நமது முன்னோர்கள் வாழ்க்கையை பிரம்மச்சரியம்,க்ரஹஸ்தம், வானப்ரஸ்தம்,சன்யாசம் என்று பிரித்து மனப்பக்குவம் ஏற்படுத்தி உள்ளனர்.
அமெரிக்காவிலும் அவர்கள் வாழும் முறை சாகும் வரை தன சக்தியை நம்பியே.90 வயதில் கார் ஓட்டி செல்லும் முதியர்.ஒரு கை இல்லாமல் ஒரு முதிய பெண் சாமான்களை எடுத்து காரில் வைத்தபொழுது உதவச்சென்ற என் மகனைத் தடுத்துவிட்டார்.அது அவர்கள் தன்னம்பிக்கை. நான் 58 வயதில் வயதில் ஒய்வு பெற்றதும் தளர்ந்துவிட்டேன்.அங்கு சென்றதும் இளமையை உணர்ந்தேன். ஏன் என்றால் எங்கள் வீட்டின் அண்டைவீட்டுக்கரர் என் அப்பா சிறுவயதில் இறந்துவிட்டார் என்றார், அப்பாவின் வயது 74.
நம் சனாதன தர்மம் வாழ்க்கைத் தத்துவங்களைக் காட்டுகிறது. தசரதர் மூப்படைந்ததும் இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவெடுத்தார்.
நாம் வயதானாலும் 52 வயது மகனை குழந்தையாய் தான் பார்க்கிறோம். நாம் நமது கலாச்சாரத்தை ஆழ்ந்து படித்தால் பிரிவு ஒன்றும் பெரிதல்ல.
தாயின் கருவில் இருக்கும் காலம் தாய் நாடு.பின் நாம் வெளிநாடுதான். இயற்கை நீதி ஆகையால் தான் நம் சகோதர மதம் இஸ்லாம் இறப்பில் சிரிக்கிறது. பிறப்பில் அழுகை.வாழ்க்கையின் எதிர் நீச்சல். இதுதான் உலகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக