புதன், பிப்ரவரி 06, 2013

இன்றைய சமுதாயம்

நான்  சிறுவனாக  இருந்த போது ,
பேசப்பட்ட நியாயம்  பொது.
இப்பொழுது பேசப்படுவது  தனி.
தனி வழியில் செல்லும் நியாயம்.
பொதுப்பணம் என்றாலே ,
தன்னலத்திற்கு எடுக்கவேண்டும் என்ற
என்பது பொது நியாயம் ஆகிவிட்ட காலம்.
பாலம் கட்டப்படுகிறது,
சாலை போடப்படுகிறது,
அரசு,மாநகர,நகர ஆட்சிப் பள்ளிகளில்
கட்டடம் எழுப்பப்படுகிறது.
தேர்தல் வருகிறது .
பள்ளிகள்,கோயில்கள் கட்டப்படுகின்றன
என்றாலே எவ்வளவு இதில் கொள்ளை
அடிக்கிறார்கள் என்பதே பேச்சு.
இது அரசர் காலப் பேச்சல்ல,
இன்றைய குடியரசு காலப் பேச்சு.
அரசர்காலம் என்பது நலம் அரச குடும்பத்திற்கே.
குடியரசு காலம்   அரசியல் வாதிகளுக்கே.
பணம் படைத்தொருக்கே