சனி, ஜூலை 27, 2013

ரைஸ் என்றாலே வாணிகம். அரிசி என்றால் departmental ஸ்டாரே.

தாயகம் தாய் மொழி புறத்தே தள்ளி.
கடல் தாண்டி வணிகம் செய்ததால்
காரைக்குடியில்  அழகு கட்டிடங்கள்;
கண்ணீர்மல்கி நெஞ்சுருக்கும்
கதிகாமம்,சிங்கப்பூர்  தமிழ்த் தெய்வக் கோயில்கள்.
பசிவந்திடப் பறந்துபோம்;
புலவர்களை வாழவைத்த சங்ககாலாம்,
அரசாட்சி நடந்த காலம்.
தமிழின் பெயரால் ஆட்சிபீடம் ஏறியவர்களின்
திறந்த பள்ளிகள் எல்லாம் ஆங்கிலப்பள்ளி.
தெரிந்தும் தெரியாமலும் திறந்த பள்ளிகள்.
பணமே குறிக்கோள் என ஆட்சியர்கள்
ஆங்கிலம் வளர்த்து,தமிழால்
பொருட்செல்வம் இல்லை ஐயா.
பசிவந்திட பற்றும் பறந்து போகும்.
கணிமொழியில் என்னை அம்மா என்று
அழைத்தல் போதும்.அவள் ஆங்கிலம் மட்டுமே படிக்கிறாள்
என்ற துணைவியின் மகள் வாக்கு.
ஏட்டுச்  சுரைக்காய் கறிக்கு உதவுமா?
தமிழ் பட்டதாரிகள்,தமிழ் வழி பட்டதாரிகள்,
தாயகம் குளிர சம்பாதிக்கவில்லை.
ரைஸ் என்றாலே வாணிகம்.
அரிசி என்றால் departmental  ஸ்டாரே.
இந்நிலை ஒழிய  என்ன செய்வோம்.
சன் டி .வி. பரிதியாக மாறுமா?
பாரதி சொன்ன வாக்கு தமிழ் இனி மெல்ல சாகும்.
அரசுப்பள்ளியிலும்  ஆங்கில வழி .
இதே ஆஸ்தி தரும்.
ஆஸ்தி தர எல்லாம் அழிவு தானே.

வெள்ளி, ஜூலை 26, 2013

நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. வாழ்க ஜனநாயகம்.

நாட்டின் விடுதலைக்குப் பின்  நாடு முன்னேறி இருக்கிறது.
நடுத்தர மக்களின் பொருளாதாரம் திருப்தி அளிக்கிறது.
மாநகரங்கள்  எல்லை விஸ்தரித்துக்கொண்டே போகிறது.
கட்டடங்கள் சிலைகள் சாலைகள் மேம்பட்டுள்ளன.
இருப்பினும்  பல பெருங் குறைகள்  என்று குறை படுகிறோம்.
ஏன் ?
விவசாயிகள்  தற்கொலை காரணமா ?

விலை நிலங்கள்  கட்டடங்கள்  தொழிற்ச் சாலைகளாக மாறிவருவதாலா?

கல்வி நிலையங்களின்   கொள்ளைகலாளா ?

மாநில மொழிகளால் சம்பாதிக்க வழியில்லை என்பதாலா?

ஊழலும் கையூட்டும் பெருகுவதாலா/?

சாமியார் மடங்களில் கோடிகோடியாக பணம் குவிந்து வருவதாலா>

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப்பணம் சேர்வதாலா?

விலைவாசி ஏற்றத்தாலா?
ஏழைகள் நடுத்தர மக்கள் தங்கம் வாங்கி அவசர ஆத்திரத்திற்கு பயன்படுத்தும்
ஒரு வசதியை  கூடாது ஏழைகள் தங்கம் வாங்கக் கூடாது என்ற உயரிய
கொள்கை உள்ள சிதம்பரத்தாலா?

வெளிநாட்டு நிறுவனங்கள்,முதலீடுகள் பெருகுவதாலா/

தனியார் மயம்  அதிகரிப்பதாலா?

மக்கள் வரிப்பணத்தை   தேர்தல் இலவச வாக்குறுதி அளித்து இலவசம் வளங்குவதாலா?

மின்சார ம்  சீராகா விநியோகிக்கப் படுவதாலா?

புறம்போக்கு நிலங்கள்,கோயில் நிலங்கள்,கிரனைட் கற்கள் அரசியல் வாதிகளால் அபகரித்துக் கொள்வதாலா?

கற்பழிப்புகள் ,கொலைகள் ,கொள்ளைகள்,ஆசிட் வீச்சு,கூலிப்படை ஆகியவற்றாலா/

மக்களிடம் விழிப்புணர்ச்சி இல்லாததாலா?

நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள், கள்ளக்காதல் படுகொலைகள் நடப்பதாலா/

அப்பா-அம்மா வீட்டில் இல்லை  போன்ற பாடல்களலாலா /

தண்ணீர் தட்டுப்பாடாலா/

ஆலயங்களில் கழிப்பிடம் ,தூய்மை ,நேர்மை,சமத்துவம் இல்லாததாலா/

எதோ  நாடு முன்னேற்றம் என்ற மகிழ்ச்சி ஏற்படததாலா/?

நாடு  முன்னேற்றம் அடைந்துள்ளது. வாழ்க ஜனநாயகம்.


வியாழன், ஜூலை 25, 2013

கொஞ்சம் கூட பலி-பாவத்திற்கு அஞ்சாத கலி யுகம் இது தானா?

பிராயச்சித்தம்

ஹிந்திக்  கதைச்  சுருக்கம்.

 திருமணம் முடிந்து மாமியார் வீட்டிற்கு வந்த மருமகளுக்கு   அந்த வீட்டில் உள்ள பூனையால் பெரும் தலைவலி. பால் ,தயிர் வைத்துவிட்டு வந்தால் பூனை குடித்துவிடும்.எவ்வளவு தான் எச்சரிக்கையுடன் இருந்தாலும்  சற்றே அசந்துவிட்டால் அன்று முழுவதும் தலைவலிதான். என்ன செய்வது.

பொறுமை இழந்த அந்த 13 வயதுள்ள மருமகள் ஒரு நாள் பலகை எடுத்து வீசியதும் பூனை மல்லாந்து விழுந்து விட்டது. பூனையைக் கொன்றபாவம் பூலோகத்தில் தீராது.மிகவும் பதறினார் மாமியார்வீட்டார்.

 ஒரு பெரும் கூட்டமே சேர்ந்து பலவித பரிகார யோசனைகள்.இறுதியாக அந்த நகரத்தின் பரிகார பண்டிதர்  பரமசுகத்தை அழைத்துவர முடிவு செய்தனர்.

பண்டிதர் பரமசுகத்தின் உயரம் 4 1/2 அடி. தொந்தி 42 " .ஐவர் சாப்பாட்டை அவரே சாப்பிடுவாராம்.

பண்டிதர் வந்ததும் அவர் பார்வை வீடுமுழுவதும் சென்று வந்தது. முகத்தில் அகத்தில் மிக்க மகிழ்ச்சி.
நல்ல பசைஉல்ல இடம். இருமாதத்திற்கு கவலை இல்லை. நல்ல வருமானம் என்ற நிம்மதி.

அனைவரும் கவலையுடன் பூனை இறந்ததைகூறினர். அவர் ஒரு பழைய பரிகார புத்தகத்தை  கையில் எடுத்து புரட்டினார்.கட்டைவிரல் ஒவ்வொருவிரலிலும் இருந்த ரேகையை தொட்டுவந்தது.

பின்னர் பரிகார பூஜைப் பொருள்கள் சொல்ல ஆரம் பித்தார்.

இந்தப் பூனையின் கொலை மிகப் பெரிய பாவச்செயல்.இதற்கு கும்பிபாக்கநரகம் தான்   கிடைக்கும்.ஆனால் இந்த பரிகார பூஜை சிரத்தையுடன் செய்தால் பாவ விமோசனம் கிட்டும் என்றார்.

மிக சிரத்தையுடன் வீட்டுப்பெண்கள் அவரை வணங்கி பூஜைப் பொருள் பட்டியல் எழுத ஆரம்பித்தனர்.

