வியாழன், செப்டம்பர் 20, 2012

நானும் பக்தன் தான்


நானும் பக்தன் தான்.


அவனின்றி ஒரு அணுவும் அசையாது  

சிவன் கட்டளை இன்றி எறும்பு கூட கடிக்காது.

கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன்.
காடுடைய சுடலைப் பொடி  பூசி ,
எந்நாட்டிற்கும் இறைவனாய் ,
விஸ்வனாதனாக 
விளங்கும் விநாயகன் புதல்வன்,
தன்னை 
ஆற்றிலும் கடலிலும் கிணற்றிலும் 
போட்டு ,
ஊர்வலத்தன்று ஒரு பயத்தையும் 
பதட்டத்தையும் 
உருவாகும் 
ஆராதனையை 
உள்ளம் விரும்பி ஏற்பானா ?
உலகம் இப்படிப்பட்ட 
பக்தியை ரசிக்குமா?
அல்லது கரை ஒதுங்கும் 
அசிங்கப்பட்ட 
அலங்கரத்தைப்பார்த்து 
உள்ளாடைகளிலும் 
காக்க காக்க கனகவேல் காக்க 
என்று 
உருவத்தை அச்சடித்து அணிவதை 
எதிர்க்க நமக்கு அருகதை உண்டா?
சற்றே சிந்தித்த பின் 
எனது பிரார்த்தனை.
விநாயகா!
கணங்களின் நாயகா!
பக்தர்கள் உன்னை சிதைப்பதைத்  
தடுக்க 
அவர்களுக்கு ஞானம் கொடு.
நீ உன்னை அவமானத்தில் இருந்து காத்துக்கொள்.
இது நீ விரும்புகிறாய் ,
என்றால் எனக்கு 
உன்னை சிதைக்கும் செயல் 
நல்லது என்று சாந்தப்படுத்து.
எனக்கு 
உன் உருவம் சின்னாபின்னமாவது 
வேதனையின் 
எல்லைக்கே அழைத்துச் செல்கிறது.

கருத்துகள் இல்லை: