ஒரே குரல் ஒலிக்கவில்லை .ஏன் ?
ஹிந்து தர்மத்தில் ஒரே குரல் ஒலிக்காதது ஏன் ?என்று ஒருவர் கேட்டதில்
இருந்து பல எண்ணங்கள் /சிந்தனைகள் மனதில் தோன்றிக்கொண்டே
இருக்கின்றன.
கோரி முஹம்மது,கஜினி முஹம்மது படை எடுப் பின் போது ஒற்றுமை
உணர்வு இருந்ததால் பல முறை கொள்ளை அடிக்கப்பட்டாலும் காசி மாநகரம்
காக்கப்பட்டது.
நமது இலக்கியங்கள் ,வரலாறுகள் நமது நாட்டின் ஒற்றுமை இன்மையை
காட்டுகின்றன.வரலாறு என்பது இன்றைய சூழலில் நம்மை உயர்த்த
,சிந்தனை நமது வீழ்ச்சியின் காரணங்கள் அறிந்து எழுச்சி பெற உதவும்
காலக் கண்ணாடி.
ஹிந்தி இலக்கிய வரலாறு நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு
இலக்கியங்கள்
சமுதாயத்தின் பிரதிபலிப்பாக விளக்கப்பட்டுள்ளது.
அதில் முதல் பிரிவு வீர காப்பியங்கள்.
வீரகாப்பியங்கள் தோன்றிய காலத்தில் எவருக்குமே நாட்டை பற்றிய
அக்கறை கிடையாது.கவிஞர்கள் அரசனை சார்ந்து வாழ்ந்தனர்.
அவர்கள் நோக்கமே "உணவு அளிப்பவர்களின் உள்ளம் மகிழ கவிதை பாடுவதே".
அழகிய அரசகுமாரிகளின் அழகை வர்ணித்து
அரசனின் வீரம்,வலிமை,சக்தி ,சாகசம் போன்றவற்றைப்
புகழ்ந்து ,அவன் மனதில்
வீரத்தையும் ,அரசகுமாரிகளின் மீது மோகத்தையும்
அதிகரித்து போரிடத்தூண்டுவதே.
மேலும் ஒரு சிறப்பு புலவர்களே புரவலர்களின் படைத் தளபதியாக இருந்ததே.
அரசனின் எண்ணம் முழுவதையும் ,நோக்கம் முழுவதையும் அரசகுமாரியை அடைவதே.
போர் என்பது நாட்டின் நலனுக்காக அல்ல;
.நாட்டின் எல்லையை விரிவு படுத்துவதற்காக அல்ல;
,அழகிய அரசகுமாரியை கவர்வதே.
இந்த இலக்கியங்களுக்கு இடையில் சில பக்தி இலக்கியங்களும் தோன்றின.
அனால் தற்காலம் போன்றே பக்தி இலக்கியங்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்படவில்லை.
(தொடரும் )