மொழிக் கொள்கை.
தீரன் மெட்ரிக் பள்ளி மற்றும் ஈரோடு பள்ளிகளில் ஹிந்தி,பிரெஞ்சு போன்ற மொழிகள் கட்டாயமாக
திணிக்கப்படுகின்றன என்ற செய்தி தமிழ் மணம் வெளி இட்டுள்ளது.
இந்த கட்டாயம் என்பது 1970 முதல் நடை முறையில் உள்ளது.
தமிழகத்தில் தமிழைத் தாய் மொழி இல்லாதவர்களுக்கு குறிப்பாக தெலுங்கு,கன்னடம் பேசுவோருக்காகவும் மற்றும் சென்னையில் அதிகமாக உள்ள மார்வாடிகள்,குஜராத். போன்ற வெளி மாநிலத்தவர்களுக்காக
தமிழுக்கு மாற்றாக அவர்கள் தாய் மொழி பயில வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதற்காக இருமொழி திட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தாய் மொழி பயில்பவர்கள் தமிழ் படிக்கவேண்டாம் என்ற நிலையில் அரசாணை வெளியிடப்பட்டு அமலாக்கப்பட்டது.
இது அரசுப் பள்ளிகளிலும் , அரசு உதவி பெரும் பள்ளிகளிலும் நடை முறையில் இருந்துவருகிறது.ஆனால் மெட்ரிக் பள்ளியில் இது வேறு கண்ணோட்டமாக மதிப்பெண் பெறுவதற்கான எளிய வழி என
பின்பற்றப் பட்டதால் இன்று வெளிச்சத்திற்கு வந்து புதிதாகத் தெரிகிறது.
தமிழைத் தவிர மற்ற மொழிகளில் குறிப்பாக வடமொழி ,பிரஞ்சு மொழிகளில் பாட நூலே மிகச் சிறிது தான்.அதில் ஆங்கிலத்தில் விடை அளித்தால் போதும்.
இம்மொழி மதிப்பெண்கள் வேறு மாநிலத்தில் மதிப்பு பெற்றாலும்
தமிழக கல்வித்துறைக்கு உண்மை நிலைதெரிவதால்
.
தமிழக அரசு மாநில முதல் வரும் மாணவன் தமிழ் எடுத்தால் தான்
மாநில முதல் மாணவன் என்று அறிவிக்கிறது.
இப்பொழுது ஹிந்தியை விட தெலுங்கை விட அதிகம் படிப்பது பிரஞ்சு மொழிதான்.புதுவையில் அதிகம்.
.இந்த இருமொழி க்கொள்கையால் பாதிக்கப்பட்டது தமிழ் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக