பணம்!பணம்!பணம்!
பாரில் வாழ பணம் .
புண்ணியம் செய்ய பணம்.
பாவங்கள் செய்ய பணம்.
பாவங்கள் தீர்க்கப் பணம் -மன ஆசைகள்
பூர்த்தி செய்ய பணம்..
பூஉலக வாழ்க்கைக்கு
பெருமை சேர்த்திட பணம்.
பேருண்மை மறைத்திட பணம்.
பேராண்மை பெற்றிட பணம்.
பதவிக்குப் பணம் .
பட்டத்திற்குப் பணம்.
பட்டத்திற்கும் பணம்.
பரதேசிக்கும் பணம்.
பரதேசம் போகவும் பணம்.
பிணி அகற்ற பணம்.
பிணிவர பணம்.--
பொருளுள்ள வாழ்க்கைக்குப் பணம்.
பொருளற்று மது,மாது,என்று வாழவும் பணம்.
பொறுக்கும் பணம்,
போருக்கும் பணம்.
இறுதிச் சடங்கிற்கும் பணம்.-ஆனால்
உயிர்காக்க முடியாத பணம்.
முதுமையைத் தடுக்க முடியாத பணம்.
நரைமுடியைத் தடுக்காத பணம்.
பௌர்ணமி போன்று வரும் பணம் -தேய்பிறையாக
வாழ்க்கையில் அமாவாசை போன்று
வரும் இன்னல்கள்,விபத்துக்கள்,அகால மரணங்கள்
வராமல் தடுக்க முடியா பணம்.
மமதை தரும் பணம்;
பேராசை தரும் பணம்.
நல்லதை மெதுவாக ,
தீயதை விரைவாக செய்யும் பணம்.
பணம் உள்ளோர் பாரினில் விரைந்து மறக்கப்படுவார்.
உயர் குணம் உள்ளோர் பாரினில் என்றும் வாழ்வார்.
உத்தமனாக இரு இது என்றும் வாழும் சொல்.
பக்தர்கள் வாழ்கின்றனர்;
சித்தர்கள் வாழ்கின்றனர்--பணப்
பித்தர்கள் வாழா நிலை.
ஆதி சங்கரர் வாழ்கிறார்;
ரமணர் வாழ்கிறார்;
அல்லா வாழ்கிறார்;
இயேசு வாழ்கிறார்;-பாரில்
நல்வழிகாட்டுவோர் என்றும் எந்நாளும்
வாழ்கின்றார்கள்;
சொத்து சுகம் வேண்டாம்
பூஜைப்ப்பொருள் போதும் என்ற
தியாகராஜர் வாழ்கிறார்;--பணப் பித்தர்கள்
எங்கே வாழ்கின்றார்?
பெண் பித்தர்கள் எங்கே வாழ்கின்றார்.?
இறந்தும் வாழ்வார்கள் பணப் பித்தர்கள் அல்ல;
குணம் என்ற பொருள் படைத்தோரே வாழ்வர்
பாரில் வாழ பணம் .
புண்ணியம் செய்ய பணம்.
பாவங்கள் செய்ய பணம்.
பாவங்கள் தீர்க்கப் பணம் -மன ஆசைகள்
பூர்த்தி செய்ய பணம்..
பூஉலக வாழ்க்கைக்கு
பெருமை சேர்த்திட பணம்.
பேருண்மை மறைத்திட பணம்.
பேராண்மை பெற்றிட பணம்.
பதவிக்குப் பணம் .
பட்டத்திற்குப் பணம்.
பட்டத்திற்கும் பணம்.
பரதேசிக்கும் பணம்.
பரதேசம் போகவும் பணம்.
பிணி அகற்ற பணம்.
பிணிவர பணம்.--
பொருளுள்ள வாழ்க்கைக்குப் பணம்.
பொருளற்று மது,மாது,என்று வாழவும் பணம்.
பொறுக்கும் பணம்,
போருக்கும் பணம்.
இறுதிச் சடங்கிற்கும் பணம்.-ஆனால்
உயிர்காக்க முடியாத பணம்.
முதுமையைத் தடுக்க முடியாத பணம்.
நரைமுடியைத் தடுக்காத பணம்.
பௌர்ணமி போன்று வரும் பணம் -தேய்பிறையாக
வாழ்க்கையில் அமாவாசை போன்று
வரும் இன்னல்கள்,விபத்துக்கள்,அகால மரணங்கள்
வராமல் தடுக்க முடியா பணம்.
மமதை தரும் பணம்;
பேராசை தரும் பணம்.
நல்லதை மெதுவாக ,
தீயதை விரைவாக செய்யும் பணம்.
பணம் உள்ளோர் பாரினில் விரைந்து மறக்கப்படுவார்.
உயர் குணம் உள்ளோர் பாரினில் என்றும் வாழ்வார்.
உத்தமனாக இரு இது என்றும் வாழும் சொல்.
பக்தர்கள் வாழ்கின்றனர்;
சித்தர்கள் வாழ்கின்றனர்--பணப்
பித்தர்கள் வாழா நிலை.
ஆதி சங்கரர் வாழ்கிறார்;
ரமணர் வாழ்கிறார்;
அல்லா வாழ்கிறார்;
இயேசு வாழ்கிறார்;-பாரில்
நல்வழிகாட்டுவோர் என்றும் எந்நாளும்
வாழ்கின்றார்கள்;
சொத்து சுகம் வேண்டாம்
பூஜைப்ப்பொருள் போதும் என்ற
தியாகராஜர் வாழ்கிறார்;--பணப் பித்தர்கள்
எங்கே வாழ்கின்றார்?
பெண் பித்தர்கள் எங்கே வாழ்கின்றார்.?
இறந்தும் வாழ்வார்கள் பணப் பித்தர்கள் அல்ல;
குணம் என்ற பொருள் படைத்தோரே வாழ்வர்