இந்திய அரசியல்.
தடி எடுத்தவன் தண்டல் காரன்.
இன்று பணம் என்ற தடி கொண்டவன்
அரசியல்வாதி ;மக்கள் பிரதிநிதி;
மக்கள் வரிப்பணம் அதையே இலவசமாக
வழங்கி வாக்குப் பெரும் அரசியல் தந்திரம்;
அம்மா உணவகம் நல்ல திட்டம்;
ஆலயங்களில் அன்னதானம் உயரிய திட்டம்.
கல்விக்கொடங்களில் இலவசங்ககள்;
அனைத்தும் உயரிய திட்டங்கள்;
பாராட்டப்பட வேண்டியவைகள்;
அரிசிகார்டுக்கு இலவசம் ;
சர்க்கரை கார்டுக்கு கிடையாது.
ஒய்வு பெற்ற முதியோர்கள்,
வருமானம் இழந்தோர்
எத்தனையோ பேர்
அன்றைய சூழலில் சர்க்கரை அட்டையாக மாற்றியோர்,
அன்றைய அரிசி அட்டை,
இன்று பணவசதி கொண்டோரிடம்,
இலவசங்கள் ஏழைகளை சென்றடைவதில் எத்தனையோ
ஊழல்கள்; சிக்கல்கள்;
ஒரே வீட்டிற்கு இரண்டு மூன்று இலவசங்கள்;
இதற்கு ஒரு விசாரணை குழு போட்டால்
இலவச விநியோக முறைகேடுகள்;
விசாரணைக் குழுக்கள் அறிக்கை வெளிவராது;
சொத்துக்குவிப்பு வழக்குகள் போல்;
பல விசாரணைக்குழுக்கள் ,பல அறிக்கைகள்
மீண்டும் கருணை அல்லது ஜெயா;
வேறு மாற்று வழியில்லை
தமிழக மக்களுக்கு;
என்று ஏற்படுமோ விழிப்புணர்வு;
என் காலம் முடியும் நேரம்;
விழி த்து க் கொள்ளுமா
இளைய சமுதாயம்;
பணத்திற்கும் ,இலவசத்திற்கும்
விலைபோகுமா ,
விலைமதிப்பில்லா வாக்குரிமை.
பாரதி இருந்தால் பாடி இருப்பான்.
என்று தணியும் இந்த இலவச மோகம்,
என்று தணியும் நேர்மையின் தாகம் .