சனாதன தர்மம்.
தர்மம் சார்ந்த கதைகள்
சொல்லப்பட்ட கதைகள்
மீண்டும் மீண்டும்
சொல்லப் படவேண்டிய கதைகள்.
ராமாயணம்,மகாபாரதம்
வால்மீகி இராமாயண மாகவே
இருந்திருந்தால்
பலருக்கு அது புதிராகவே இருந்திருக்கும்.
துளசிதாசர் ராமசரிதமானஸ் எழுதிய பின்
இல்லந்தோறு ம் படிக்கப்பட்டது.
இலக்கிய ராமாயணம் படித்து தெரிந்தவர்களை விட
கிராமியப் பாடல்களில் தெரிந்து கொண்டவர்கள் அதிகம்.
அதனால் தான் ஆன்மீகவாதிகள் செய்யும்
தவறுகளை
"படிப்பது இராமாயணம் ,இடிப்பது பெருமாள் கோயில் ""
என்ற பழமொழி வந்தது.
சனாதன தர்மத்தில்
இறை நம்பிக்கை ஒன்றே ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருவன் கொடியவன் என்றால் அவன் ஜாதகப்படி
அவன் பிறந்த நேரம் அப்படி என்பர்.
பச்சைக்கிளி கூண்டில் இட்டு வளர்த்தல்
அடுத்த பிறவியில் சிறை தண்டனை என்பர்.
அவன் செய்த தவறுக்கு இப்பிறவியில்
தண்டனை இல்லை என்ற கருத்தல்ல.
இப்பொழுது தவறு செய்யாதே என்று பொருள்.
ஒருவன் வறுமையில் வாடினாலும்
அவன் விதி என்பர்.
ஒருவன் செல்வச்செழிப்பில் இருந்தால்
அவன் செய்தபுண்ணிய மென்பர்.
செல்வந்தனுக்கு துன்பம் ஏற்பட்டால்
அவன் சம்பாதித்த பணம்
பாவப்பட்ட பணம் என்பர்.
ஒருவனுக்குப் பதவி வந்தாலும்
பூர்வ ஜன்ம பலன் என்பர்.
அவன் தவறு செய்து
வேலை இழந்தால்
ஆண்டவன் கொடுத்த அதிர்ஷ்டம்
அவனாக கெடுத்துக் கொண்டான்
அறிவிருந்தும் அவன் விதி
அறிவுகெட்ட செயல் செய்து
மாட்டிக்கொண்டான் என்பர்.
விபத்தில் இறந்தால்,
எமன் அவனுக்கு வாகன
உருவத்தில் வந்துள்ளான் என்பர்.
ஒவ்வொரு உயர்வுக்கும் வீழ்ச்சிக்கும்
இறைவனே காரணம் என்பர்.
மகாபாரதத்தில் கூட வீரர்களின்
கௌரவர்களின் மரணம்
சிந்திய ரத்தம் .
அனைத்தும் விஷ்ணுவே என்பர்.
அனைத்துக்கும் மூலம் ஆதிமூலம்.
இதிலும்
ராமாவதாரமும் க்ரிஷ்ணாவதாரமும்
அதில் வரும் பாத்திரங்கள்
ஆண்டவன் அனுக்ரஹத்தால்
என்பர்.
சிவபுராணத்தில்
நெற்றிக்கண்ணில்
தோன்றியவன்
கார்த்திகேயன் .
கார்த்திகைப் பெண்களால்
வளர்க்கப்பட்டான்..
ஐயப்பன்
சிவன் -விஷ்ணு விற்குப்பிறந்தவன்.
சீதை பூமியில் இருந்து எடுக்கப்பட்டவள் .
ஆண்டாள் பூங்காவனத்தில் தோன்றியவள்.
சங்கராச்சாரியாரின் அத்வைத்துவம்
நான் கடவுள் என்பது
படிக்காத கபீர் தோஹையில்
கூறினார்.
ஆனால் அவர் ஒரு சாதுவின்
ஆசிர்வாதத்தால்
தோன்றியவர்.
இன்று
ஷீரடி சாய் பகவான் உலகத்தில்
கோடிக்கணக்கான மக்களால் போற்றப்படுபவர்.
ஆனால் அவரது பிறப்பு ரகசியமானது.
ஏசுநாதரின் பிறப்பில் அவரது அன்னை முற்றிலும்
கன்னியாகவே இருந்துள்ளார்.
தெய்வப் பிறவிகள்,தெய்வீக நூல்கள்
அனைத்தும் என்றென்றும் மாறாத் தன்மை வாய்ந்தவை.
அதுதான் உலகில் நிலையான கோட்பாடுகள்.
அறிவியல் உண்மைகள் கண்டுபிடிப்பு க ள்
மாற்றமும் மன சலனமும் ஆசைகளும்
விபத்துகளும் ஏற்படுத்தி துன்பங்களை
இன்பங்கள் போல் தந்து
அழிவைத் தருபவை.
முன்னேற்றம் என்று இருந்தால்
மனம் திருப்தியைத் தரவேண்டும்.
அறிவயல்முன்னேற்றம்
மனநிறைவைத் தருகிறதா?
எதுவுமே புரியாமல் ஒரு ரகசியமே
ஆன்மிகம்.
அதை ஆழ்ந்து புரியாத
ஒரு மேற்போக்கான பார்வை நாத்திகம்.
.
**********************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக