செவ்வாய், நவம்பர் 20, 2012

அம்மாவின் நினைவலைகள்-10





அம்மாவின் நினைவலைகள்-9

அம்மாவிற்கு சோதனை நேரங்களில் ஆண்டவன் கொடுக்கும் தைரியமும்,மனித உருவில் உதவ வருபவர்களும்
என்னை மிக ஆச்சரியப் பட வைக்கும். ஒருமுறை அம்மாவை மிரட்ட பின் வீட்டுக்காரரின் மகன் ஒரு அடியாளை
அனுப்பி உள்ளான்.அம்மா அவனை எந்த ஊர் என்று கேட்டு,அந்த ஊர் மாணவர்கள் பற்றி கூறியதும் அவன்
அம்மா காலில் விழுந்து வணங்கி உங்கள் மாணவன் என் சித்தப்பா என்று சொல்லி,யார் பணம் கொடுத்து அம்மாவை மிரட்ட அனுப்பினானோ
அவனையே மிரட்டி விட்டுச் சென்றுள்ளான்.
அம்மாவின் வாழ்க்கையில் பல தெய்வீக நிகழ்ச்சிகளும் நடந்தது உண்டு.
சோக நிகழ்ச்சிகளும் நடந்தது உண்டு.
அனைத்திலும் அவர் நீந்தி கரை ஏறினாலும் அப்பாவின் மரணமும்,மாப்பிள்ளையின் மரணமும் தாங்க முடியா வேதனை. என்னால்
இந்த இரு வேதனைகளும் அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றன.மரணம் ஏற்படும் பொழுது மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வது சுலபம்.
ஆனால் அந்தப் பெருந்துன்பம் ந செயலற்றதாக்கிவிடும்.ஆனால்,என் தங்கைக்கு எங்கிருந்தோவந்த தைரியம்,துணிச்சல்,தன வேதனையை மறைத்து,எல்லாம் அவரவர்கள் தலை எழுத்து,இதை நினைத்து வருந்துவதால் என்ன பயன் !என்று தைரியம் சொல்லுவாள்.
மரணம் அதுவும் அகால மரணம் ...இந்த நரக வேதனை மனித வாழ்வில் ஏன் ? அப்படிப்பட்ட வாழ்க்கை சம்பவங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்பட்டாலும் மனிதன் போட்டி,பொறாமை,பேராசை அகந்தை,என்ற தீய குணங்கள் தோன்றுவது ஏன் ? இதுதான் அறிவுள்ள அறிவியல் உலகை சற்றே ச்தம்பிக்கச்செய்கிறது.
தொடரும்.

கருத்துகள் இல்லை: