செவ்வாய், மே 15, 2012

inraiya piraarththanai.todays prayer.

மனிதன் சகல கலைகளிலும் வல்லவனாக இருந்து தான் ஒரு உயர்ந்த 
நிலையில் இருக்கவேண்டும் என நினைக்கிறான்.அவனால் தனித்து இயங்க
 முடியாது. அவன் பிறப்பு அவ்வாறு இல்லை என்றால் அவன் ஆணவத்தால் 
உலகம் என்ன ஆகும்.?ஒரு சிறிய பதவி கிடைத்தாலே அவனால் பல நல்ல காரியங்கள் நடக்கின்றன.
அவனால் தீய காரியங்களும் நடக்கின்றன.இதில் எவை அதிகம்
 அவனால் நடக்கின்றன என்பதைப் பொறுத்து  அவன் போற்றவும் தூற்றவும் 
படுகிறான்.
போற்றும் நிலையில்  அவன் செய்யும் செயல்கள் அவனுக்கு
 அமைதியைத்தருகின்றன.மனநிறை வைத் தருகின்றன.
மனதில் அவன் அடையும் ஆனந்தம் பாரில் பலர் நடுவில் பீடு நடை
 போடச்செய்கிறது.

அவன் செயல்கள் பொது நலம் இன்றி சுயநலம் ,தீய செயல்கள்
 ,துன்பம் தரு  பவையாக இருந்தால்  அவன் தலை நிமிர்ந்து நடக்கமுடியாது.
அவன் அதிகார,உடல்,பொருள் வலிமையால் அவனை முகஸ்துதி
 செய்வார்களே அன்றி மனதார தூற்றுவோர்களே இருப்பார்கள் .

மனிதன் எப்போதுமே கெட்டவனாக இருக்க முடியாது என்றாலும்,
பிறவியிலேயே கொடுமைசெய்யும் குணம் உள்ள 
சிலரால் மனிதர்களே மனிதர்களை வெறுக்கும் நிலை காணப்படுகிறது.
பலகோடி மக்கள் வாழும் உலகில் நல்லோர்கள்,நற்சிந்தனையாளர்கள்,
தியாகிகள்,நேர்மையாளர்கள்,தனக்காக இன்றி நாட்டிற் காக
சமுதாயநன்மைக்காக,சத்யத்திற் காக ,கடமைக்காக,வாழ்வோரின்
 எண்ணிக்கை அதிகம்.
அதற்கு மேலான காரியம் தான் ஆண்டவன் அளிக்கும் 
மரணம்,நோய்,அகால மரணங்கள்,நஷ்டங்கள்,மனக்கஷ்டங்கள் ,
தீராத நோய்கள்,குழந்தை இன்மை,இன்னும் பல.
அதனால் த்தான் அறிவியலுடன் ஆன்மிகம் தேவைப்படுகிறது.
பல கோடீஸ்வரர்கள்,பொறியாளர்க,மருத்துவர்கள் ,வாழ்க்கை 
வெறுத்து ஹிமாலயசாரலில் வாழ்கின்றனர்.
போலி ஆதீனங்கள் கோடிக்கணக்கில் ஆஸ்த்தி கள் சேர்த்து 
தூற்றலுக்கு ஆளாகிவருகின்றனர்.
ஆண்டவன் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவார்,
பொது மக்கள் தன சுய சிந்தனையால் இவர்களிடம் ஏமாறாமல் இருக்க 
ப்ரார்த்திப்போம்.