வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

தர்மம் எப்படி t?!!!

ஆலயங்கள் 
அதிகரிக்கும் 
இந்நாளில் 
அமர கவி 
பாரதியின் ,
பாடல் ஒன்று 
நினைவில் 
வந்தது.
ஆலயம் தோறும் 
பள்ளி சாலைகள் 
அமைப்போம்.
அறிவில்லா 
பக்தி,
பட்டம் 
அழைக்கும் 
பட்டம் பெற 
உதவாது.
அறம்  வளர்க்காது.
ஆறாம் அறிவு 
வேலை செய்யாது.
அறிவுடன் பணி  புரிய 
அறிவாலயம் .
ஆண்டவன் ஆலயம்,
சக்தி இருந்தால்,
 அரிச்சந்திரன்
மயானம் காக்கும் 
சோதனை ஏன் ?
வையகத்தில் 
வாய்மை ஊமை ஆகவோ.?!!!
அழிவிற்குப் பின் 
தர்மம் வெல்லும் 
என்றால் தர்மம் 
எப்படி 
தழைக்கும்?!!! 



இறைவன்


இறைவன் 

இன்றைய செய்தியில் 
எங்கும் 
வன்முறை,
வழக்காடும் 
வழக்கறிஞர் 
பதவி ராஜினாமா.
தனியார் பள்ளி 
ஊதிய  நிர்ணயக்குழு 
தலைவர் 
ராஜினாமா.
நீதிபதி 
மாற்றம்.
எல்லாமே 
ஒரு 
நாடகம்.
பலரிடம் 
கைபேசி எண்  இருந்தாலும்,
கண்டு பிடிக்க முடியாத 
சகான 
சிறு  சேமிப்பில்  மோசடி.
திருடர்களை 
உருவாக்கும் 
ஆய்வாளர்கள்.
அனைத்துக்கும் 
பொறுப்பு 
இறைவன்.

வியாழன், ஆகஸ்ட் 30, 2012

இறைவா! எழுந்தருள்.


பாரத நாடு பழம்  பெரும் நாடு.
பலம்  ஆன்மீக பலம் 
பழம் பெரும் நாட்டை 
காத்து வருகிறது.
நாத்திக வாதம் 
ஆஸ் திகத்தின் முன் 
ஆட்டம் போட்டாலும் 
ஆன்மீகத்தின் முன் 
அடங்கித்தான் 
போகிறது.
அலெக்சாண்டர் 
எளிய சாதுவின் முன் 
பணிந்த கதை உண்டு.
குளிரில் நடுங்கிய சாது 
என நினைத்து 
கம்பளி ஆடை வழங்கிய 
மாவீரன் 
அவரின் உலகியல் உண்மை 
தத்துவம் 
அவனின் ஆசையால் நேரும் 
ஹிம்சையை 
உணர வைத்தது.
வையகம் வாழ்க 
என்ற உயர்ந்த தத்துவம்,
விருந்தினர் களை 
தெய்வமாக நினைத்த தத்துவம்,
தேவாசுர போராட்டம் 
உலகியல் 
என்பதற்கே 
ராமாயணம் ,மகாபாரதம் 
கந்தபுராணம் 
ஐயப்ப ஜனனம்.
ஆணவம் ,
ஜாதிபேதம்,
பொறாமை,
பகை ,
அஹங்காரம் 
அனைத்தையும் 
அழிக்க 
ஒரு 
நரசிம்ஹ அவதாரம்,
அன்பைப்பெற 
துருவ 
சரித்திரம்.
எளிய 
பக்திக்கு 
கண்ணப்பர் ,
நந்தனார்,
ரைதாஸ் .
மீரா,
ஆண்டாள்.
இப்பொழுது 
ஊழல் அரக்கனை,
லஞ்ச அரக்கனை 
ஒழிக்க 
மீண்டும்  ஒரு 
நரசிம்ஹாவதாரம் 
எடுக்க 
நேர்மையாளர்கள் 
தவமும் 
நாம 
ஜபமும் 
பிரார்த்தனையும் 
செய்யும் காலம் 
இது.
காரணம் 
நீதிபதியே 
விலைபோகும் 
காலம் இது.
அரசியல் 
அதிகாரிகள் 
காப்பதற்குப் 
பதிலாக,
நேர்மை ,நீதியை,
கோடிக்கணக்கில் 
கேடிகளை 
உருவாக்கும் 
உண்மைப்போக்கு.
இதை நீக்க 
தேவை 
ஒரு சூரசம்ஹாரம்.
ஒரு நரசிம்ஹாவதாரம்.
ஒரு மோகினி அவதாரம்.
ஒரு மகிஷாசுர  அவதாரம்.
சாமியாரும் 
ஆடம்பரம்.
ஆட்சி 
யாளரும் 
ஆடம்பரம்.
ஆலயங்களும் 
ஆடம்பரம்.
கோடிக்கணக்கில் 
சொத்து 
இல்லையேல் 
சந்நியாசிக்கும் 
மதிப்பில்லை.
என்னே கொடுமை.
குடிசை சாமியார்கள்,
இன்று 
ஆடம்பர ஆஷ்ரமத்தில்.

இறைவா!
எழுந்தருள்.







எண்ணங்கள்  
சாபம்,
பழிபாவம்,

ஆன்மாவின் 
குரல்,
ஆண்டவன்  
தண்டனைஎதற்கும் 
அஞ்சாமல் 
நீதி தேவனுக்கும் 
அஞ்சாமல்,
கோடிக்கணக்கில் 
ஊழல் 
செய்யும் 
ஆட்சியாளர்கள்,
அதிகாரிகள் 
ஊழல் செய்தார் என்று 
உண்ணாவிரதம் 
இருப்போரும் 
ஊழல் 
கோயிலிலும் 
ஊழல்,
காவல் 
நிலைய 
ஊழல் 
நிலக்கரி 



புதன், ஆகஸ்ட் 29, 2012

ஜனநாயகம் வாழ்கிறது.


எங்கும் ஊழல்,லஞ்சம் என்பதே பேச்சு,
அதைவளர்ப்பதே அரசின் மூச்சு.
கல்விச் சாலையில் 
ஊழல் வளர்ப்போம்.
கல்லறையிலும் 
ஊழல் வளர்ப்போம்.
ஊழல் பணத்திலே 
ஆட்சி அமைப்போம்.-அந்த 
நீதிபதிக்கும் லஞ்சம் கொடுப்போம்.
நீதி தேவனுக்கு சமாதி கட்டுவோம்.
நாங்கள் மக்களால் தேர்ந்தெடுத்த 
மக்கள் பிரதிநிதிகள்.
அதிகாரம் பெற்றுவிட்டோம்.
கல்குவாரி பதினெட்டு 
நூறு கோடி,
ஸ்பெக்ட்ரம் ஊழல் 
பல கோடி.
சுடுகாட்டு ஊழல்.
பிச்சைக்கார அட்டை ஊழல்,
அனைவரும் 
சேரும் இடம் ஒன்றென்றாலும்,
ஓட்டுப்போடும் 
மக்கள் போடும் ஓட்டில் 
எத்தனை தில்லுமுல்லுகள்.
நான் ஒட்டுப்போடசென்றேன்.
என் ஓட்டுப்போடப்பட்டு விட்டது,
என்று  புலம்புவோர் 
எத்தனைபேர்.
இத்தனைஊழல் 
அத்துணை பேரும் 
அறிந்த ஒன்று.
ஆனாலும் 
பாரதத்தில் ஜனநாயகம் வாழ்கிறது.
அமைச்சர்கள்,உறவினர்கள் 
வாழ்கிறார்கள்.
அதிகாரம் பெற்றவர்கள் 
வாழ்கிறார்கள்.
அதனால் 
கிரிக்கட் ஊழலில் வாழ்வதுபோல்,
ஜனநாயகம்  
வாழ்கிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

காசினியில் வாழ காசுதானே.


எனது கல்வி 

நான்  படித்த தமிழ் 

எனது ஐந்து வயதில்.

அப்பொழுது தர்மப் பள்ளி.

ஆசிரியர்கள் வறுமை நிலை.

ஊதியம் 
சரியாக வராததால் 
எத்தனையோ ஆசிரியைகள் 
இறைவனடி சேர்ந்த 
வரலாறு  தன்னிச்சையாக.

அவர்கள் சொல்லிக்கொடுத்தது 
அறம்  செய விரும்பு.
ஆறுவது சினம்.
இன்று எனது பேரன் 
ஐம்பதாயிரம் நன்கொடை.
பள்ளிக்கட்டணம்.
சீருடை 
புத்தகம்,
காலணி  என 
எழுபத்தைந்தாயிரம்.
படித்தது 
ஆங்கிலம்.
அந்தப்பாடல் 
பொருள்  தெரியாத 
பொருள் செலவு செய்த 
பொறுப்பற்ற  பாடங்கள் .
ஆறுவது சினம் 
அறியாத கல்வி.
விளைவு 
ஆசிரியை கத்தி குத்து.
ஆங்கிலக்கல்வி 
இயல் வது கரவேல்.
ஈவது விலக்கேல் 
என்று கற்பிப்பது  இல்லை.
பணம் படைத்தோர் கல்வி.
ஆங்கிலம்.
ஏழையின் கல்வி 
தமிழ் .
தேசத்தந்தை 
தாய்மொழிக்கல்வி 
அவசியம் என்றார்.
ஆனால் 
தமிழ் தமிழ் 
என்றவர்கள் 
ஆட்சியில் 
பெயர் தமிழ்.
பெயருக்குத்தமிழ் .
நாற்பது 
ஆண்டுகாலம் 
தமிழ் ஆட்சி.
ஆனால் 
வளர்ந்தது 
ஆங்கிலம்.
திரைப்படப்பாடல் 
take it policy.
 தலைவர் 
தலைவர் மகன் 
மகள் 
அனைவரும் நடத்தும் பள்ளி 
மத்திய அரசுப்பள்ளி.
ஏனென்றால் 
கட்டண க்  கட்டுப்பாடு 
மாநில அரசு கட்டுப்பாட்டுப் பள்ளிகளே 

எனவே 
பல 
 மெட்ரிக்  பள்ளிகள் 
சட்டம் வரும் என்று 
முன்னறிவிப்பு  பெற்று 
சி.பீ.எஸ்.சி.பள்ளிகளாக 
மாறிவிட்டன,
கல்வி காசு இருந்தால்'
காசினியில் வாழ  காசுதானே.









திங்கள், ஆகஸ்ட் 27, 2012

கணநாயகா !!! ஞானம் கொடு!

கடவுள் - Vinayakar - God - Ganesh - Ganapati - Pillaiyar - பிள்ளையார் - விநாயகர் - கணபதி

பார்க்கப் பார்க்கப்
பரவசம் அடையச்செய்யும்,
கணநாதனின் ,
கருணை உருவம்.
கைகளில் 
கருணை,
படைத்தவனின்,
கடும் உழைப்பு.
அழகு 
உருவம்.
ஓம் என்ற பிரணவ
எழுத்து.
அழகுத்தொந்தி,
அழகுத்தந்தம்,
இந்த அழகு 
பொம்மை,
குரங்குகையில் 
கொடுத்த 
பூமாலையாக,
அங்கம் அங்கமாக ,
கடலலைகளால்,
பிய்க்கப்படுவது ,
ஆழ்ந்த பக்தியின் ,
ஆன்மீக வழிபாடு.
இதில் பல்லாயிரம் 
காந்தி பட காகிதங்கள்.
ஏழைகள்  சிரிப்பில் 
இறைவன் காணும்
 அரசின்பாதுகாப்பு.
இது பக்தியா?
அழகு இறைவன் 
ஆகாரத்தை,(உருவத்தை)
அவமானப்படுத்தும்,
அநியாயமன்றோ?
சிவகாமிமகனை  ,
கந்தனின் 
மூத்தோனை ,
சிவகுமாரனை ,
சினாபின்னமாக்கும்,

இந்த,
ஆன்மீக வாதிகளின்,
அடிமதில்,
இந்த அறிவற்ற 
பக்திமுறை மாற்ற 
முப்பெரும் தெய்வங்களை,
முப்பெரும் சக்திகளை,
முக்தி தரும் கிராமதேவதைகளை,
நீலியை,காளியை,கருப்பணனை,

மன்றாடி வேண்டுகிறேன்.
கரை ஒதுங்கும்,
உன் முண்டம் ,
கரம்,கை,
தொந்தி,
ஞானம்பெற்ற 
சனாதன 
தர்மத்துக்கே ஒரு 
நீங்காக் கரை யன்றோ?

சனாதன தர்மம் தழைக்கத் 
தடையன்ரோ?
கண்ணீர் மல்க .
காலடி தொழுகின்றேன்.
உவர்மண் நிறைந்த 
வண்ணான்,
சிவனாக காட்சியளித்த 
பக்தர் பிறந்த 
நாட்டில்,
அழகுச்சிலை,
அலங்கோலப் படுவது,
அகிலத்தில்,
அவமானமன்றோ /?
மேல்நாட்டில்,
உள்ளாடையில் ,
உன் உருவம்பதித்து  ,
அணிவது 
மதத்திற்கு,
அவமானமென்று அலறிய ,
ஹிந்துக்கள்,
சாக்கடையும்,
மலமும்,
மூத்திரமும் 
சங்கமாகும் 
கடலில் 
கரைப்பது 
படு பாதகச் 
செயலன்றோ?
கணநாயகா !!!
ஞானம் கொடு!
இந்த இழி   

செயலை,
தடுத்துவிடு.


















உ பிள்ளையார் சுழி ,


உ 
பிள்ளையார் சுழி ,
போட்டு ,
துவங்கும் 
தொழில் ,

வளரும் 
வாழையடி 
வாழையாக 
தளிர்க்கும் .
கண்ட இடங்களில் 
ஆலமரத்தடியில்,
நதிக்கரையில்,
இருக்கும் 
எளிய 
பக்தர்களை 
தன் ,
கருணையால்,
அருள்பார்வையால்,
அருள்பாலிக்கும்,
அம்பிகை புதல்வன்,
சிவனின் 
மூத்த குமாரன்,
முத்தமிழ் 
ஞானம் பெற ,
மூதாட்டி ,
அவ்வை 
வணங்கிய 
துங்கக்கரிமுகன்,
அவனை 
பக்தர்கள்,
கிரிக்கட் விநாயகனாக,
லேப்டாப் விநாயகனாக,
புட்பால் விநாயகனாக,
கலியுகத்தில் 
தோன்றினாலும்,
சர்வ சக்தி விநாயகர்,
வினைதீர்க்கும் 
விநாயகர்,
வித்யா விநாயகர் ,
பல நாமங்களில் 
பாரதம் 
எழுதிய 
பாத விநாயகனை,
பலரூப்ங்களில் 
பிரார்த்திக்கும்,
அன்பர்கள்,
அந்த அழகு 
ஆராதனை,
பிம்பங்களை,
வங்கக்கடலில்,
அலங்கோலம் 
செய்யும் 
அவலம்,
ஆறறிவு,
படைத்த,
மனிதன் 
சரிஎன்று 
செய்வதால்  தான் 
பகுத்தறிவாளர்,
பெரியாரின் 
நாத்திகவாதம் 
நலம் 
என்றே 
ஞானம்பெற்றவருக்கு 
தோன்றுமே.







ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

கணபதி



கணபதி 

தேவ கணங்களுக்கு  அதிபதி,

முப்பெரும் தெய்வங்களை 

முறையாக வழிபட,

முதலில் 
வழிபடும் 

கணபதி  வழிபாடு.

ஆனால் 

இன்று 

கணபதியின் 
அழகான 
பதுமைகள் 
விளையாட்டு 
பொம்மைகள் போல் 
கடலில் கலக்கப்படும் 
கணபதி வழிபாடு,
கால்வேறு கண்வேறு 
காது வேறு 
தொந்திவேறு 
என 
சிதறி 
கரை ஒதுங்கும் காட்டிசியில் 
கழிக்கும் 
பக்தர்கள் 
கூட்டம்.
உள்ளம் பதறும் ,
கண்ணீர் பெருகும் 
காட்சி.
இது தான் வழிபாடு என்றால் 
உண்மை உள்ளம் ஏற்காது.
பெரும்பான்மை ஏற்கும் பக்தி ,
எனக்கு ஏனோ விரக்தி.

vinaayakare oru vendukol.விநாயகரே!வினை தீர்ப்பவரே!



விநாயகரே!வினை தீர்ப்பவரே!

விக்னங்கள் விலக்குபவரே!

உனது அழகு சிலைகள் 

இரவுபகலாக 

கொசப்பெட்டையிலும்,
வேலூரிலும் ,
 கண்ணுக்கு 
அழகாக '
குளிர்ச்சியாக,
உன் வதனம் 
பிரசன்னமாக 
பல் வண்ணங்களில் ,
பல உயரங்களில்,
பல்லாயிரம் 
ரூபாய் சிலவில்,
அழகுக்கு அணிகலனாய் 
உருவாவது கண்டு 
அகமகிழ்ந்தாலும் 
உன்னை ஆராதித்த பின் ,
கடல் அலைகளில் 
தலைவேறு ,
கால் வேறு ,
தொப்பைவேறாக 
அலைகழிக்கப்பட்டு,
கரை ஒதுங்கும் ,
பரிதாபம் 
தான் 
உனக்கு  மகிழ்ச்சி என்றால்,
உனது அருள் பெரும் 
வழிபாடு  -என்றால் 
உன் கருணை  உண்மை 
என்றால் ,
பல கலைஞர்களின் 
உழைப்பை,
அரிய  படப்பை 
அவமானப்படுத்தும் ,
உனது ஆராதனை 
முறை 
அவ்வை இருந்தால் அலறியிருப்பாள் .

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் கொடுத்து 
சங்கத்தமிழ் மூன்றும் தா   என்றாள் .

இந்த கடலில் உன்னை 
அலங்கோலம்  
செய்வதால்  
கொலைவெறி தமிங்க்ளிஸ் வளர்கிறதோ?

செந்தமிழ்   தேய்கிறதோ ?

ஆங்கிலம் கலந்த தமிழ் 

அலங்கோலமாகிறதே !!!


வேண்டாம்!பக்தர்கள் எண்ணங்களை  மாற்று.
இந்த படைப்புகளில் உயிரோட்டம் கொடுத்து,
உன் அலங்கோல நிலையை 
நீயே மாற்றிக்கொள்.
கரையில் ஒதுங்கும் உன் முண்டங்கள்,
பக்திக்கு ஒரு ஏளனம்.
இந்துக்களுக்கு இழுக்கு.
ஹிந்து என்ற பெயர் ஏற்பட 
காரணமான வர்களுக்கு  
கொக்கரிப்பு.
சிலைகளை உடைப்பவர்களுக்கு 

பதில் 
சிலை கரைப்பு.
என்னே! தர்மம்!



வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

ஆசிரியர்கள் தினம்.

 
 
 
ஆசிரியர்கள் தினம்.
 
 
 
நம்நாட்டில் "குரு"என்பர்.
 
 
"குரு "  என்றால் 
 
 
"பெரிய " என்ற பொருள்  உண்டு.
 
 
குருவே  பிரம்மா ,விஷ்ணு,மகேஸ்வரன்.
 
 
குருவே  சாக்ஷாத்  பர  பிரம்மம் ,
 
 
குரு வாழ்க,குருவே  துணை.
 
 
என்று தான்  வித்யாரம்பம்   செய்வார்கள்.
 
ஆங்கில மீடியா ,
வந்ததும்,
"குரு"
ஆசிரியர், டீச்சர்,மிஸ் 
ஆனார்.
ஊதியம்  பெறும் 
ஊழியர்   ஆனார்.
விளைவு,
புனிதப்பணி 
ஊழியம் 
பெரும் 
பணியாளராக  மாறியது.
காலை  எட்டு மணிமுதல் நான்கு வரை 
கடமை முடிந்தது.
இன்றைய 
நிலை.
 
அரசியல் வாதிகளின்  கல்வி முறை 
ஆசிரியர்களை அடிமைப்படுத்துவது.
இந்த  ஆண்டு 
பெற்றோர்களிடம் 
ஆசிரியர் தின 
ஒரு வேண்டுகோள் 
தயவு  செய்து 
குழந்தைகள் முன் 
ஆசிரியர்களை 
மட்டம் தட்டி,
குறை சொல்லி பேசாதீர்கள்.
ஆசிரியர்களிடம்  ஒரு வேண்டுகோள்.
குழந்தைகளின் 
சூழல் அறிந்து 
அன்புடன் போற்றுங்கள்.
வன் முறையான 
சின்ன,பெரிய தி ரைகள்.
நாமும் வன்  முறையாக  பேசினால்,
அதிகாரம்  எடுபடாது.
பெற்றோர்களுக்கும்  இதுவே.
ஆகையால் 
அன்பிற்கு  உண்டோ அடைக்கும் தாழ்     என 
மன மாற்றம் செய்து,
சீரிய  பணியை  சிறப்பாக்குங்கள் . 
 


வியாழன், ஆகஸ்ட் 23, 2012

இறைவன்.

 
 
இறைவன்.
 
 
ஆறறிவு படைத்த மனிதன்,
 
அகந்தையுடன் வாழ்வதால் ,
 
 
புற மகிழ்ச்சியில்
 
 மதி மயங்கி,
 
நிறைவின்றி,
 
அக  மகிழ்ச்சி இன்றி ,
 
உள்ளத்தில் நிறைவின்றி,
 
உண்மையின்றி ,
 
நேர்மை இன்றி,
 
ஆறடி நிலம்  அல்லது ஒரு பிடி
 
சாம்பலில்  அழியும் 
 
விந்தையை  படைத்தவன்
 
 இறைவன்.
 
 


vinthai ulakam.விந்தை உலகம்


இந்த உலகைப்படைத்த ,
இறைவன் ,

இன்னல்கள் 
தரும் 
இன்பங்களை,
எளிதாக .
மயக்கம் தரும் 
காந்தக் கவர்ச்சியாக 
படைத்து,
மெய்  இன்பத்தில் ,
மெய்யான இ ன்பத்தை,

மறைக்கும்  மாயை படைத்து ,
ஆன்மீக மெய் மார்கத்தை ,
வனங்களில் தபம் செய்யும் 
சன்னியாசிகளிடம் 
நன்னெறி காட்டும் 
அறநெறி
எழுதவைத்து
மனிதனுக்கு  அறிவை கொடுத்து
அவனை அறிவிலி ஆக்கி,
துன்ப சாகரத்தில்
மூழ்கடித்து,
இன்பம் காணும் இறைவனை
ஞானம் பெற்றவன் மட்டும் காணும்
விந்தை உலகம் இது .



செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012

மறந்தது ஏனோ.?







இந்திய மக்கள் தேர்தல் வாக்கு 


சரியாக

பயன்படுத்தவில்லை .

என்ற குற்றச்சாட்டு.


நான் வாக்களிக்கச்சென்றேன்.

என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை.


நான் வாக்களிக்கச் சென்றேன்.

என்பெயர் இருந்தது.-ஆனால் 

முதலிலேயே வாக்களித்துவிட்டனர்.

என்  பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளது.

 ஆனால்  நீக்கப்பட்டுள்ளது.


இவ்வாறன புலம்பல்கள்  எங்கும் எல்லா இடத்திலும்.

வீடு மாறிவிட்டேன் .அதனால்.
ஊர் மாறிவிட்டேன் அதனால்.
மாநிலம் மாறிவிட்டேன் அதனால்.

40%வோட்டு போடப்படுவதில்லை 
மீதமுள்ள 60%சதவீதத்தில் 
35%---.40% 
வாக்கு பெற்றோர் ஆளும் கட்சி.
அதிலும் எத்தனை வன்முறைகள்.
மக்கள் மனம் மாறினாலும் 
அதிகாரிகள்,அடாவடி அரசியல் வாதிகள்.ஆன்மீகவாதிகள் 
இதற்கெல்லாம் 
மிகப்பெரிய 
அமானுஷ்ய சக்தி  தான் இந்தியாவை எப்பொழுதும் 
காப்பாற்றுகிறது.
சிறுபான்மை சுயநலவாதிகளால் 
இந்திய ஜனநாயகம் 
கேலிக்  கூத்தாகிறது.
இறைவனே !!!
உன் அவதாரம் தேவை.
கோடிக்கணக்கில்  ஊழல்கள்.
லக்ஷம் கோடி ஊழல்கள்.
நெஞ்சு  பொறுப்பதில்லையே,
இந்த நிலை கெட்ட தலைவர்கள் 
சுயநலத்தால்.
ஆறடிநிலம்தான் .
மறந்தது ஏனோ.?








இந்திய பணம்


பொருள் இன்றி கல்வி இல்லை.
பொருள் இன்றி  ஆட்சி இல்லை.
பொருளற்ற  வாழ்க்கை பொருள் அற்ற வாழ்க்கை.

  மக்கள் நிலை ,பொருளில் மயக்க நிலை.





          பள்ளிக்கூடம்  என்பது 

          மனதை  பரிசுத்த  மாக்குவது.

ஆனால்,

இன்று  பள்ளிக்கூடம்  ,

பயங்கர  வாதி  சாம்ராஜ்யம். ஆ!ஆ!


பணம் என்ற பயங்கர அரசாட்சி.

இன்று என்பது  ஜனநாயகம் 


பணமாக  மாறியபின்.


1967 ஆம் ஆண்டுவரை அரசு 

ஏழைகளின்  படிப்பில்அனது 



ஏற்றம்  காண முயற்சித்தது.
ஆனால்,
தேர்தல்,தேர்வு, பணிவாய்ப்பு  என்ற 
அனைத்திலும் பணம் ஆதிக்கம்,
குடி ஆட்சியை,
குடிகாரர்களை  உறவாக்கி 
பணத்திற்கு  அடிமை  யான  ஆட்சி ஆகியது.
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக்காணும் ஆட்சி,
வந்தது.
ஏழையின் படிப்பு
ஏளன ஆனது.
மழலைகள் பள்ளிகள் மட்டும் 
தொடங்கப்பட்ட தனியார் துறை,

கல்வி பொறியியல் கல்லூரி 
அனைத்தையும் பணம் ஆதிக்க மாக மாற்றியது.

அரசியல் வாதிகள் ,கருப்புப் பண 
முதலைகள்  இருவித லாபம் பெற்றனர் 
ஒன்று 
ஆண்டவன் கோயில் அமைத்து 
அதனருகில் 
நில வியாபாரம்.
பொறியியல்  கல்லூரி,
அருகில்   நில வியாபாரம்.
மேலும் மேலும் கருப்புப்பணம்.
தேர்தல் சிலவு 
கருப்புப் பணம் முதலீடு.
திரைப்படம்,
கருப்புப்பணம்.
கல்வி கருப்புப்பணம்.
முடிவு 
இந்திய  பணம் முழுவதும் 
வெளிநாடுகளில்..

அனைவரின்  ஆதரவுடன்.









வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

thandhi இலக்கியங்கள் செய்யும் பெரும் பாதகம்.

தந்தை  தாய்  பேண் .


தந்தை  என்பவர்  உழைக்கும் வர்க்கம்.

 தாய்  என்பவர் தந்தைக்கு சத்து உணவு.

இது இயற்கையின்  .இணைப்பு.

இறைவனால்  ஏற்படுத்திய  பிணைப்பு.--இருந்தாலும்

அப்பா என்றால் சும்மா,அதோட எப்படி வாழ்ந்தே தாயே?

மகனின்  கிண்டல்.அப்பா வா?? அம்மா சொல்லாமல் எப்படி?

கலியுக  வாதங்கள். அப்பா வை  திரைப்பட

நாயகர்கள் ,நாயகிகள்  ஏமாற்றும் கலை.

இருபது இருபத்திரண்டு  ஆண்டுகள் வளர்த்து ,

இருபது ,முப்பதாயிரம் ஊதியம் பெற்றவுடன்,

தந்தைக்கு எதுவும் தெரியாது.அவருக்குப் புரியுமா?

காதல் என்பது.என்ன?

அவர் வருவார் .போவார்.

என்னுடைய  அரியர்ஸ் எனது காதல் பாடம்.

என்னுடைய தோல்வியில் அவள் நிலவு முகம்.

அவள் நிழலில் என் ஆனந்தம்.

அப்பாவின் நிழலில்  அவர்

 பணம் மட்டும் தான்.

பொய் ,பொய் , தோல்வி.

பட்டப்படிப்புகள்,புலவர்கள்  காட்டும் பாதை.

இக்கல்வி  காதல்தான் என்னும் இலக்கியங்கள்,

அந்த வயதில்  காதல் இல்லையேல் அலி.ஒன்பது.


இந்திரிய கட்டுப்பாடு  ஆன்மீக வழிகாட்டி.

இதையறியா காதல் இலக்கியங்கள்,


உயர்நீதிமன்ற,உச்ச நீதிமன்ற  விவாக ரத்து

வழக்குகள் .கள்ளக்காதல்கள்.

கள்ள  உறவால், கணவன்   கொலை.மனைவி கொலை.

பெற்ற குழந்தை அநாதை.

 காதல் கூறும்


இலக்கியங்கள்  செய்யும் பெரும் பாதகம்.






திங்கள், ஆகஸ்ட் 13, 2012

ஒற்றுமை காப்போம்.


சுதந்திர தினம் 

பாரதநாடு  பழம்  பெரும்  நாடு.--பிற 

நாடுகளை நாடிச்செல்லா  நாடு.

கடல் கடந்தால் கரை படியும் 

என   தேசத்தந்தையை   முதலில் தடுத்து,

அன்னையின்  பயம் போக்க 

நல்ல   குணங்கள்  பின்பற்ற 

சபதம்   செய்து  ஒழுக்கமே விழுப்பம் தரும் 

என்ற உயரிய நாடு.

"ஆன்மிகம் "  எண்ணங்களால் , 

 வையகம்  புகழும் நாடு.

இந்த நாட்டில் அன்னியர்  புகலிடம் தேடி  வந்தனர் .

கொள்ளை  அடிக்க வந்த கூட்டம்.-அதில் 

நம்  நாட்டின்  கருங் காலிகளால்,

சுயநலமிகளால்,

 பொறாமை  கொண்டாரால்,

அண்ட வந்தவர்கள் .

ஆட்சியாளராக   மாறிய  விந்தை.

ஆண்டவர்கள்  அடிமையான விந்தை.

பாரதியார் பாடிய  

நம்மில்  ஒற்றுமை நீங்கில் ,

அனைவருக்கும் தாழ்வே .

என்பதற்கு ஓர்  எடுத்துக்காட்டு.

இந்த 66வது சுதந்திர நாளில் ,

நம் நாட்டு தியாகிகளுக்கு அஞ்சலியாக 

இதுதான் சபதம்--

நம் நாட்டு கறுப்புப் பணம் ,

வெளிநாட்டில் இருக்க  இட மாட்டோம்.

இந்த உறுதியில் வேற்றுமை மறந்து 

ஒற்றுமை காப்போம்.

நாடே நமக்கு ;

சுயநல வாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க  சபதமெடுப்போம்.










கராச்சியில் இருந்து கொக்ரோஜர் வரை-- இந்துக்களின் கருணைக் கதை.



கராச்சியில்   இருந்து  கொக்ரோஜர்  வரை-- இந்துக்களின்  கருணைக்  கதை.  ---தருண் விஜய்.

   பாகிஸ்தானில்  இருந்து இந்துக்கள்  அகதிகளாக இந்தியாவிற்கு வந்தனர்.அவர்கள் கராச்சி பாகா இந்திய எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அங்கிருந்து இந்தியாவிற்கு இந்துக்கள் அகதிகளாக  சென்றால் அது அவமரியாதை என்பதால்

 இந்துக்களிடம்  பாகிஸ்தான் அதிகாரிகள்  பாரதத்திற்கு சென்று  பாகிஸ்தானத்திற்கு எவ்வித கெடுதலும் செய்யமாட்டோம் என்ற உறுதி மொழி பெற்றுக்கொண்டனர்.
 மரியாதை என்பது பாகிஸ்தானிற்கு உள்ளதா என்பது அன்னாட்டினருக்கே  தெரியாது  என்பதால் அவர்கள் நடவடிக்கை சற்று கடும் விஷயமாகி விட்டது.

         ஒருவரும் தன் வீடு ,சொத்து ,ஊர் ,நாடு ,இருப்பிடம் போன்றவற்றை மிகவும் சுலபமாக விட்டு விட்டு வரமாட்டார்கள் .நிலம் என்பது வெறும் மண்ணோ அல்லது வீடு என்பது  சுட்ட செங்கலால் கட்டப்பட்டது  என்பதை விட  அது உணர்வு பூர்வமான மகிழ்ச்சி,துன்பம் ,மணம்,முன்னோர்களின் வாழ்க்கை,மரணம் ,கவிதைகள்,மரபுத் தொடர்களால் பின்னப்பட்டது.நம் முன்னோர்கள் இருந்த பூமியில்  ஒருவித நம்பிக்கையோடு வாழ்கிறோம்.அது நமக்கு ஒரு பரம்பரை சொத்தாகிறது.புதிய தலைமுறையினர்களின் எதிர்காலத்தை பின்னிப் பிணை கிறோம். அதனுடன் நமக்கு இருக்கும் தொடர்பு நகமும் சதையும் போல.முகமும் கண்களும் போல.
         ஒருவன் தன் உரிமையான இடத்தில் இருந்து வெளியேறும் கட்டாய சூழல் எப்பொழுது உண்டாகிறது?
 அவனுக்கு அங்கே வாழவே வழி இல்லாதபோது,
அனைத்தையும் இழக்கும் போது,மானம்-மரியாதையை  இழந்த அல்லது இழக்கும் சூழல் உருவாகும் போது
  வேறு இடம் செல்ல கட்டாய நிலை ஏற்படுகிறது.அவன் அங்கிருந்து  ஒரு தெரியாத புது இடத்திற்கு செல்கிறான். அவனுக்கு அங்கே பிச்சை  எடுக்கும் நிலைதான்.அனால் அவன் தன் மானம் காக்க,  தன் சொந்த பல தலைமுறையினர் வாழ்ந்த இடத்தை விட்டு விட்டு,
 அனைத்தையும் துறந்து அகதியாக வெளியேறுகிறான்.

        பாரதம் போன்ற மதச் சார்பற்ற  நாட்டுத்தலைவர்களும்,மக்கள் தொடர்பு சாதனங்களும்  ,இந்துக்களுக்கு இன்னல் நேரும் பொழுதெல்லாம் தாலிபன்களாக மாறி  காட்டுத்தனமாக  நடந்துகொள்கின்றன. அங்கு இந்துப்பெண்கள்  பலாத்கரப்படுத்தப்படுகின்றனர். பதின்மூன்று வயது சிறுமிகளை கடத்தி மதம் மாற்றி  கட்டாயத்திருமணம் செய்விக்கின்றனர். பெற்றோர்கள் கதறுகின்றனர். சிந்துவில் மனிஷா குமாரிக்கு  இந்நிலை ஏற்பட்டது. வேறுவழி இன்றி உடுக்கும் இரண்டு துணிகளை சுற்றி எடுத்துக்கொண்டு  மிகவும் வேதனையோடு பரிதாபத்துடன் அகதிகளாக வருகின்றனர்.

  இதைப்பற்றி இந்திய அரசியல் தலைவர்கள் கலங்கவில்லை. இந்த செய்தியை செவிமடுக்கவில்லை. பெற்றோர்கள் எவ்வளவு கதறி இருப்பார்கள்?
அவர்கள் தூங்கியிருப்பார்களா?
              நான் இந்த சேதியை பதினைந்து நாட்களுக்குமுன்  ராஜ்ய சபையில்  எழுப்பினேன்.இது வெளிநாட்டுப்பிரச்சனை என்று பதில் வந்தது. நானும் விடாமல் பல தலைவர்களிடம் கூறிய பின் இந்த அகதிகள் விஷயத்தில் கவனத்தை செலுத்தி மிகவும் கம்பீரமான விஷயம் என்று நடவடிக்கையில் இறங்கினர். அமைச்சர் எஸ்.சி.கிருஷ்ண  இந்த கம்பீரமான விஷயத்தில் பாகிஸ்தானுடன் தொடர்பு கொள்வோம் என்றார்.ஆனால் இன்று வரை இது சம்பந்தமான அறிக்கையோ,நடவடிக்கையோ பாராளுமன்றத்தில் எடுக்கப்படவில்லை.

   நான் இந்த பிரச்சனை  தொடர்பாக  எழுதும் பொழுது தமிழர்  களின் மனிதஉரிமை பார்க்கும் ஸ்ரீ லங்கா அரசுக்கு எதிராக கருணாநிதி குரல் எழுப்புகிறார். இது வெளிநாட்டில் நடக்கும்  மனித உரிமைமீறல் பிரச்சினைதானே.இது தொடர்பாக ஐக்கிய நாட்டு சபைகளிலும் வினா எழுப்பப்படுகிறது. பல தலைவர்கள் இது பற்றி பேசுகின்றனர். இது வெளிநாட்டுப் பிரச்சினை என்று யாரும் கருதவில்லை. பூடான்,பாகிஸ்தான்,பங்களாதேஷ்,ஆப்கானிஸ்தான் ன் போன்ற நாட்டில் இந்துக்கள்மேல் செய்யப்படும் கொடுமையை எதிர்க்காமல் அது வெளிநாட்டுப்பிரச்சினை தலை இட முடியாது என்கின்றனர்.
ஆங்கு இந்துக்கள்மேல்  மனித உரிமை மீறல்கள்    நடந்துகொண்டிருக்கின்றன.

 தமிழர்கள் பிரச்சனையில் உலக நீதிமன்றத்திலும் வழக்காடவேண்டும்  என்கின்றனர். ஸ்ரீலங்கா,மியான்மர்,பீலிச்தன் ,மால் தீப்.தென் அமெரிக்கா  போன்ற நாடுகளின்  உள் நாட்டுப்பிரச்சனையில் தலையீடு  செய்கின்றனர்.
 ஐக்கிய நாட்டு சபைகளிலும் வினா எழுப்புகின்றனர்.
.அதே போல்தானே  இந்துக்கள் மீது நடத்தப்படும்  மனிதாபிமான மற்ற மனித  உரிமை  மீறல்கள்.
 இது எப்படி வெளிநாட்டு உள் விவகாரங்களில் பாரதத்தின் தலை ஈடாகும். ஆனால் அவர்கள் மதசார்பற்ற நிலை என்ற போர்வையில் ஆத்மாவை  விட்டுவிடுயன்றனர்.

பாரத நாட்டு இந்து தலைவர்கள், இந்து அதிகாரிகள், பாராளுமன்றம், மனித உரிமைக்குழு, உள்துறை அமைச்சகம்,பாதுகாப்புத்துறை  என யாருமே ஒன்று கூடி இந்துக்களுக்காக குரல் எழுப்புவதில்லையே. ஏன்? பங்களாதேஷ்,பாகிஸ்தான் ,பூட்டன்  போன்ற நாடுகளில் இந்துக்கள் மேல் நடக்கும் மனித உரிமை  மீறல் பற்றி  பேசும் போது  அவர்கள் ஆன்மாக்கள்  இறந்துவிடுகின்றன. கொகார்ஜாரில் நடந்த அசம்பாவிதத்திற்கு  முஸ்லிம்  தலைவர் ஒன்று கூடி சந்தித்த பொழுது யாரும் மத சார்பற்ற தன்மை என்று கூறவில்லை. அதை ஏற்றனர்.
சில நாட்களுக்குமுன்  பூடாநிலிருந்து சில அரசுப்பிரதிநிதிகள்  குழு பாரதத்திற்கு வந்தது.
அதனிடம் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட  இருபதாயிரம்  இந்துக்கள் குறித்து யாரும் எவ்வித வினாவும்  எழுப்பவில்லை.
 நேபாளம்  இந்து நாடு  என்ற பதவியிலிருந்து அரசியல் அமைப்பு நீக்கப்பட்டது  என்றதுமே  சில மத சார்பற்ற வாதிகள் விழா  கொண்டாடினர்.
 சர்வதிகாரி சையீத் சா  மதவெறிபிடித்தவனை மதிக்கும் கூட்டம் அது.
 கொர்ஜாரில் இந்து போடக்கள் மீது நடத்திய  கொலை,வன்முறை  இன்னும் பசுமையாகவே உள்ளது.
காஷ்மீரில் இருந்து லக்ஷக் கணக்கான இந்துக்கள் வெளியேற்றப்பட்டதுடன்  இந்துக்கள் அமர்நாத்  யாத்திரையையும்  தடை செய்து   இடையுறாக  உள்ளனர். 

கராச்சியிலிருந்து  காஷ்மீர் வரை, காஷ்மீரிலிருந்து  கொர்ஜார்வரை நமது நாட்டிலேயே லக்ஷக்கணக்கான இந்துக்கள்  அகதிகளாக வாழ்கின்றனர்.இந்துக்களின் வீடுகள் பாழடைந்து  விட்டன. வீரமிக்க இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தும் இந்த பரிதாபநிலை ஏன் ?இந்துக்களின் துன்பங்களில் பங்கெடுக்காமல் அமைதி காப்பது ஏன்? அவர்களின் ஆன்மா இவ்வளவு தாழ்ந்துவிட்டதா ?!!

ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

வேகத்தடைகளே!!


  1. 66வது  சுதந்திர  தினம் 

  2. நாடு  விடுதலை  அடைந்து 

  3. 66 ஆண்டுகள் கடந்து விட்டன.

  4. நாட்டில்   வளர்ச்சிகள் ,

  5. பலமறுமலர்ச்சிகள் .

  6. உள்ளத்தில் கிளர்ச்சிகள் .

  7. தொழில் நுட்ப வளர்ச்சிகள் .

  8. தேசீய நெடுஞ்சாலைகள் ,

  9. போக்குவரத்துத் துறை ,

  10. அனைத்துத்  துறையிலும்  

  11. முன்னேற்றம் தான் .

  12. சோம்பேறிகள்  தவிர,

  13. அனைவருக்கும்  வேலைவாய்ப்பு .

  14. நகரங்களில்
  15.  
  16. வேலைசெய்யஆளில்லை .

  17. சிற்றூர்களில்  விவசாய நிலங்கள் 

  18. கட்டடங்களாக முன்னேற்றம். 

  19. பொறியியல்  கல்லூரிகள் ஈசல் 

  20. புற்றுபோல்.

  21. கோடிக்கணக்கில் கல்வியில் .

  22. விடுதலை  அடைந்த  முன்னேற்றம் 

  23. மகிழ்ச்சி அளித்தாலும் 

  24. சுதந்திரத்திற்காக  போராடிய,

  25. தியாகிகள்  ஆத்மா  அமைதி யாக 

  26. மகிழ்ந்தாலும் 

  27. முன்னேற்றத் தடைக்கற்கள் 

  28. அவர்களை veவேதனை

  29.  அடயச்செய்யும். 

  1. சுவிஸ் வங்கியில் கருப்புப்பணம்.
  2. ஆன்மீக வழிகாட்டிகள் ஆஸ்ரமங்களில் கருப்புப்பணம்.
  3. கல்வி என்ற பெயரால் பகற்கொள்ளை .
  4. மடாலயங்களில் ஆலயங்களில் மன்மத லீலைகள்.
  5. வருமானத்திற்காக மது ,மாது சாலைகள்.
  6. அரசாங்க அலுவலகம் என்றாலே கை ஊட்டு   ஊழல்கள் .
  7. ஊழலை எதிர்த்துப் போராடுபவர்கள் செய்யும் ஊழல்கள். 
  8. சிசுக்கள்,கள்ளக்காதல்,விளைவு படுகொலைகள் ,விவாகரத்து வழக்குகள் அமைதியற்ற இல்லறம் 
  9. தாய் மொழி வெறுப்பு  ஆங்கில விருப்பு .
  10. தாய் மொழி படிப்பு விளைவு வறுமையால் துடிப்பு.
  11. பெருகிவரும் முதியோர் இல்லங்கள் .
  12. மேலை நாட்டு கலாச்சாரங்கள் .
  13. அரவணைப்பு  ஆதரவற்ற  குழந்தைகள் .
  14. குழந்தைகளை தவிக்கவிட்டு ,புது 
  15. கணவனைத்தேடும் பெண்கள் .
  16. கள்ளக்காதலுக்காக கட்டியகணவனை கட்டிய மனைவியை  பெற்ற குழந்தையை  கருணையின்றி  கொலை செய்யும்  நவீன  திருமண உறவுகள் .
நாட்டின் வளர்ச்சி -மறுமலர்ச்சிக்கு கரும்புள்ளிகள் .

விடுதலை தியாகிகள் ஆத்மா சாந்திஅடையுமா ?!!

இவை முன்னேற  தடைக்கற்களே .
பண்பாட்டின் ,தாய்மொழியின் 
வீழ்ச்சி
 ஒற்றுமைக்கு மன அமைதிக்கு 
வளர்ச்சிக்கு வேகத்தடைகளே .






புதன், ஆகஸ்ட் 01, 2012

.வருமான விந்தை



வருமான விந்தை 
நம்  நாட்டில்  வளம்  என்பது  இல்லை  என்று சொல் முடியாது.நீர்வளம் உள்ளது.  மழை  பெய்கிறது. விளைச்சல் பெருகுகிறது.அரிசிப்பஞ்சம் இல்லை.

அரிசி கிடைக்கிறது. விலைதான் அதிகம்.பருப்பு கிடைக்கிறது .விலைதான் அதிகம்.காய்கறி கள்  கிடைக்கிறது.விலை தான்  அதிகம்.தங்கம் கிடைக்கிறது.
தங்க நகைக்  கடைகள்  நாளுக்கு நாள்  அதிகரிக்கிறது.

வேலை  கிடைக்கிறது. செய்ய ஆள் இல்லை.தமிழ் நாட்டிற்கு  பணி  புரிய  பலர்  வேறு மாநிலங்களில்  இருந்து  வருகின்றனர். காய்கறி   கடைகளில்
விற்பனையாள்  கூட வெளிமாநிலம் கட்டிடப் பணியாட்கள் வெளி மாநிலம்.
எனவே  வேலை இல்லாத்திண்டாட்டம்  கிடையாது.

     இச்சூழலில் தமிழ் நாட்டின் ஜீவாதார வருமானமே டாஸ்மார்க் தான் என்ற நிலை. காரணம் புரியவில்லை. ஒரு தீய பழக்கத்தால்  ஒரு வருமானம் வரும் என்று  ஒரு  அரசு  அதை வளப்படுத்தினால், அந்த அரசுக்கு  பொதுமக்கள் மேல் எவ்வளவு  அக்கறை.!!!
ஏழைகளுக்கு  இலவச அரிசி. மின்சாரம்.ஆனால் வருமானம் அவர்களை  குடிகாரர்களாக்கி  அவர்களிடம்  உள்ள தீய  பழக்கத்தால்  அவரிடமே சுரண்டி
அவர்களுக்கே  அரிசி. குடி குடியைக் கெடுக்கும் . உயிரைப்பறிக்கும்  என்ற சிறு
எழுத்து விளம்பரம்..குடிப்பழக்கத்துக்கு எதிரான அரசு விளம்பர  குறும் படங்கள்  விந்தைதானே.

அந்த குடிக்கு  அடிமை யாவது யார்.?அதைப்பற்றி கவலை இல்லை என்றால்

அது  குடி அரசா? குடியரசா ?

மும்பை போன்ற நகரங்களில் ஒருவகைத் தொழில். அதிக வருமானம்.

டாஸ்  மார்க் அதிக வருமானம்.

புகை உயிருக்குப் பகை.ஆனால் அதைத் தடை செய்தால் பலரின் வேலை வாய்ப்பு  பாதிக்கும்.

தீய பழக்கங்கள் வளராமல்  குடிகளைக்    காப்பது    தான்  அரசு.

காசு வருமானம்  என்றால்  தீயவை தான் பெருகும்

காசு-மது-மாது- மயக்கம் -மரணம் . விளம்பரத்தோடு  வருமானம் .விந்தைதான் 
















molikkolkai.மொழிக் கொள்கை

மொழிக் கொள்கை.

தீரன்  மெட்ரிக் பள்ளி மற்றும்  ஈரோடு பள்ளிகளில்  ஹிந்தி,பிரெஞ்சு  போன்ற மொழிகள் கட்டாயமாக 
திணிக்கப்படுகின்றன என்ற செய்தி  தமிழ் மணம்  வெளி இட்டுள்ளது.

இந்த கட்டாயம் என்பது 1970 முதல் நடை முறையில் உள்ளது.

தமிழகத்தில்  தமிழைத் தாய் மொழி இல்லாதவர்களுக்கு குறிப்பாக தெலுங்கு,கன்னடம் பேசுவோருக்காகவும்  மற்றும் சென்னையில் அதிகமாக உள்ள மார்வாடிகள்,குஜராத். போன்ற வெளி மாநிலத்தவர்களுக்காக 
தமிழுக்கு  மாற்றாக  அவர்கள் தாய் மொழி பயில வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதற்காக இருமொழி திட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தாய் மொழி பயில்பவர்கள் தமிழ் படிக்கவேண்டாம்  என்ற நிலையில்   அரசாணை  வெளியிடப்பட்டு  அமலாக்கப்பட்டது.

இது அரசுப்  பள்ளிகளிலும் , அரசு உதவி பெரும் பள்ளிகளிலும் நடை முறையில் இருந்துவருகிறது.ஆனால் மெட்ரிக் பள்ளியில்  இது வேறு கண்ணோட்டமாக மதிப்பெண்  பெறுவதற்கான  எளிய வழி என 
பின்பற்றப்  பட்டதால்  இன்று வெளிச்சத்திற்கு  வந்து  புதிதாகத் தெரிகிறது.

தமிழைத் தவிர மற்ற மொழிகளில் குறிப்பாக வடமொழி ,பிரஞ்சு  மொழிகளில் பாட நூலே மிகச் சிறிது தான்.அதில் ஆங்கிலத்தில் விடை அளித்தால் போதும்.

இம்மொழி  மதிப்பெண்கள் வேறு மாநிலத்தில் மதிப்பு பெற்றாலும் 

தமிழக கல்வித்துறைக்கு உண்மை நிலைதெரிவதால் 
.
  தமிழக அரசு மாநில முதல் வரும் மாணவன் தமிழ் எடுத்தால்  தான் 

மாநில முதல் மாணவன் என்று அறிவிக்கிறது.

இப்பொழுது  ஹிந்தியை விட தெலுங்கை விட அதிகம் படிப்பது பிரஞ்சு மொழிதான்.புதுவையில் அதிகம்.



.இந்த இருமொழி க்கொள்கையால்  பாதிக்கப்பட்டது தமிழ் தான்.




private schools in tamilnaadu and language policy.

கல்விக்கூடங்கள்  1970 க்குப்பின்  வணிக நோக்கில்  ஆரம்பிக்கப்பட்டு ,

அரசின் பல் துறைகள் போன்று வசதி படைத்தவர்கள் விரும்பும்
 தனியார் துறை  யாக மாற்றம் அடைந்தது  ஏன்?

இதில்  கல்வித்துறை  அமைச்சகம்,இயக்குனர்கள்,தலைமை ஆசிரியர்கள்,

ஆசிரியர்கள் ,பெற்றோர்கள்,அரசியல்வாதிகள் ,பத்திரிகைகள் ,அரசுப்பள்ளிகளில் படித்த  மாணவர்கள்  என  அனைவரின் ஒத்துழைப்பு
இல்லாமல்  தனியார் பள்ளிகள் வளர முடியுமா?

கல்வி இன்றியமையாத செல்வம்.    ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒளிமயமாக  கல்வி அவசியம்  என்ற நிலை ஏற்பட்டபின்

கல்வி நிலையங்களில் ஏற்றத்தாழ்வுகள்  மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போல் மாறிவிட்டன.

காரணங்கள்:
1.தனியார் வழியிடும்  புத்தகங்கள் ,குறிப்பேடுகள்,கழுத்துப்பட்டை,காலனி,
சீருடை, பேருந்துவசதிகள், எழுது  பொருட்கள் ,விளயாட்டுப் பொருட்கள்,
பள்ளி விளையாட்டுத்திடல்  என அனைத்தும்  தனியார் பள்ளிகள்
கவர்ச்சிக்கு ஒரு மூல காரணம்.
2.ஆசிரியர்கள்,நிர்வாகத்தினர் ,முதல்வர்களின் கடும் உழைப்பு.

3.கல்வி என்பதை  பெற்றோர்கள்  ஆங்கில வழிதான் என முடிவு எடுத்தாது.

4.தமிழ் வழி   ,இந்திய மொழி வழி  படிப்புகள்

வேலைவாய்ப்புத்தராததால்  ஆங்கிலம் தான் என்ற நிலை.

5.ஆங்கிலம் கலந்து தமிழ் மொழி பேசாவிட்டால் அவன் அறிவு வளர்ச்சி இல்லை என்று   அவமானப் ப்படுதல்.

6.தமிழ்  நாட்டில்  தமிழ் படிக்கவேண்டாம்.
.முதல் மொழி வடமொழி.பிரெஞ்சு எடுத்தால்
  ஒரு பாடம் சுலபமாகி றது .
 மதிப்பெண்களும் அதிகம் கிடைக்கும்.

அண்ணாதுரை  அவர்கள் மாண்புமிகு முதல் அமைச்சராக இருந்த போது

மும்மொழி திட்டம் கொண்டுவர முயன்றார்.

 அதில் தெலுங்கு மொழிக்கு அதிகம் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு

 தோல்வி  அடைந்தது .

        தமிழகத்தில்  உள்ள 40%அதிகமாக உள்ள தெலுங்கர்கள் தங்கள் தாய்

மொழி படிக்கவேண்டும் என்ற  எண்ணமே இல்லாதவர்கள்
.தமிழை மிகவும் நேசிப்பவர்கள் .
 திரு வை.கோ.,விஜயகாந்த்,ஈவேரா .உட்பட
.மாண்புமிகு  முதல்வர்  அண்ணாத்துரை கொண்டுவந்த  திட்டத்தில்

 ஹிந்தி படிப்பதில்பெற்றோர்கள்  அதிகம் ஆர்வம் காட்டியதால் திட்டம்

கைவிடப்பட்டது.

பின்னர் பள்ளி நேரத்திற்கு ப பின் ஹிந்தி கற்பிக்கும் ஒரு திட்டம் வந்து  கைவிடப்பட்டது.

ஹிந்தியை விரும்பா அரசியலில், ஆங்கிலம் மகத்துவம் பெற்று தமிழை

விரும்பா மொழியாக்கியது என்பதுதான் உண்மை.

பொதுவாக மக்கள் விரும்புவது தனியார் துறை தான்.
பணம் சிலவானாலும் நிம்மதி.
அரசுப்பள்ளிகளில்  தனியார் பள்ளி போன்று பொறுப்பு ஏற்பது கிடையாது.
ஐந்து ஆண்டுகள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் உள்ளனர்.
பொதுமக்கள் கவனிக்காமல் இல்லை.

இன்று தனியார் பள்ளிகள் விலைவாசி ஏற்றத்தால்  மிகவும் கலக்கத்தில்
உள்ளன .

ஆசிரியர்கள்  ,ஆயாக்கள்   aஅனைவருக்கும்  ஊதியம் kகொடுக்க vவேண்டும்

பொருளின்றி   ஆண்டவன்   தரிசனமே  ஆலயங்களில்  தாமதமாக  கிடைக்கும் .

அறிவாலயங்கள்  என்றுமே அரசபோகம் தான் .