வெள்ளி, டிசம்பர் 16, 2011

man ?


ஒரு பானை சோறுக்கு ஒரு துளி விஷம்
என்ற பழமொழிக்கேற்ப சில தவறுகள்
அனைத்தையுமே தவறாக்குகின்றன.
தவறுகள் சில குறைகள் சில
சரியானவை பல நிறைகள் பல
நிறைவான படைப்புகள் ஆண்டவன்
படைக்கவில்லை. குற்றம் குறை
நன்மை தீமை ஒளி இருட்டு ,
வெப்பம் குளிர்,லாபம் நட்டம்
முள் மலர் நறுமணம் கெட்ட மணம்
நல்ல தண்ணீர் உப்புத்தண்ணீர்,
 இவற்றையெல்லாம் அறியும்
அறிவு பெற்ற மனிதன்,
விஷம் அருந்த மாட்டான்.
ஆனால் கையூட்டு பெற்று,
ஊழல் புரிவான்.அவன் மனிதனா?



educationl chanages

கல்வி

கல்வி என்பது
அறியாமை  அகற்றுவது.
அக்கல்வியே அருள்பெற அன்றி .
பொருள் பெற என்றால்,
பொருளற்றதாகிவிடும் கல்வி.
கல்வி அறிவு பெருகப்பெருக 
கலப்படம் அதிகமாகிறது.
ஆன்மீகவாதிகள்
அதிக ஞானம் பெற்றால்,
குடில்கள்   கோபுரமாகின்றன.
பாத நடை போதை நடையாகி,
ப்ரேமானந்தமாக பரமானந்தம்
மாறுகின்றன.
அரசியல் வாதிகள்,
பொருளாசை கொண்டால்,
நாட்டுநலம் மறந்து,
வீட்டுநலம்  மறந்து,
பொருளாதாரம்
கறுப்புப் பணமாக
கள்ளச்சண்டையாக
 மாறி
பொருளற்றதாகிறது அரசியல்.
பொருளாசை பெரும் மருத்துவர்களை,
பாவம் செய்ய,நோயாளிகளை
ஏமாற்றத் தூண்டுகிறது.,
ஆடிட்டர்கள் பொய்கணக்கு
எழுதும் விதிகளைப் பின்பற்ற
செய்கிறது.ஆட்டம் எடுக்கிறது
வருமானவரித்துறை .
காவல்துறை,
பொருளாசையால் 
சின்னத்திரை பெரியதிரையில்,
களங்கமாகி  ஹீரோக்கள்
காவல்துறை யாக மாறுகின்றனர்.
காவல் அதிகாரிகளை நாயகன் அடிப்பது,
இளம் தலைமுறையினர்களை 
மகிழ்விக்கிறது.
கல்வித்துறையின் களங்கம்,
தனியார் பள்ளிகளின் பெருக்கம்.
அறிவியல் கண்டுபிடிப்புகளால்,
பொருளாசை வளர்ந்து ,
கடன் அட்டைகளால்,
கடன்காரர்களாகின்றனர்.
ஊதியமும் அறிவும் வளர வளர
முதியோர் இல்லமும் .
விவாக ரத்தும் அதிகமாகின்றன.
அறிவு வளர இல்லறம் நல்லறமாகாமல்,
அன்பு கள்ளக்காதலாக மாறி,
கணவனை கூலிப்படையால்
கொலைசெய்யத் தூண்டுகிறது.
கல்வி வளர்கிறது.
பொருளாதாரத் தன்னிறைவு  பெறுகிறது.
அமைதி இழந்து ,அருள் இழந்து,
அன்பிழந்து,மழலைகளின் ஏக்கம்
அதிகமாகி,வாழ்க்கை,
பொருள் அற்றதாகிறது.

மழலைகள்  ஆத்திச்சூடி,
மறந்து  ஆங்கில எழுத்து 
இருபத்தாறு,நான்கு ஆங்கிலம்,
மம்மி,டாடி,அங்கிள் கூற,
லகர செலவாகி தாய் மொழி
பேசுவது அவமனமாகிறது.
கல்வியின் மாற்றங்கள்,
கல்ச்சரை    மாற்றி  ,
கர்வ மாக்குகிறது.





val