இறைவனை வழிபடும்போது
நாம் சுயநலத்திற்காக வழிபடலாமா?
பொது நலத்திற்காக வழிபடலாமா?
நமது தேவைகளுக்காக வழிபடலாமா?
பொதுநலப் பணிகளுக்காக?
செல்வம் வேண்டும் என்பதற்காக ?
இவை எல்லாம் நம் முயற்சியில்
சாதிக்கக் கூடியவை.
பின்னர் வழிபாடு?
தெய்வ சக்திபெற.
இறைவன் படைத்த உடல்
நோய் -நொடியின்றி
ஆரோக்யமாக வாழ.
மனது சஞ்சலமின்றி வாழ.
மன நிறைவு அமைதியுடன் வாழ.
மனதில் தூய எண்ணங்கள்,
உயர் சிந்தனைகள் வளர.
மன ஒருமைப்பாடு இருந்தால்
உயர்ந்த நோக்கங்கள் இருந்தால்,
தீர்க்க ஆயுளுடன் ஆரோக்ய உடலுடன் வாழலாம்.
தீர்க்க ஆயுளுடன் ஆரோக்ய உடலுடன் வாழலாம்.
கவலை பொறாமை என்பதில்
வலை உள்ளத்து.
ஆமை உள்ளது.
வலையில் சிக்கினால் தப்ப முடியுமா?
ஆமை மெதுவாக செல்லும் ,
பொறாமை,பேராசை இரண்டும்
மெதுவாக நம்மை கவலை என்ற வலையில்
சிக்கவைத்துவிடும்.
அதிலிருந்து தப்புவது இயலாத காரியும்.
சிந்தா ,சிதா என்றவர்த்தைகள்.
சிந்தா என்றால் கவலை.
சிதா என்றால் சிதை.
சிதை உடனே எரித்துவிடும்.
கவலை தினந்தோறும் .
இறந்த பின் சிதை.
உயிருடன் அன்றாடம் கொள்வது கவலை.
இதிலிருந்து மனிதன் தப்பிக்க
ஆழ்மனதில் முழு விசுவாசத்துடன்
பக்தி என்ற வலையை வீச வேண்டும்.
நல்ல உயர்ந்த எண்ணங்களுக்கு முதலிடம்
தந்து
தீய எண்ணங்களான
ஆசை,ஆணவம்,பொறமை,கோபம்
விட்டு விட வேண்டும்,
काम ,क्रोध,मद,लोभ,,जब मन में लगे खान,
तब पंडित मूर्खो एक सामान..
இந்த குணங்கள் மனதில் குடிகொண்டால்
படித்த பண்டிதர்களும் ,முட்டாளும் சமமே என்றார் துளசிதாசர்.
வள்ளுவர்
அறத்தைப் பற்றி கூறும்போது
அழுக்காறு,அவா,வெகுளி, இன்னா சொல் இவை நான்கும்
இழுக்கா இ யன்ற தறம் என்றார்.
இன்னா சொல் என்பது
மற்றவர்களுக்கு தீங்கி விளைவிக்கும் சொற்கள்.
அதன் விளைவு கவலையில் ஆழ்த்திவிடும்..
ஆகையால் இவ்வுலகக் கவலையிலிருந்து விடுபட
பகவானின் தியானம் அவசியம்.
உலகில் வாழும் நாம் அழியும் உலகம், இவ்வுடல் என்றறிந்தும்,
சுயனலத்தால் மற்றவர்களுக்கு இன்னல் தரக்கூடாது.
இவ்வுலகியல் இன்பங்களில் பட்டும் படாமலும்
ஒட்டியும் ஒட்டாமலும்
ஆண்டவன் ,இறைவன் மேல்
பக்தி ,சிரத்தை கொண்டு வாழ்ந்தால்
ஆரோக்யமாக வாழலாம்.