சுதந்திர தினம்
பாரதநாடு பழம் பெரும் நாடு.--பிற
நாடுகளை நாடிச்செல்லா நாடு.
கடல் கடந்தால் கரை படியும்
என தேசத்தந்தையை முதலில் தடுத்து,
அன்னையின் பயம் போக்க
நல்ல குணங்கள் பின்பற்ற
சபதம் செய்து ஒழுக்கமே விழுப்பம் தரும்
என்ற உயரிய நாடு.
"ஆன்மிகம் " எண்ணங்களால் ,
வையகம் புகழும் நாடு.
இந்த நாட்டில் அன்னியர் புகலிடம் தேடி வந்தனர் .
கொள்ளை அடிக்க வந்த கூட்டம்.-அதில்
நம் நாட்டின் கருங் காலிகளால்,
சுயநலமிகளால்,
பொறாமை கொண்டாரால்,
அண்ட வந்தவர்கள் .
ஆட்சியாளராக மாறிய விந்தை.
ஆண்டவர்கள் அடிமையான விந்தை.
பாரதியார் பாடிய
நம்மில் ஒற்றுமை நீங்கில் ,
அனைவருக்கும் தாழ்வே .
என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
இந்த 66வது சுதந்திர நாளில் ,
நம் நாட்டு தியாகிகளுக்கு அஞ்சலியாக
இதுதான் சபதம்--
நம் நாட்டு கறுப்புப் பணம் ,
வெளிநாட்டில் இருக்க இட மாட்டோம்.
இந்த உறுதியில் வேற்றுமை மறந்து
ஒற்றுமை காப்போம்.
நாடே நமக்கு ;
சுயநல வாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க சபதமெடுப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக