சனி, பிப்ரவரி 10, 2018

காதலர் தின சிந்தனைகள்

kaathalar thinam.
காதலர் தினம் என்பது பாரதத்தில்
புராணத்தில் , வரலாற்றில் வருகிறது.
அன்னம் விடு தூது.
இவை எல்லாம் சிந்தித்த பிறகு என் எண்ணங்கள்.
****************************
காதலர் தினம்.
நமது கலாசாரத்தை மாற்ற
கலப்புத்திருமணம்.
காதலர் தினம் என்று
இளைஞர்கள் இளைஞிகளை
திசை திருப்பும் ஊடகங்கள்,
ஆங்கிலக் கலாச்சாரங்கள்.
லவ் ஜிஹாத் அமைப்புகள்.
பணக்கார மேல் ஜாதிப்பெண்களைத்
துரத்தி கட்டாயக் காதல்,
பந்தயம் கட்டி காதல் ,
பந்தயம் கட்டி கற்பழிப்பு.
எங்கே நாம் சிந்தனையற்ற காதல்
செல்கிறது என்றே புரியவில்லை.
வள்ளி முருகன் காதல் ,
சிவன் தாக்ஷாயணி ,
ஆண்டாள் ,மீரா ,
என்ற தெய்வீகக் காதல்.
ஏமாற்றவே காதல் ,
ஏமாறும் காதல் ,
விரும்பி ஏற்று கூடல் புரிந்து
குழந்தை பெற்று பிரியும் காதல்.
வேலை செய்யும் பெண்ணைத் துரத்தி
திருமணம் செய்யும் காதல்
ஆசிட் காதல் ,
தற்கொலை ,கொலை மிரட்டல் காதல் ,
மறுபிறவி பார்த்திபன் பட கூலிக்கு
கற்பழிக்கும் காதல்,
சேது படக் காதல் ,
குண்டலகேசி காதல்.
இவைகளை ஆராய்ந்து
சமுதாயத்தைப் படிக்கும் போது
விவாகரத்து வழக்குகள்,
கள்ளக்காதல்,
குந்தி தேவி காதல்,
விசித்திரவீரியன் கட்டி முனிவர் மூலம் பிறந்த காதல்
கர்ணன் பிறந்த காதல்,
தலை சுற்றுகிறதா?
வாழ்தல், விரும்பும் போது
பிரிதல்
என்ற காதல் ,
இவ்வுலகில் காதலால்
உன்மத்த மாகிறது.
காதலிப்பவர்களுக்கு தைரியம் வேண்டும்.
ஒழிவு, மறைவு, ஓடிப்போய் திருமணம்
இருபதுவயதுவரை வளர்த்த பெற்றோர்கள் கதி?
எனக்குத் தெரிந்தவர் மகள்
கல்யாண மாப்பிள்ளை
அழைப்பு அன்று காதலனுடன் ஓட்டம்,
திருமணம் செய்துகொண்டு
காதலனுடன் சேர்ந்து கணவனைக்கொலை
இந்த இரண்டு சம்பவமும் இரக்கமற்ற
பெண்களின் மூடத்தனமான
காதலுக்கு எடுத்துக்காட்டு.
ஏமாற்றவே சிலர் காதலிக்கின்றனர்.
வசதியான இடத்துப் பெண்கள்,
வேலை செய்யும் பெண்கள் இவர்களைத் துரத்தி
திருமணம் செய்து மனைவி வருமானத்தில்
ஆனந்தமாக வாழ,
பிறகு நடக்கும் கொடுமைகள்,
ஆண்டவா! நீ தான் நல்ல அறிவைத் தரவேண்டும்.