந்தை நிறுத்த மிரட்டல்.
அறிமுக அட்டை காட்ட மறுத்தல்,
வழுக்கைத்தலை என்று நடத்துனரை அழைத்தல்,
எல்லாம் மூன்றாண்டுகள் தான்.
இது ஒரு தொடர் கதை.
அடிதடியுமிருக்கும்.
காதல் விளையாட்டுகளும் இருக்கும்.
அப்பொழுதான் எங்களுக்கு மரியாதை ;அங்கீகாரம்;
அடிதடிக்கு காரணம் தெரியாது.அது என் அப்பா காலத்தில் இருந்து தொடர் கதை.
வருத்தமான விஷயம்
பெரும்பாலான மாணவர்கள்
பகுதிநேர பணிக்கு செல்வது.
சாதிப்பிரச்சனை.
67 ஆண்டு சுதந்திர நாட்டில்
அன்பு,சமாதானம்,சகோதரத்துவம் ,
வளரவில்லை.புலன் அடக்கம் வளரவில்லை.
ஏழை-பணக்கார மாணவர்கள்
ஏற்றத்தாழ்வுகள்;
ஏ ங்கும் மாணவர்கள்.
அடிதடி மனப்பான்மை மாற்றா சமுதாயம்.
அதில் மேலைநாட்டை
விட நம்நாட்டில் 4%.தான் கலா ட்டா .
பரவாயில்லை ஒரு பெண்ணின் கூற்று.
மாணவர்களே!
அன்பாய் இருங்கள்.
அனைத்துக்கல்லூரி மாணவர்களும் நம்
சகோதரர்கள் என்று பாவியுங்கள்.
அடிதடி வேண்டாம்.
பெற்றோர்களைப் பற்றி சிந்தியுங்கள்.
நாடாளும் ஆற்றல் உங்களுக்கு.
நூல்நிலையத்தில்
படியுங்கள்.
காதல் தேவதைகள் காண உலகை விட்டு
நிஜ உலக நினைவில்
முன்னேறுங்கள்.
அறிவு உண்டு; ஆற்றல் உண்டு;
அரியர்ஸ் இருந்தால் ஹீரோ,
என்ற எண்ணத்தை மாற்றுங்கள்.
கல்லூரி ஆசிரியர் சொன்னதுபோல்
உங்கள் திறமை ,ஆற்றல் ,
அன்பை வளர்க்கட்டும்;ஆற்றல்
நாட்டை வீட்டை மேம்படுத்தட்டும்.