திங்கள், மே 14, 2012

NEEYAA-NAANAA-DEVOTIONAL INTERACTIONS.

பக் தி  என்பது  இறை அருள் என்பது

 இறைவனால் இயற்கையாக ஒருவனுக்கு உண்டாகும்

 வரப்ப்ரசாதம்.

இறை அன்பர்களின் வரலாறு இதை உணர்த்தும்.

புத்தர்,ஏசு ,நபி,சங்கரர்,ராகவேந்திரர்,சாய் பாபா அனைவரும்

 ஆன்மீக நெறி மார்கதரிஷிகள்.

அப்பர்,மாணிக்கவாசகர்,ஆண்டாள்,மீரா போன்றோர் ஆண்டவனைத்தவிர

வேறு எண்ணம் இல்லாமல் பித்தர்கள் போல்

 உலகில் வளம் வந்து பக்திப்பாடல்

இயற்றி வழிகாட்டியவர்கள்.

கபீர் ,துளசிதாசர் இருவரும் பெற்றோர் களால் ஒதுக்கப்பட்டு பக்தி

வழிகாட்டியவர்கள்.

கடவுள் பக்தர்கள் என்று கோடிக்கணக்கான பணம் சேர்க்காமல்

 விலை மதிப்பில்லா மனி த தத்துவத்தின் நெறி கலை அனைத்து யுகங்களின்

மக்களுக்கும் ஏற்றவாறு வழிகாட்டியவர்கள்.

  ஆனால்  அவர்கள் பெயரைச்சொல்லி அருள்வாக்கு என்ற பெயரில்,

 தீக்ஷை என்ற பெயரில்

ஆடம்பர பக்தியால் மக்களுக்கு

 ஒரு பீதி-பயம் ஏற்படுத்தி கோடிக்கணக்கில்


 சம்பாதிப்பவர்கள் இன்றைய ஆன்மீக வாதிகள்.


இதில் ஒரு மனோதத்துவ ரீதியான

அச்சத்தில் பாதிக்கப்படுபவர்கள்

அதிகமானவர்கள் இல்லத்தரசிகள்.

இறைவனின் தத்துவத்தை அறிய காடுகளில் குடில் அமைத்து எளிய

 உணவு உண்டு,இவ்வுலக சுகங்களை எண்ணாமல்

 இறைவனையே நினைத்து

இருந்தவர்கள் பக்தர்களா/?

இன்றைய மடாதிபதிகள் படுக்கும் படுக்கை பல லக்ஷங்கள்.

நவீன வசதிகள்,குளிர்சாதன வசதிகொண்ட அறைகள்,பளிங்கு மாளிகைகள்

இன்றைய சாமியார்கள்.வீடியோ கேமார வைத்தல் ஆஷ்ராமங்களின்

அட்டகாசங்கள் புரியும் என்று ஆதீனம் கூறும் அவலம்.

 அங்கிங்கு    எனாதபடி எங்கும் உள்ள இறைவன்

 உண்மை பக்தர்களுக்கு

இருக்கின்ற இடத்திலேயே அருள்புரிவான்.

மற்றதெல்லாம் தன சுகப்ஹோக வாழ்க்கைக்கு மக்களை மயக்கி

 பணம் பிடுங்கும் போலிகள்.வேட  தாரிகள்.

இந்த ஞானம் வந்தால் இறைவன் .குரு என்ற பெயரில்

 ஏமாற்றுவோர்   கூட்டம் குறையும்.

मन चंगा तो कटौती में गंगा।--மனம் பரிசுத்தமானால் கிண்ணத்தின் தண்ணீர் கங்கையாகும்.

कबीर--तेरा साई तुझमें ज्यों पुहपन में वास।-பூவில் மனம் உள்ளது போல் கடவுள் உனக்குள் இருக்கிறார்.

கடவுள் தூணிலும் உள்ளார் துரும்பிலும் உள்ளார்.

தவ வலிமையால் இறைவன் நம்மிடம் வரவேண்டும்.

அதற்கு ஆலயங்கள் முதல் வழிகாட்டி.

பக்தி சிகரத்தை அடைய படிகள்.

ஆலயத்தின் கொள்ளை ,ஏமாற்றுதல் தெரிய ஆலயம் செல்லுங்கள்

.
மிக முக்கியஸ்தர்கள்,தலைவர்கள்,பணக்காரர்கள் ஆகியோர் பெரும் /
முதல் மரியாதை.
ஒரு தேங்காய் ,இரு பழங்கள்,இரு வெற்றிலை,ஒரு பாக்கு,சிறிது பூ,ஓர் 
30 ரூபாய்..
தரிஷன டிக்கட்டுகள்.

அதிலும்  சீட்டு வாங்கிய பின் கையூட்டு கொடுத்து

முதலில் செல்லும் பக்தர்கள்.

வரிசைவரிசையில் தள்ளுமுள்ளுகள்.

அங்கு சென்றால் இதை எல்லாம் பார்த்து ஆள் மனதில் சிந்தித்தால் 
மனம் பக்குவப்படும்.
அதனால் தான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றனர்.

கோபுர தரிஷனம் கோடி புண்ணியம்.பாலியல் கல்வி.

அங்கு நடக்கும் அராஜகங்கள் பணம் இல்லா பக்தர்கள் படும் அவமரியாதை

பணம் கொடுத்தல் நின்று தரிஷன். இல்லை எனில் தள்ளுதல்.

பெண்களே! சிந்தியுங்கள்.ஆண்களை வேதனைப்படுத்தி சபலத்திற்கு

இழுத்துச்செல்லும்


முழங்கை இடி தேவையா?.