வியாழன், ஆகஸ்ட் 15, 2013

முட்டையா ?கேரட்டா ?

 
முட்டையா ?கேரட்டா ?

நீ எப்படி இருக்க  விரும்புகிறாய் ?


ஒரு நாள் அலுவலகத்தில்  இருந்து வந்த மகள் ,உற்சாகமின்றி ,அகத்தின் அழகு  முகத்தில் தெரியும் என்பதுபோல்  சோகமே உருவாக விட்டுக்குள் வந்தாள் .


மகள் எப்பொழுதும் துள்ளிக் குதித்து  மகிழ்ச்சியாகத்  தோன்றுவாள்.

அம்மா அவளிடம் காரணம் கேட்க,

மகள்: என்னம்மா ,அலுவலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தில் இருக்கின்றனர்.

முறைப்பவர்கள். குறை சொல்பவர்கள். மேலாளர் சிடுமூஞ்சி .எரிந்து எரிந்து விழுகிறார். அப்ப-அப்ப  மின் தடை. எனக்கு அலுவலகம் செல்லவே பிடிக்கவில்லை.

அம்மா சரி ,என்னுடன் சமையல்கட்டிற்கு வா என்று அழைத்துச் சென்றாள் .


அங்கே மூன்று பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து ,ஒன்றில் கேரட் ,ஒன்றில் முட்டை ,ஒன்றில் காப்பிக் கொட்டைகள்  போட்டு தனித்தனியாக கொதிக்கவைத்தாள் .

மகளுக்கு எதுவும் புரியவில்லை.

நன்றாக கொதித்ததும்,  மகளிடம் ,முதலில் கேரட் தொட்டுப்பார்க்க கொடுத்தாள் .  பின் எப்படி ?என்று கேட்டாள் . அது மிருதுவாக இருந்தது.

பின்னர் ,முட்டை.அதன் ஓட்டை பிரித்து இது எப்படி என்றாள் .

மகள் கெட்டியாக உள்ளது என்றாள் .

காப்பிக்கொட்டை கொதித்த நீர் கருப்பாக இருந்தது.

அம்மாவின்  செயல் அவளுக்குப் புரியவில்லை.

அம்மா விளக்கினாள் --கெட்டியாக இருந்த கேரட் மென்மையாகிவிட்டது.

முட்டை திரவமாக இருந்து திடமாகிவிட்டது.

காபிக்கொட்டை தண்ணீரின்  நிறத்தை மாற்றிவிட்டது.

நீ எப்படி இருக்கப்போகிறாய் ?மூன்றுமே தண்ணீரில் கொதிததுதான்.

கெட்டி-மேன்மை,திரவம்-கெட்டி ,காப்பி தண்ணீர் நிறமாற்றம் .


மகள் அம்மாவின் விளக்கத்தை புரிந்து கொண்டாள் .

அம்மா,இனி நான் வருத்தப்பட மாட்டேன். சூழ்நிலைக்குத் தக்கபடி,

மென்மையாக,கடினமாக,மற்றவர்களின் குணத்தை மாற்றுபவளாக மாறுவேன்.

அம்மாவை இருக்ககட்டி முத்தமிட்டாள்.