10 கிலோ அரிசி/ கோதுமை.நவதானியங்கள் ஒவ்வொன்றும் 5 கிலோ,நெய் 4 கிலோ,தங்கத்தால் செய்த பூனை தங்கள் சக்திக்கு ஏற்றவாறு குறைந்ததளவு 4 கிராம். பட்டியல் எழுத எழுத வீட்டில் உள்ளோர் தலை சுற்றியது. பண்டிதர் பரமசுகத்திற்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு இரண்டுமாதம் வேறு பரிகார நிவர்த்திக்கு ஆள் வரவில்லை என்றாலும் குடும்பத்தை சமாளிக்கலாம்.
இறுதியாக தக்ஷிணை ரூபாய் 500/.
கூடி இருந்தவர்கள் ,இதென்ன சிறிய பாவமா/மிகப்பெரிய பாவம் செய்ய வேண்டியது தான் என்று கோரஸ் பாட,பண்டிதர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாட ,திடீர் என்று பூனை அசைய பண்டிதர் முகம் வாட,அது எழுந்து ஓடிற்று.

  அந்தக்காலத்தில் ஒரு பூனை அடித்ததற்கே இவ்வளவு வேதனைப் பட்டுள்ளனர்.

இன்று பல அரசியல் கொலைகள்;கற்பழிப்புகள்;சத்துணவு விஷம் பிகாரில் அதுவும் அரசியல் சதி.

கொஞ்சம் கூட பலி-பாவத்திற்கு அஞ்சாத கலி யுகம் இது தானா?

செவ்வாய், ஜூலை 23, 2013

புதுமை எல்லாம் பழமையுள் அடக்கம்.

அகவை கூடுவதால்  புதிய காலம்

அறியாதவர்  என்றே  தோன்றும்.

பழையன கழிதல்,புதியன புகுதல்

உலக நீதி  என்பர். அதில் தவறு.

பழையன கழியவில்லை.

புதுமைக்கு  ஆணிவேராகிறது.

இலைகள் உதிர்கின்றன.

புது இலைகள் தளிர்கின்றன.

புதிதா இது?
இதற்கு பழமையின் ஆணிவேர்

பலமாக இருக்கிறது.

புதுமை என்பது புதியவர்களுக்கு.

பழமை இன்றி புதுமை எங்கே?

ஜாதிகள் ஏற்றத்தாழ்வு,நிறவெறி

புதுமை யா?இல்லை.

அதற்கு ஒழிக்கும் எண்ணங்கள் இன்றா?
ஒலிக்கின்றன.

ஔவையார் காலத்தில் இருந்தே அல்லவா?

கபீர்  ஜாதி யைப் பற்றி கூறி உள்ளார்.

ராமாயண ,மகாபாரதத்தில்  வருகின்றன.

அதிலும்  ஜாதி ஒற்றுமை பேசப்படுகிறது.

இன்றைய தொலைக்காட்சி,கணினி குறிப்புகள் ,

ஜோதிடம் ,வானவியல் அனைத்தும்

பழமையில் இருந்தவை என்றே

பலர் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி உள்ளனர்.

அஹிம்சை,சத்தியம்,அன்பு,இரக்கம்,

ஹிம்சை,அசத்தியம் ,வெறுப்பு ,கொடுமை

புதிய எண்ணங்களா?பழமையே.

இன்றைய திரைப்படங்களின் கருக்கள்

பழமையில் மெருகூட்டப்பட்ட புதுமை.

கர்ணனை ஆற்றில் விட்ட கதை,
கபீரை குளக்கரையில் விட்ட கதை,
இன்று  குப்பைத்தொட்டி,ரயில்பெட்டி .

தொட்டில் குழந்தை என்ற பெயரில்.

சீரடி சாய் பாபா அண்மையில் வாழ்ந்தவர்.

அவர் தெய்வப்பிறவி;வாழும் தெய்வீக புருஷர்;

மத ஒற்றுமைக்கு ஆன்மிகம் வளர்த்தவர்.

அவர் பெற்றோர்,எப்படி ,எங்கு என்பதே  புதிர்.

காதலிக்காக  போரிடுவது,அன்னமிடு தூது

இன்று கைபேசி ,தொலைபேசி,கணினி.

அகவை கூடுவதால் எனக்கு எதுவும்

புதிதாகத் தோன்றவில்லை.

ஆனால்  ஒன்றே  புதிது  படித்தவர்கள்

சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி

குற்றவாளிகளை ,ஊழலை வளர்ப்பது.

அதுவும் மகாபாரதத்திலும் ,ராமாயணத்திலும்

வரும் காட்சிகளே.

அகவை கூடினாலும் புதுமை தெரியவில்லை;
முதுமையால் புரியவில்லை.

புதுமை எல்லாம் பழமையுள்  அடக்கம்.


திங்கள், ஜூலை 22, 2013

உண்மை,நேர்மை,என்ற ஒன்றே இருந்தால் , வையகம் எப்படி இயங்கும்

2014  பொதுத் தேர்தல் ஒரு தர்ம யுத்தமாம்.

ஆட்சி பீடம் என்றாலே தர்ம யுத்தம் தான்.

என்றுதான் இந்த யுத்தம் பொருளற்று நடந்தது.

நான் தொண்டன். நாட்டுக்குப் பாடுபடுவேன்.

நேர்மையானவன் ;உண்மையானவன். 

கையில் காசு இல்லை;கடவுள் பக்தி உண்டு;

உண்மைத்தொண்டன்  நான்  வாக்களிக்கின்றேன்.

ஊழலற்ற ஆட்சி ;கையூட்டு இல்லா ஆட்சி,

வாக்களிக்கிறேன்; வாக்களியுங்கள்;

வாக்கு  கிடைக்குமா?இல்லாளை இல்லாளும் வேண்டாள்.

வாக்கு கிடைக்காது. ஏழை சொல் அம்பலம் ஏறாது;


நானே செய்த  தவறு,நண்பர்களுக்காக  செய்த  தவறு,

உற்றார் உறவினருக்காக செய்த தவறு;

தெரிந்த அறிந்த புரிந்த தவறு;தெரியாத அறியாத  தவறு;

செய்த தவறை மற்றவர்கள் எடுத்து இயம்பினாலும் 

ஏற்க இயலா   தவறு; கண் செய்த தவறு,

எண்ணங்களால்  தவறு; சிந்தனைத்தவறு,

பேராசைப்படும் தவறு,கோபத்தால் வந்த தவறு,

ஆணவத்தால் செய்த தவறு,பெரியோர்களை நிந்தித்த தவறு,

ஆசிரியர் சொல் கேட்காத் தவறு,கோயிலுக்கு சென்று 

கோபுர தரிசனம் கண்டு இதுதான் கோடிப்புண்ணியமா

என்று பரிகசித்த தவறு,பரிகசித்தோருடன் சேர்ந்து 

ரசித்த தவறு,இளமைத்தவறு, உளவியல் தவறு,

தவறுகள் தான் எத்தனை ?எத்தனை?

தவறு செய்யா மனிதர்கள் தரணியில் உண்டா ?என்ன?

இறைவனவதாரம் எடுத்த ராமனிடமும் தவறு;

கிருஷ்ணனிடமும் தவறு;சிவனிடமும் தவறு;

தவறான மனிதர்களைப்படைத்த பிரம்மனிடமும் தவறு;

அனைவருக்கும் அறிவைத் தராத கலைமகள்.

அனைவருக்கும் செல்வம் தரா அலைமகள்,

அனைவருக்கும் வீரம் தரா மலைமகள் 

என அவரவர்கள் தவறை மறைக்க தவறு செய்யும் தவறு 

என  பூ உலகில் தவறுகளே காணுகின்றோம்.

உண்மை,நேர்மை,என்ற ஒன்றே இருந்தால் ,

வையகம் எப்படி இயங்கும் ?இப்படி எண்ணும் தவறு.


ஞாயிறு, ஜூலை 21, 2013

மக்களிடையே வருமா விழிப்புணர்ச்சி!!!

