வியாழன், செப்டம்பர் 27, 2012

எல்லாம் இறைவன் திருவிளையாடல். சனாதன தர்மம். எல்லாம் இறைவன் திருவிளையாடல்.எல்லாம் இறைவன் திருவிளையாடல்.




சனாதன  தர்மம்.

மனிதர்கள்  மட்டும் சிந்தித்து  செயல் ஆற்றுபவர்கள்.

ஆனால் அவர்கள் மனத்தில் எழும் எண்ணங்கள் 

எப்படி  உண்மைக்கும் பொய்மைக்கும் சார்ந்து  

நடைமுறையாக மாறுகின்றன.

ஒருவர் நேர்மையாகவும் ,ஒருவர் நேர்மை   அற்றவராகவும் 

இருக்க காரணம் என்ன?

தெய்வ சக்திக்கும் ,அசுர சக்திக்கும்
  புராணங்களிலும்  போராட்டம்.
அதர்மம் தலை தூக்கும் பொது தர்மத்தை நிலை நாட்ட  இறைவன் 
அவதரிக்கிறான்  என்றும் ,ஒவ்வொவொரு யு க த்திலும் 

இறைதூதர்கள்  அவதரிக்கின்றனர்.

பாரத தேசத்தில் மட்டும்  தர்மத்தை நிலைநாட்ட ஆண்டவன் 
அவ்வப்பொழுது  அவதாரம் எடுத்துள்ளான்.
ஆண்டவனைப் புகழ்ந்து போற்றும் அடியார்களை 
ஆண்டவனாக  ஆராதிக்கும் தேசம் பாரதம்.
ஆனால்  பாரதநாட்டில்  
இறைவன் பெயரைச்சொல்லி  ஏமாற்றுபவர்கள் அதிகம்.

அதற்கு காரணம் மக்கள் இறைவனை
 சரணாகதி அடையாமல் 
நடுவில் சாமியார்கள்,மந்திரவாதிகள்,ஜோதிடர்கள்,
மாந்திரீகர்கள் ,தாயத்து, ஹோமம் என்ற 
பெயரில்  இறை சக்தியின் பெயரால் ஏமாற்றுபவர்கள் அதிகம்.

ஏமாற்றுபவர்களைவிட ஏமாறுபவர்கள் அதிகம்.

இறைவனிடம் சரணாகதி அடைபவர்களைக்
 காக்க இறைவனே வந்து  பணியாளாக 
வாழ்ந்த புராணக்கதையும் உண்டு.
இறைவனே சாக்ஷி சொன்ன கதைகளும் உண்டு.
திரௌபதி  மானம் காக்க இறைவன் நேரில் அவதரித்த 
 கதையும் உண்டு.
கஜேந்திர மோக்ஷம்  கதையும் உண்டு.

ஆனால் ஆச்ரமங்களை நம்பும் கூட்டம் அதிகம்.
மடாலயங்களில் கோடிக்கணக்கில் பணம்  சேருவதும் அதிகம்.
ஆஸ்ரமங்களில் நடக்கும் காம லீலைகளும் அதிகம்.
சாமியார்கள்  ஆஸ்ரமங்களில்  அனைத்து 
 நவீன அறிவியல் சாதனங்களும்  ,தொலை தொடர்பு சாதனங்களும் அதிகம்.

அங்கு சத்சங்கம் ,இறைவன் பற்றிய உபன்யாசங்களும் ,
தீக்ஷைகளும் ,போதனைகளும் அதிகம்.
அதே சமயம் போதைப்  பொருள் களும் அதிகம்.
தங்கம்,தங்கக்கட்டிகள், கோடிகள்  புரளும் இடமாகவும் 
ஆஸ்ரமங்கள் இருக்கின்றன.

இவையெல்லாம் ஆண்டவன் லீலைகளா ?
அல்லது 
மக்களின் அறியாமையா?
இதுதான் இன்றைய சனாதன தர்ம  நிலை.
ஒரே  ஒரு சந்தேகம் 

இந்த ஆஸ்ரமங்கள் இறை பணியை  விட்டு  விட்டு 
அரசியல் ஊழல் பற்றி பேசும் போதுதான் 
ஆஷ்ரம ஊழல்கள் .கடவுச் சீட்டு ஊழல்கள் வெளி வருகின்றன.
அரசியல் வாதிகளுக்கும் ,ஆஷ்ரம வாசிகளுக்கும் தொடர்பு 
இராமாயண காலத்தில் இருந்து வருகின்றன.
ஆனால் சிறுகுடிலில் வனாந்திரங்களில் கட்டாந்தரையில் 
படுத்து எளிய வாழ்க்கை  அது அந்தக்காலம்.
விலைஉயர்ந்த மெ த்தைப்படுக்கையில்
 படுப்பது  இன்றைய ஆஷ்ரமம்.

எல்லாம்  இறைவன்  திருவிளையாடல்.














கருத்துகள் இல்லை: