நாட்டிற்கு விடுதலை,
இன்றும்
நடைபாதை வாசிகள்,
குடிசை வாசிகள்,
சமத்துவபுரம்
நாட்டின் ஒதுக்குப்புரத்திலே.
அவர்கள் ஏழைகள்.
பணிபுரிய வர நடக்கமுடியும்.
நகரப்பேருந்தில் தொற்றிக்கொண்டு,
உயிரைப்பணயம் வைத்து
பயணம் செய்யமுடியும்.
ராஜமார்க்கம் இன்றி.
மழைநீர் சேற்று நீரில் நடக்கமுடியும்.
மின்சார மின்றி சம்சாரம் நடத்தமுடியும்.
அவர்களுக்கு மின்விசிறி ,
மிக்சி,கிரைண்டர்,
எதற்கென்று தெரியுமா?
ஒட்டுப்போட்ட நன்றிக் கடனுக்கு.
நவராத்திரி கொலு போம்மை போல்
அடுக்கிவைத்து
அவசர ஆத்திரத்திற்கு ஈனக் கிரயத்தில்
விற்று வயிறு வளர்ப்பதற்கு.
கட்சி
வளம் பெற,
வரிப்பணத்தில் கொடுக்கும் நேரடி கை ஊட்டு.
இலவச மிதி வண்டிகள்
நகர மாணவர்கள் விற்க பள்ளி அருகிலே தரகர்கள்.
தொலைக்காட்சிபெட்டிகள்,
பார்ப்பதற்கு மின் சாரமில்லை.
விற்றால் டாஸ்மார்க் இன்ப பானம் அருந்த.
தாலி மெதுவாக விலைபோகும்.
அடுத்த தேர்தல் கை ஊட்டுக்கு
என்ன இலவசமோ?
,குடிநீர் வசதிசெய்ய இயலா அரசு,
ஏழைகள் வசதியாக வாழவைக்க
விரும்பா அரசு.
கல்விச்சாலைகள் இலவசமாக திறந்து வைத்து,
அவைகளை தரமில்லாமல் செய்து,
தனியார் தான் அனைத்தும் என்று
கறுப்புப் பணத்தால்
ஆடம்பரமாக வாழும்
கருணை அற்ற அரசு.
இதைப்புரிந்தும் அவர்களுக்கு விலை போகும்
மக்கள்.
வாழ்க ஜனநாயகம்.
இன்றும்
நடைபாதை வாசிகள்,
குடிசை வாசிகள்,
சமத்துவபுரம்
நாட்டின் ஒதுக்குப்புரத்திலே.
அவர்கள் ஏழைகள்.
பணிபுரிய வர நடக்கமுடியும்.
நகரப்பேருந்தில் தொற்றிக்கொண்டு,
உயிரைப்பணயம் வைத்து
பயணம் செய்யமுடியும்.
ராஜமார்க்கம் இன்றி.
மழைநீர் சேற்று நீரில் நடக்கமுடியும்.
மின்சார மின்றி சம்சாரம் நடத்தமுடியும்.
அவர்களுக்கு மின்விசிறி ,
மிக்சி,கிரைண்டர்,
எதற்கென்று தெரியுமா?
ஒட்டுப்போட்ட நன்றிக் கடனுக்கு.
நவராத்திரி கொலு போம்மை போல்
அடுக்கிவைத்து
அவசர ஆத்திரத்திற்கு ஈனக் கிரயத்தில்
விற்று வயிறு வளர்ப்பதற்கு.
கட்சி
வளம் பெற,
வரிப்பணத்தில் கொடுக்கும் நேரடி கை ஊட்டு.
இலவச மிதி வண்டிகள்
நகர மாணவர்கள் விற்க பள்ளி அருகிலே தரகர்கள்.
தொலைக்காட்சிபெட்டிகள்,
பார்ப்பதற்கு மின் சாரமில்லை.
விற்றால் டாஸ்மார்க் இன்ப பானம் அருந்த.
தாலி மெதுவாக விலைபோகும்.
அடுத்த தேர்தல் கை ஊட்டுக்கு
என்ன இலவசமோ?
,குடிநீர் வசதிசெய்ய இயலா அரசு,
ஏழைகள் வசதியாக வாழவைக்க
விரும்பா அரசு.
கல்விச்சாலைகள் இலவசமாக திறந்து வைத்து,
அவைகளை தரமில்லாமல் செய்து,
தனியார் தான் அனைத்தும் என்று
கறுப்புப் பணத்தால்
ஆடம்பரமாக வாழும்
கருணை அற்ற அரசு.
இதைப்புரிந்தும் அவர்களுக்கு விலை போகும்
மக்கள்.
வாழ்க ஜனநாயகம்.