வருமான விந்தை
நம் நாட்டில் வளம் என்பது இல்லை என்று சொல் முடியாது.நீர்வளம் உள்ளது. மழை பெய்கிறது. விளைச்சல் பெருகுகிறது.அரிசிப்பஞ்சம் இல்லை.அரிசி கிடைக்கிறது. விலைதான் அதிகம்.பருப்பு கிடைக்கிறது .விலைதான் அதிகம்.காய்கறி கள் கிடைக்கிறது.விலை தான் அதிகம்.தங்கம் கிடைக்கிறது.
தங்க நகைக் கடைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
வேலை கிடைக்கிறது. செய்ய ஆள் இல்லை.தமிழ் நாட்டிற்கு பணி புரிய பலர் வேறு மாநிலங்களில் இருந்து வருகின்றனர். காய்கறி கடைகளில்
விற்பனையாள் கூட வெளிமாநிலம் கட்டிடப் பணியாட்கள் வெளி மாநிலம்.
எனவே வேலை இல்லாத்திண்டாட்டம் கிடையாது.
இச்சூழலில் தமிழ் நாட்டின் ஜீவாதார வருமானமே டாஸ்மார்க் தான் என்ற நிலை. காரணம் புரியவில்லை. ஒரு தீய பழக்கத்தால் ஒரு வருமானம் வரும் என்று ஒரு அரசு அதை வளப்படுத்தினால், அந்த அரசுக்கு பொதுமக்கள் மேல் எவ்வளவு அக்கறை.!!!
ஏழைகளுக்கு இலவச அரிசி. மின்சாரம்.ஆனால் வருமானம் அவர்களை குடிகாரர்களாக்கி அவர்களிடம் உள்ள தீய பழக்கத்தால் அவரிடமே சுரண்டி
அவர்களுக்கே அரிசி. குடி குடியைக் கெடுக்கும் . உயிரைப்பறிக்கும் என்ற சிறு
எழுத்து விளம்பரம்..குடிப்பழக்கத்துக்கு எதிரான அரசு விளம்பர குறும் படங்கள் விந்தைதானே.
அந்த குடிக்கு அடிமை யாவது யார்.?அதைப்பற்றி கவலை இல்லை என்றால்
அது குடி அரசா? குடியரசா ?
மும்பை போன்ற நகரங்களில் ஒருவகைத் தொழில். அதிக வருமானம்.
டாஸ் மார்க் அதிக வருமானம்.
புகை உயிருக்குப் பகை.ஆனால் அதைத் தடை செய்தால் பலரின் வேலை வாய்ப்பு பாதிக்கும்.
தீய பழக்கங்கள் வளராமல் குடிகளைக் காப்பது தான் அரசு.
காசு வருமானம் என்றால் தீயவை தான் பெருகும்
காசு-மது-மாது- மயக்கம் -மரணம் . விளம்பரத்தோடு வருமானம் .விந்தைதான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக