வெள்ளி, அக்டோபர் 05, 2012

எல்லாம் பழனி ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

தமிழ்  நாட்டில்  தண்ணீர்  பஞ்சம். ஏன் ?


       எனது சொந்த ஊர் பழனி. அங்கிருக்கும் வையாபுரிக்கண்மாய் ,ஆயக்குடியில் இருக்கும் கண்மாய்,பெரியா வுடையார் கோயில் கண்மாய் என நீர் சேமிப்பு இடங்கள் .ஷண்முக நதியின் இருபக்கங்களிலும்  பச்சை பசேல் என்ற  வயல்வெளிகள். அடிவாரத்திலும் அப்படியே.

இன்று  அங்கு சென்றால்  பாதி வையாபுரிக்குளம்   பேருந்து நிலையம்.

பெரியநாயகியம்மன், பெருமாள் கோயில் கோயில் போன்ற கோயில்களின்  தேரோட்டம்  நடக்கும் வடக்கு ரத வீதியில் உபயோகிக்காத  நீர்நிலை த்தொட்டி.

தேரோட்டம் பார்க்கும் பக்தர்கள்   கூட்டத்திற்கு இடைஞ்சலாக.
எங்கள் தாத்தா  முப்போகம் விளையும்  வயல்கள் என்ற ஷண்முக நதி விளைநிலங்கள்  பள்ளிக்கூடங்கள்,பெட்ரோல் பங்க்  என மாற்றப்பட்டுள்ளது.
பெரியநாயகி அம்மன் கோயில் தெப்பக்குளம்  என்றுமே பராமரிப்பின்றி குப்பை கொட்டும் இடம்.கோயில் அருகில்  உள்ள மண்டபம் மறைக்கப்பட்டு
ஒரு கடை  அதன் .பின் சென்று பார்த்தால்  கல் மண்டபம். ஆக்கிரமிப்பு.

நீர் நிலைகள்  பராமரிக்கப்படாததால்  வறட்சி. புனித ஸ்தலமான கிரி வீதி முழுவதும்   கடைவீதி. கடம்ப மரங்கள்,கடம்பப் பூ மனம் இல்லை.
இடும்பன் குளம் ,சக்திவினாயகர் கோயில் செல்லும் குளம் எங்கும் வறட்சி.

பருவ மழை  பொய்க்கவில்லை. இறைவன் கொடுத்த மழை  நீர் வீணாக் கப்பட்டுள்ளது.


இது  ஊர்மக்களுக்கும் தெரியும். சுயநல அரசியல் வாதிகளுக்கும் தெரியும்.

அதிகாரிகளுக்கும் தெரியும்.

இருந்தாலும் ஒரு எழுச்சி இல்லை. வறட்சி தான் மிச்சம்.

எல்லாம் பழனி ஆண்டவனுக்குத்தான்   வெளிச்சம்.

விளைநில  ஒழிப்பு, நாட்டுக்கு இழைக்கும்  துரோகம்.
இன்றைய வாழ்வு,நாளைய வீழ்ச்சி.

நாட்டில்  உள்ள அனைத்து நீர்   நிலைகளுக்கும்  இந்த கதி. நாளைக்கு அதோ கதி.

மழை  பெய்கிறது  உண்மை. மலை நீர் வீணாவதும்  உண்மை.
இறைவா! நல்ல அதிகாரிகளைக்கொடுத்து  நீ கொடுக்கும் வளத்தைக் காக்க அருள்  வாயாக.