கண்ட காட்சிகள்,
கண்ட கண்ட எண்ணங்கள் ,
எண்ணங்களில் மோதல்கள்,
ஏற்றத்தாழ்வுகள்,ஆசைகள் -பேராசைகள்,
பொறாமைகள்,ஆணவம் ,காமம்.
தீய சேர்க்கைகள்,தீய எண்ணங்கள்,
இவைகளில் இருந்து விடுபடா ஒரு மாயை,
மனிதனை மகிழ்ச்சி அற்றவனாக,
மனநிறைவற்றதாக மாற்றுகிறது .
இந்த உலகத்தில் தேவைகள் அதிகம்.
அறிவியல் முன்னேற்றம் பொருளாதார சிக்கல் .
தேவைகளும் ஆசைகளும் விருப்பங்களும்
செயலாக்கமும் தேவைதான்.
ஆனால் அவை சுயநலமாக மாறும் போது
நாட்டிற்கு ,வீட்டிற்கு,சமுதாயத்திற்கு
மிகவும் ஊறு விளைவிக்கிறது .
கொலை,கொள்ளை ,மாது,மது மயக்கங்கள்
அமைதி தருவதாக ஒரு மாயத் தோற்றம் .
துன்பக்கடலில் தள்ளிவிடுகிறது.
அமைதியற்ற,ஒற்றுமையற்ற,அன்பற்ற ,வாய்மையற்ற ,அஹிம்சையற்ற சமுதாயம்.
இந்நிநிலை தன் வரம்பை மீறும் பொழுது ,
ஒரு யு க புருஷன்
சங்கரராக,புத்தராக,மகாவீரனாக,குருநானக்காக
முஹம்மது நபியாக ,ரமண மகரிஷியாக,
ராமக்ரிஷ்ணராக அவதரித்து ,
பல சீடர்கள் மூலம்
மாயை அகற்றி அமைதிக்கு ,அன்புக்கு ,வாய்மைக்கு, மனித நேயத்திற்கு,
தான -தர்மத்திற்கு ,தியாகத்திற்கு ,பற்றற்ற நிலைக்கு
பக்தி மார்க்கத்தைக் காட்டுகின்றனர்.
அவர்கள் மறைவிற்குப்பின் மீண்டும் போலிகள்
மூலம் மதங்கள் சுயநல வாதிகள் மூலம்
போலி பக்தர்கள் மாசுபடுகின்றன.
மக்களுக்கு மதங்கள் விஷயத்தில் விழுப்புணர்வு தேவை.
சுய நல மதவாதிகள் மனிதர்களை பிளவு
படுத்தி ,வேற்றுமைப் படுத்தி
தான் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க
பக்தி நாடகம் ஆடுகின்றனர் .
இவர்களில் இருந்து தப்பிக்கவே
பகுத்தறிவு வாதம்.நாஸ்திகவாதம் .
நாஸ்தி என்றால் அழிவு.
மூட பக்திக்கு அழிவு.
தூய பக்திக்கு ஒரு சிந்தனை.
மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு
தெய்வீக சக்தி உண்டு என்பதை
எந்த அறிவியல் வாதியும் பகுத்தறிவு வாதியும்
மறுத்ததில்லை.
மறுத்தாலும் இறுதிக்காலத்தில்
இறைவன் இருப்பதை உணர்த்திச் சென்றுள்ளனர் .