சனி, டிசம்பர் 07, 2013

மறக்கப்பட்டது

அறச் செயல்
 அறம்  செய விரும்பு.
ஆறுவது சினம்.
இன்றைய மழலைகள்
திரைப்பட பாடல்கள்  பாடுகின்றனர்.
அவர்கள் சினம் ஆறாமல் வளர்கின்றனர்.
சிறுவயதிலிருந்தே ஆண் /பெண் நண்பர்கள்
அவன் பிரண்ட் /நான் லவ் பண்ணலை
மூன்றுவயதுக்  குழந்தையின் மழலைப்பேச்சு.
அதை ரசிக்கும் பெற்றோர்கள்/உறவினர்கள்.
விளைவு மணநாளன்று  மணமகள் ஓட்டம்.
அனைத்து ஏற்பாடுகள், மண மேடை அலங்காரம்,
திருமண மண்டப முன் துகை,
மேளதாள ஏற்பாடு,
சமையல் ஒப்பந்தக்காரர்,
என பெற்றோர் செய்யும் சிலவுகளை
மௌனமாக  பார்த்துவிட்டு ஓடும் மகன்,மகள்.
இந்த சமுதாய அவலம் .
இதற்கு அதரவு,எதிர்ப்பு,
அடிப்படை கொலை,தற்கொலை ,கைபேசி ஆபாசப்படங்கள் ,
மிரட்டல்கள்.
பலன்  அமைதி இல்லா வாழ்க்கை.
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்
நோ பீஸ் ஆப் மைண்ட்.
இதில் மற்றொரு அவலம் அனைவரும் பட்டதாரிகள்.
மாடியிலிருந்து குதித்து தற்கொலைகள்.
சேர்ந்து வாழலாம் திருமணமின்றி,
பெற்ற குழந்தைகளை அரசு பிராமரிக்கட்டும்----_
!!!உச்ச நீதிமன்றம்.!!!
சின்னத்திரையிலோ ஒருவர் இரு காதலிகள்.
வஞ்சம்.ஏமாற்றம் துரோஹம்.
காதல் கட்டாயப்படுத்த அமிலவீச்சு,தூக்கமாத்திரை.
மணிக்கட்டு அறுத்துக்கொள்ளுதல்
இப்பொழுது  தற்கொலை செய்வதை

பலர் ரசிக்கும் படி
வலைக்காட்சி  . அறிவியல் கல்வியின் மறுமலர்ச்சி.
கல்வி முதுகலைப்பட்டம். பொறியியல் .
காதல் பொறி;கள்ளக்காதல் ,அதற்காக அடியாள் வைத்துக் கொலை.
கல்வி என்பது இப்பொழுது பணத்தை
 ஆதாரமாகவைத்துத்
திணிக்கப்படுகிறது. ஆணவம் அதிகமாகிறது.
பாசம் இல்லை; அன்பு இல்லை;பண்பு இல்லை;நேசம் இல்லை;
இயந்திர வாழ்க்கை. நிம்மதிக்கு போதை;
அதற்கு அரசு மதுபானக்கடைகள்.
அதன் வருமானத்தில் தான்
அரசு நல திட்டங்கள்.
தீயவழி வருமானம்.
அதனால் போடும் சாலைகள்
போட்ட வேகத்தில் பல்லாங்குழி.
தீயவழி வருமானம்.
அதில் கல்விக் கூடங்கள்.
அதுவும் மாணவர்கள் வராத பள்ளிகள்.
பல ஆசிரியர்கள்;சில மாணவர்கள்.
வரும் வருமானம் எப்படியோ அப்படியே வீண் சிலவுகள்.
நீதி கிடையாது,எல்.கே.ஜி.கே சிபாரிசு;கைஊட்டல் ;நன்கொடை;
பணத்திற்கு மதிப்பு;
இதில் அறம் செய விரும்பு இல்லை.
மீனைப்பிடி;விட்டுவிடு.
ஒன்னு,இரண்டு,மூணு,நாலு அஞ்சு.மீனைப்பிடி;
ஆர்,எழு,எட்டு ,ஒன்பது ,பத்து  மீனை விட்டுவிடு.
என் பேரனின் ஆங்கிலப்பாடல் பொருள்.
அருளற்ற ஆங்கிலக்கல்வி.
பூனையே!பூனையே!எங்கே போறே;
லண்டனுக்குப்போறேன் ராணியைப்பாக்க. மழலைப்பாடல்.
மாதா,பிதா ,குரு தெய்வம்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்  ஒலிக்கவில்லை;ஒளிரவில்லை;
ஆலயம் தொழுவது சாலவும் நன்று --இந்த அறவுரை அகற்றப்பட்டது.
ஒழுக்கம் இல்லா வளர்ச்சி;

 தற்கொலை;
 காவல் துறை அறிவிப்பு:
நடமாட்டமில்லா  மாடிகள் பூட்டப்படவேண்டும்.
மடிக்கணினிகள்  அனுப்பும் முகநூல்
 ஆபாசங்கள்.

மறக்கப்பட்டது:-
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து.