செவ்வாய், டிசம்பர் 31, 2013

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


அவனி முழுதும் ஆங்கிலப் புத்தாண்டு
ஆனந்தமாக ,பூஜை பஜனையுடன்
வரவேற்கும் நாம் , வளம் பெறுகிறோம்
பொருளாதார ரீதியில்.
ஆங்கிலமின்றி அவனியில் வாழ ,
வழியில்லை வேறு.
நட் என்றும்,போல்ட் என்றும்
பிட் என்றும் பிகர் என்றும்
டிரெஸ் என்றும் ரோடு என்றும்
நடு சென்டர் என்றும் ஷாப் கடை என்றும்
டைம் என்று பேசியே தனிதமிழ் இயக்கம்
வளர்ந்த நாட்டில் வொய் திஸ் கொலைவெறி
ரசிக்க ஆரம்பித்துவிட்டோம்.
இப்படியே வளம் பெற்றாலும்
அரைகுறை ஆடை,ஆட்டம் ,போதை
நடு ரோட்டில் ஆட்டம்,முத்தம் ஆலிங்கனம்
என்ற அநாகரீகம் ,பண்பற்ற ,ஒழுக்கமற்ற செயல்
தவிர்த்தால் விலங்கிலிருந்து வேறுபடுவோம்.
ஆங்கிலம் அறிவைத்தந்து ஆற்றலைத்தந்து ஆஸ்தியைத்தந்து
அவனை சுருக்கி இனவெறி ,மதவெறி,அனைவருக்கும் கல்வி என்று
உணர்த்தினாலும் பெற்றோரை மதியாமை,அமைதியற்ற குடும்பவாழ்க்கை ,ஒருவர் மற்றவரை மதியாமை
விவாகரத்து,தற்கொலை என்ற படித்து பட்டம் பெற்றாலும்
பண்பற்ற செயல்கள் அங்கெங்கு தலை தூக்குவதால்
தாய்மொழி அறிவுரை நட்சத்திரம் மினுமினுக்குதே என்ற பாடலுடன்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
மாதா பிதா குரு தெய்வம் ,ஆறாம் செய விரும்பு என்பதையும்
நினைவில் வைத்து இந்த ௨௦௧௪ புத்தாண்டை
ஆனந்தத் துடன் கொண்டாடுவோம்.
ஸ்பீட் தேவை அதில் ஆக்ஸிடென்ட் தடுக்க
தாய் நாட்டு புத்தாண்டுக்கு தாய் மொழிக்கு அதிகம்
இம்பார்டன்ஸ் கொடுப்பதும் தேவை.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.