ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

வாழ்க ஜனநாயகம். பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை


நம்  மக்கள் நாட்டு நலம் சிந்திக்கும்  காலம் 


நம் நாடு விடுதலை  அடைந்து   67 ஆண்டுகள்  ஆகியும்  
மக்களிடம்    விழிப்  புணர்ச்சியும்  நாட்டுப் பற்றும் 
கடமை உணர்வும் நேர்மையும் 
பண்பாடும் கலாச்சாரமும் 
குறைந்து கொண்டே வருகின்றன.
இதை அறிவு வளர்ச்சியின்  முன்னேற்றம் என்று கருதப்படுகிறது.
பட்டங்கள்  பெறுவது பண்புகள் வளர.
நாட்டுப்பற்று வளர.
நாட்டின் மதிப்புகள் வளர.
ஆனால் 
புற ஆசைகள்  வளர 
ஜன நாயகம்  பண நாயகமாக மாறுகிறது.
நான் குழந்தையாக இருக்கும் போது  
தவறு செய்பவர்கள் வெறுக்கப்பட்டனர்.
அப்பொழுது படித்தவர்கள் எண்ணிக்கை குறைவு.
எனது ஆசிரியர்  வறுமையில் வாடினார்.
தனி வகுப்புகள்  கிடையாது.
இன்று தனிவகுப்புக்கு அனுப்பினால் தான் 
பெற்றோர்கள்  திருப்தி அடைகிறார்கள்.
மழலைப் பள்ளியில் இருந்து 
உயர்கல்வி வரை பணம்.
அவன் கெட்டிக்காரன் .
பதிவாளர் அலுவலகத்தில் பணி .
பணம் கொட்டுகிறது.
அவன் காவல் துறை.அவனுக்கு வசூல் தான்.
அவன் சட்டமன்ற உறுப்பினன்.
இவன் பாராளுமன்ற உறுப்பினர்.
கோடிக்கணக்கில் தேர்தல் சிலவு.
தொகுதி சீட்டு வாங்க கட்சி தலைமைப் பீடத்திற்கு 
மட்டும்  கோடி.
நாட்டுப்பற்று நா நயம் என்பது 
நாணயமாக மாறிவிட்டது.
ஊழல் ,கொலையாளிகள் பலர் 
பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் .
நாடு முன்னேறுகிறது.
வேலைவாய்ப்புகள் பெரு குகிறது.
ஆனால் 
சமுதாயம் அமைதி இழக்கிறது.
மின்சாரம் இல்லை.
விலைவாசி உயர்கிறது.
கொலை கொள்ளை ஊழல் அதிகரிக்கிறது.
அடுத்த தேர்தலுக்கு  கோடிக்கணக்கில் 
பணம் சேருகிறது.
மீண்டும் ஜனநாயகம் 
ஜீவிக்கிறது.
கோயில் நிலம்.புறம் போக்கு நிலம் விளைநிலம் 
விலை போகிறது.
பட்டதாரிகள் எண்ணிக்கை  கூடுகிறது.
ஊழலை எதிர்த்து போராட்டம் செய்யும் 
குழுவிலும் ஊழல் தெரிகிறது.
அங்கிருப்போரின்  பேரிலும் 
ஆளும் கட்சியினரின் பேரிலும் ஊழல் அறிக்கை/
பல ஊழல் தலைவர்களின் கூட்டணி ஆட்சி 
தொடர்கிறது.
ஜனநாயகம்  கூட்டணி என்ற போர்வையில் 
ஊழல்  நாயகர்கள் சேர்ந்து 
புதிதாக மலர்கிறது.
வாழ்க ஜனநாயகம்.
பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை 
என்பதை நிர்ணயிக்கிறது.





கருத்துகள் இல்லை: