செவ்வாய், ஜூலை 23, 2013

புதுமை எல்லாம் பழமையுள் அடக்கம்.

அகவை கூடுவதால்  புதிய காலம்

அறியாதவர்  என்றே  தோன்றும்.

பழையன கழிதல்,புதியன புகுதல்

உலக நீதி  என்பர். அதில் தவறு.

பழையன கழியவில்லை.

புதுமைக்கு  ஆணிவேராகிறது.

இலைகள் உதிர்கின்றன.

புது இலைகள் தளிர்கின்றன.

புதிதா இது?
இதற்கு பழமையின் ஆணிவேர்

பலமாக இருக்கிறது.

புதுமை என்பது புதியவர்களுக்கு.

பழமை இன்றி புதுமை எங்கே?

ஜாதிகள் ஏற்றத்தாழ்வு,நிறவெறி

புதுமை யா?இல்லை.

அதற்கு ஒழிக்கும் எண்ணங்கள் இன்றா?
ஒலிக்கின்றன.

ஔவையார் காலத்தில் இருந்தே அல்லவா?

கபீர்  ஜாதி யைப் பற்றி கூறி உள்ளார்.

ராமாயண ,மகாபாரதத்தில்  வருகின்றன.

அதிலும்  ஜாதி ஒற்றுமை பேசப்படுகிறது.

இன்றைய தொலைக்காட்சி,கணினி குறிப்புகள் ,

ஜோதிடம் ,வானவியல் அனைத்தும்

பழமையில் இருந்தவை என்றே

பலர் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி உள்ளனர்.

அஹிம்சை,சத்தியம்,அன்பு,இரக்கம்,

ஹிம்சை,அசத்தியம் ,வெறுப்பு ,கொடுமை

புதிய எண்ணங்களா?பழமையே.

இன்றைய திரைப்படங்களின் கருக்கள்

பழமையில் மெருகூட்டப்பட்ட புதுமை.

கர்ணனை ஆற்றில் விட்ட கதை,
கபீரை குளக்கரையில் விட்ட கதை,
இன்று  குப்பைத்தொட்டி,ரயில்பெட்டி .

தொட்டில் குழந்தை என்ற பெயரில்.

சீரடி சாய் பாபா அண்மையில் வாழ்ந்தவர்.

அவர் தெய்வப்பிறவி;வாழும் தெய்வீக புருஷர்;

மத ஒற்றுமைக்கு ஆன்மிகம் வளர்த்தவர்.

அவர் பெற்றோர்,எப்படி ,எங்கு என்பதே  புதிர்.

காதலிக்காக  போரிடுவது,அன்னமிடு தூது

இன்று கைபேசி ,தொலைபேசி,கணினி.

அகவை கூடுவதால் எனக்கு எதுவும்

புதிதாகத் தோன்றவில்லை.

ஆனால்  ஒன்றே  புதிது  படித்தவர்கள்

சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி

குற்றவாளிகளை ,ஊழலை வளர்ப்பது.

அதுவும் மகாபாரதத்திலும் ,ராமாயணத்திலும்

வரும் காட்சிகளே.

அகவை கூடினாலும் புதுமை தெரியவில்லை;
முதுமையால் புரியவில்லை.

புதுமை எல்லாம் பழமையுள்  அடக்கம்.