பெற்ற அறிவை பங்கிடுதல்,
பெற்ற அனுபவத்தை பங்கிடுதல்,
பெற்ற ஆனந்தத்தைபங்கிடுதல்
பெற்ற மகிழ்ச்சியைப் பங்கிடுதல்
பெற்ற ஆஸ்தியைப் பங்கிடுதல் -என
பெற்றவற்றை மற்றவர்களுக்கு
பங்கிடுவதில் மட்டற்ற மகிச்சியே  காண்.
அறிவைப்பங்கிடுவதால் அறிவு பெருகும்.
சிந்தனைகள் சிறகடிக்கும்.-நற்
சிந்தனை கருத்துரைகள் விவாதங்கள்,
நானிலத்தை சிறக்கவைக்கும்.-இன்றைய
அறிவு வளர்ச்சிகள்,அன்பைப் பெருக்குகிறதா?
பண்பைப் பெருக்குகிறதா  என்ற சர்ச்சை.
அனைத்திற்கும் முதலீடு.
குழந்தை பிறக்க இலக்ஷங்கள் .
வளர்க்க  இலக்ஷங்கள்.
மூன்று வயதிலி ருந்தே
ஆண்டுக்கு இலக்ஷங்கள்.
மேற்படிப்புக்கு பல இலக்ஷங்கள்.
திருமணத்திற்கு இலக்ஷங்கள்.
இப்படி ஒவ்வொரு படியிலும் இலக்ஷங்கள் .எனவே
இலட்சியங்கள்  கோடி ரூபாய் சேர்ப்பதிலே.
அறிவு வளர்க்கிறது.அறிவியல் வளர்கிறது. ஆஷ்திகள் வளர்கிறது.
அன்பும் பண்பும் பரோபகாரமும்  இரக்கமும் ஒழுக்கமும்
ஊழல் கை ஊட்டு இல்ல தன்னலமற்ற சேவை மனப்பான்மை
வளருகிறதா ? அதுதான் குறைந்து கொண்டே வருகிறது.
விளைவு?செய்த்திதாள்களில்  அன்றாடம்
கொலை,கொள்ளை,தற்கொலை,குடி ,கூத்து கும்மாளம்.
பட்டங்கள் பெற்று என்னபலன்.?!!
சட்டங்கள் பயின்று என்ன பலன்!!!?
குறுக்குவழியில் பணம் சேர்ப்பதே குறிக்கோள் என்றால்
மனிதப் பிறவி எடுத்ததால் என்ன பயன்?
ஆட்சி பீடம் ஆஸ்தி சேர்க்க என்றால்
ஆவி பிரிந்த பின் !!!
வன் முறை அரசியல்;ஜாதி அரசியல்;கள்ளப் பண அரசியல்.
இதை ஒழிக்க எழுமா ஒரு புரட்சி.
கருத்துக் கணிப்புகள் ஊழலுக்கே வெற்றி என பறை சாற்றுகின்றன.
மக்களிடையே வருமா விழிப்புணர்ச்சி!!!



 

வியாழன், ஜூலை 18, 2013

இதைப் புரியா மக்கள் மாக்களே ஆவரே. '

இவ்வுலகில்  இறை சக்தி இருக்கிறதே

இதைப் புரியா  மக்கள் மாக்களே ஆவரே. '

இன்னல்   களைவதும் ,இன்னல்  தருவதும்

இறைசக்தியே; இதை அறிந்தும் ,

நிலை இல்லா செல்வத்திற்காக ,

இறைவன் அளிக்கும் பதவிகளை ,

இப்புவி இன்பத்திற்கு  தன் இச்சைப்படி

இத்தரணியில்  துஷ்ப்ரயோகம் செய்பவர்கள்

இலக்குமிதேவியின்  இன்னருள் பெற்றாலும்

இன்னலே  மிஞ்சும் காண்பீர்.

கோடிக்கணக்கில்  கொள்ளை அடித்த பணம்,

ஆட்சி ,பதவி,இறைநிந்தை,இறைவழிபாடு,

மாட மாளிகை ,ஆனால் வையகம் அம்மா என்றாலும்

தன்  பிள்ளை அம்மா என்று சொல்ல இயலா நிலை.

பிள்ளைகள் பல இருந்தாலும் தூற்றுவோர் தூற்றட்டும்  என

தன்  பிள்ளை பதவிக்காக  முறிந்த உறவை ஒட்டி பலியேற்ற நிலை.

இல்லை இல்லை இல்லை என்ற சிலை முச்சந்தியில் வைத்து

சாந்தி சிரிக்க வன்னத்துண்டும் ,பரிகாரமும் செய்யும் நிலை.

ஐயகோ ! ஆவி பிரியும் வேளை ! தன்  பாவம் விடாதன்றோ !

இப்புவியில் வாழ கோடிகள்  சேர்த்தாலும் .

இறைவன் தரும் தண்டனை மரணம் அன்றோ.

இதில் தப்ப கோடியில் சேர்த்த கருப்புப்  பணம் ,

வெறும் கோடித்துணியில்  முடியுமன்றோ.

தவறு செய்யா மனிதன்  தரணியில் இல்லை -என்றாலும்

தவறை உணர்ந்து நல்லது செய்தால் ,

இறைவனின்  கருணை கிட்டுமன்றோ.