சனி, செப்டம்பர் 15, 2012

சிந்தனை தா!1 இறைவா! இறைவன் அருள் யாருக்கு?





இறைவன்  அருள்  யாருக்கு?

ஆஷ்ரமம் என்ற குடிலில் கானகத்தில் 
வாழ்ந்த முனிகள்.
பஞ்சத்தில் அடிபட்டவர்கள் போல் ,
முற்றிலும் அறிந்தும் மௌனியாய் 

இருக்கும் சித்தர்கள்.
உலக நமைக்காக நவ பாஷாணம் சிலை 
அமைத்த போகர்.
வேதங்கள் ,உபநிஷத்கள் ,
பைபிள் ,குரான் ஆகிய 
நன்னெறி காட்டிய இறை நூல் எழுதும்,

இறை தூதர்கள் .

மாயை,சைத்தான், சாத்தான் 
என்றும் 

உலகவாழ்க்கை  போராட்டம் என்றும் 
வாழும் வரை மற்றவர்களுக்காக வாழ வேண்டும் 
வாழு ,வாழவிடு என்ற ஜைனதத்துவம்.
ஆசையை மற  அன்பு காட்டு 
என்ற புத்த தத்துவம்.
எவ்வளவு சேர்த்தாலும் எட்டடி நிலமோ 
அல்லது 
ஒருபிடி சாம்பலோ மிச்சம் 
என பட்டினத்தார் ,ப்ருத்ருஹரி ,
சித்தர் வாக்கு.
அருணகிரிநாதர் வாழ்க்கை ,
கோவலன் கதை,
அனைத்தும் 
இருந்தாலும் 
பக்தி என்ற பெயரில் 
பலகோடி செல்வம் புதைத்து வைத்து ,
தானும் அனுபவிக்காமல்,
நாட்டிற்கும்  பயன்படாமல்
கோடிக்கணக்கில் 
சேர்த்துவைக்கும் 
முதலாளிகள்.
அரசியல்வாதிகள்.
அதை இருக்கும்போதே பலருக்கும் 
பயன் படுத்தலாம்.
விநாயகர் ஊர்வலம் என்ற அண்மைக்கால வழிபாடு.
அந்தக்  கோடிக் கணக்கு விரயம் 
ஒவ்வொரு  தெருவையும் 
சுவர்கமாக்க தூய்மை படுத்த,

கழிவுநீர் தடம் அமைக்க ,
ஏழைகளின் மருத்துவ சிலவு 
என பயன் படுத்தலாம்.
இறைவா!!
மக்களுக்கு நல்வழி  காட்டு.
உன் பெயரால் உன்னை அழகுபடுத்தி, 
அலைகடலில் அழிக்கும் 
அறியாமை பக்தியைப்போக்கு.
புதிய பக்தி முறை, 
நீ படைத்த 
நொடிகள்,
குருடர்கள்,
அனாதைகள்,
நோயாளிகள்,
பசிப் பிணி  உள்ளவர்கள்.
கழிவு நீர் ஓடும் 
மேடுபள்ள புது நகர்கள் 
அனைத்தும் 
பயன் பெற 
கருணைகாட்டு.
நீ விரும்பும் பக்தி 
வால்மீகி,
துளசி,
துருவன்,
வள்ளுவர் 
அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் 
நபி ,
ஏசு,
ஜைனர் 
புத்தர் 
என்றால் 
இந்த மாயை பக்தி 
உன் அழகு சிலை 
சிதைக்கும் பக்தி 
அரசியலும் சுயநலமும் கலந்த பக்தி.
இதை மாற்றும் 
சிந்தனை  தா!1
இறைவா!
விநாயகா!





கருத்துகள் இல்லை: