ஞாயிறு, ஏப்ரல் 07, 2013

நீதிபதிகள் மனிதாபிமானத்துடன் தீர்ப்புவழங்கவேண்டும்.

 இன்றைய தினமலர் செய்தி--தனியார் பள்ளிகளில் 25%மாணவர்கள் சேர்க்கை ஏழைகளுக்கு வழங்கவேண்டும் என்று.

இதற்கு மறைமுகமான பொருள் அரசுப்பள்ளி தரம் உயராது.இயக்குனர்,இணை ,உதவி இயக்குனர்,மாவட்டக்கல்வி அதிகாரி,உதவி பெரும் பள்ளிகளின் நிர்வாகம் ,அதிகம் ஓய்தியம் பெறும்  ஆசிரியர்கள். பள்ளிகள் மூடும் நிலை. மனசாட்சி நேர்மை இல்லா உத்தரவு.
மறைமுகமாக பள்ளிகள் ஏழைகள் நடத்தக்கூடாது. அரசியல் வாதிகள் நடத்தவேண்டும்.பெரும் முதலாளிகள் நடத்தவேண்டும்.

இறைவன் உள்ளானா?என்ற ஐயம் இந்தமாதிரி சூழலில் ஏற்படுகிறது. சந்தேகம் வருகிறது.நீதிதேவன் மீது.

50 ஆயிரம் நன்கொடை. பள்ளிமுதல்வர்களைப் பார்க்கமுடியாது. பிப்ரவரி மாதாம் விண்ணப்பம் வழங்கி,ஏப்ரல் மாதம் சேர்க்கை முடிவு. பின்னர் பரிந்துரை.

ஏழைகளுக்காக ஏழைகள்  நடத்தும் பள்ளிகள்.குறைந்த கட்டணம். ஆசிரியர்கள்  குறைந்த ஊதியத்தில் கடும் உழைப்பு.

நிர்வாகத்தினர்  வரும் வருமானத்தில் பள்ளியை மேம் படுத்துகின்றனர்.
வருமானம் குறைந்துள்ளவர்களுக்கு  இப்பள்ளிகள் வரப்பிரசாதம்.

பலருக்கு வேலைவாய்ப்பு. தாங்கள் கற்ற கல்வி மற்றவர்களுக்கு உதவட்டும் என்று  என்னும் தொண்டுள்ளம்.
  மக்களை மடையர்களாக்கும் அரசு; அரசுப்  பள்ளிகளில்
ஆசிரியர்கள் வருவார்கள் பாடம் நடக்கும்;தரம் உயர்த்தப்படும் என்ற  உத்திரவாதம் கொடுக்க முடியாத கல்வித்துறை.
எத்தனை பள்ளிகள் மூடும் நிலை. எந்த தனியார் பள்ளி யாவது மூடும் நிலை ஏற்பட்டுள்ளதா?

அரசியல்வாதிகள் பள்ளிகள் திறக்க அங்கீகாரம் என்ற போர்வை; இடவசதி இல்லை; இது மக்களுக்குத் தெரியாதா? இடவசதியுடன் கூடிய அரசு அரசு உதவி பெரும் பள்ளிகளின் சேர்க்கைக்கு முயற்சிக்காமல்  தனியார்களை
கட்டாயப்படுத்துவது கல்வித்துறையின் இயலாமை.

 பள்ளிகள் நடத்தக்கூடாது என்பது நிலம் வேண்டும்.பெரிய வசதிகள் வேண்டும் என்பது. தங்கள் குழந்தைகள் படிப்பு பெற்றோர் நிர்ணயம் செய்வது.பெற்றோர்கள்  தங்கள் குழந்தையின் படிப்புக்காக  படும் துயரம்
மன வேதனைகள் அதிகம்.

இச்சூழலில் திரைப்பட நாயகர்கள் அனைவருமே கதையில் போக்கிரிகள்.படிக்காதவர்கள்;காதலுக்குத் துணை போகிறவர்கள்.சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு  காவல்துறை,அரசாங்கம் பாதுகாப்பில்லை  என்ற கதைகள்.

இந்நிலையில் எத்தனை அரசு உதவிபெற்று பல ஆண்டுகளாக நடத்தப்படும் பள்ளிகள் சென்னையில் அதிகம் விளையாட்டுமைதானம் கிடையாது.

தங்கள் வசதிக்காக ஏழைகள் நடத்தும் பள்ளிகளின் மீது கைவைப்பது அநீதி.

நீதிபதிகள் மனிதாபிமானத்துடன் தீர்ப்புவழங்கவேண்டும்.



செவ்வாய், ஏப்ரல் 02, 2013

இறைவனைப்பற்றிய சிந்தனைகள்.

இறைவனைப்பற்றிய  சிந்தனைகள்.

  1. இறைவன் உள்ளானா? உள்ளான் என்பதே பெரும்பான்மை.
  2. இந்த ஐயம் எழ  காரணம்?=எண்ணங்கள் நிறைவேறாதது.
  3. வேறு?==சமுதாய நிகழ்வுகள்.பொருளாதார/ஆரோக்ய/அழகு  வேற்றுமைகள்.
  4. வேறு :-தவறு செய்பவர்கள் இவ்வுலக சுகங்கள் அனுபவித்தல்.நேர்மையாளன் இன்னல் படுதல்.


  5. வேறு :  அதிகாரிகள்,அமைச்சர்கள் அரசாங்க ஊழியர்கள் ஊழல் கண்டும் காணாமல் இருப்பது, இவைகளுக்குத் துணை போவது.
வேறு : எதிர் பாரா விபத்து./அல்ப ஆயுசு/

     மனிதனுக்குள் இறைவனைப்பற்றிய ஐயங்களை அதிகரிக்கச்செய்யும் ஆன்மிகம்:

  1. ஆலயங்கள் புனிதமானவை.நல்ல எண்ணங்களை /ஆரோக்ய அலைகளை எழுப்பும் இடம்.இன்று நகரங்கள்எல்லை விரிவு படுத்தப்படுவதால் மக்கள் வேலைப்பளு அதிகரிப்பதால் ஆலயங்கள் புதிதாக எழுப்பப் படுகின்றன. அங்குதான் ஆன்மிகம் தழைக்கிறதா ?மனிதனை வேறுபடுத்துகிறதா ? என்ற ஐயம்.
  2. ஜாதிகளின் அடிப்படையில் கோயில்கள்.ஒரு ஜாதியினரின் கோவிலுக்கு வேறு ஜாதியினர் சென்றால்  மனதில் ஒரு சஞ்சலம் தான்.
  3. எந்த இறைவனைக் கும்பிடுவது என்பதில் குழப்பம்.தாத்தா சொல்லும் விநாயகரா?,பாட்டி சொல்லும் காளியா ?,அம்மா சொல்லும் மாரியா ?.அப்பா சொல்லும் ஐயப்பனா?மாமா சொல்லும் சிவனா ?மாமி சொல்லும் விஷ்ணுவா?
  4. விளம்பரங்கள் கவரும் பல சாமியார்களா?அவர்கள் கூறும் தெய்வங்களா?
  5. ஒருமுறை சத்யா சாயிபாபா தன்  சொற்பொழிவில் , ஒவ்வொருவரின் பேச்சு சாதுரியத்தால் ஆன்மீக  சொற்பொழிவுகளால் மனிதமனம் இறைவனை வழிபட இங்கும் அங்கும் அலைபாய்கிறது.இறைவனை வழிபட  மன ஒருமைப்பாடு அவசியம்.அது எங்கே இங்கே நடக்கிறது.எவ்வளவு ஆதர்ஷமான சாயியின் சாய்ராமின் உணர்வுபூர்ணமான  வெளிப்பாடு.
  6. அவர் பிரார்த்தனை,ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை மதங்களை இணைக்கும் பாலமாக இருக்கிறது.மனித உள்ளங்களில் சமத்துவம், சகோதரத்துவம்,மனித நேயம்,மனித ஒற்றுமை காணப்படுகிறது. மத ஒற்றுமை,மதங்களின் நல்லிணக்கம் காணப்படுகிறது.அங்கு ஒழுக்கத்திற்கு முதலிடம். பிரசாத தட்டைக்கண்டு எழுந்து ஓடும் தள்ளு-முள்ளு, தில்லு-முல்லு  கிடையாது.அமைதி, அமைதி, அமைதி.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி  தான்.
  7. திருப்பதி ஆண்டவன் மிகவும் சக்தி வாய்ந்தவன். ஆனால்  அங்கு நடக்கும் மூலஸ்தானம்  செல்லும் இடிபாடுகள் மறுபடியும் செல்லவேண்டாம் என்ற எண்ணம்.ஆனால்...
தரிசனம் முடிந்ததும் அனைவரின் பிரார்த்தனை ஒரு இறை சக்தி ஒரு ஈர்ப்பு

மீண்டும் அடுத்த ஆண்டு வர கருணை புரியவேண்டும் என்பதுதான்.
அவ்வாறே பழனிக்கு செல்வோருக்கும் ஒரு ஈர்ப்பு.

இருப்பினும்  இரண்டு புனித ஸ்தலங்கலுமே மிக சக்திபெற்ற ஸ்தலங்களாக 
இருப்பினும் வணிக ஸ்தலங்களாக மாறிவருவது அலௌகீகத்தைவிட  லௌகீகத்திற்கு  ஊக்கமளிக்கிறதாகவே  தோன்றுகிறது.இதற்கு ஆன்மீகப்பெரியோர்கள்  ஒன்றுபட்டு முயற்சிக்கவேண்டும். இறைவன் உள்ள இடங்கள் புனிதம் கேட்டால் வீட்டிற்கும்,நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் கேடு.
அராஜகங்கள் அதிகமாகும்.

பக்தர்கள் ஆலயங்களுக்குள் இருப்பதைவிட கடைதெருவில் அதிகநேரம் செலவழிப்பது எதிர்கால  வாரிசுகள் அறிவுப்பெருக்கம் உள்ளவர்களுக்கு ஆன்மீக நாட்டத்தை குறைத்துவிடும்.பக்தி அதிகரிப்பது ஒரு மாயத்தோற்ற மாகி  இறைவனின் மேல் உள்ள அன்பு,பற்று,சிரத்தை குறைந்து ஆடம்பர பகட்டு காட்டுவதாக மாறிக்கொண்டுள்ளது.உண்டியலில் பணம் சேர்வதால் பக்தியா?உள்ளத்தில் உண்மைவேண்டாமா?சம்பாதிக்கும் பணம் நேர்மையாக இருக்கவேண்டாமா?

ஊழல் பணத்தில் பிராயச்சித்தம் /ஹோமம்/யாகம் இறைவன் அருள் என்றால்......
ஆன்மீக ஐயங்கள் அதிகரிக்கும்.அதர்மம் தலைத்தோங்கும்.வானம் பொய்க்கும்.



இறைவன் இல்லை-இல்லை.ஏன் ?யாருக்கு?


இறைவன் இல்லை-இல்லை.ஏன் ?யாருக்கு?

ஒரு வாடிக்கையாளர் அடிக்கடி ஒரு சிகை அலங்காரக் கடைக்கு செல்வது 
வழக்கம்.அங்கு பல விஷயங்கள் பேசப்படும்.அரசியல்,உள்ளூர்  பிரச்சனைகள் .ஊழல்  மேலும் பல. ஒருமுறை இப்படியே பேச்சு தொடரும்போது 
நாவிதர் இறைவனைப்பற்றி பேச ஆரம்பித்தார். வாடிக்கையாளரும் மௌனமாகக் கேட்டார்.

நாவிதர் :- இறைவன் உண்மையில் இருக்கிறாரா?சாமி. இல்லை.இல்லவே இல்லை.இறைவனுக்குமுன் அனைவரும் சமம்.ஏற்றத்தாழ்வு இல்லை.இதெல்லாம் பொய்.கடவுள்னு ஒருத்தர் இருந்தால் அனைவரும் சமமாகத்தானே இருக்கவேண்டும்.பணக்காரர் ,ஏழை,ஆரோக்கியம் உள்ளவர்,நோயாளி,குருடு,செவிடு, ஊமை ,அநாதை,மலடு,
என்ன கொடுமை.கடவுள்னு இருந்தா அநீதி,ஊழல்,கற்பழிப்பு போன்றவை நடக்குமா?யாருக்கு சாமி இறைவனின் மேல் பயம் இருக்கு.தப்பு நடக்குதே?
கடவுள் இல்லை.

வாடிக்கையாளர் மௌனமாக முடி அலங்காரம் முடிந்ததும் வெளி ஏறினார்.

சிறிதுநேரம் ஆனதும் திரும்பி வந்து  நாவிதரிடம் 
இந்த ஊரில் நாவிதர் இல்லை.நீர் நாவிதர் இல்லை. என்றார்.
நாவிதருக்கு ஒன்றும் புரியவில்லை.நான்தான் இருக்கிறேனே.என்றார் நாவிதர்.
நீர் இருக்கிறீர். அங்கு பாரும்.தாடி,மீசை,பல வருடங்களாக அவர் சுற்றுகிறார்.
நாவிதர் இல்லை. நீர் நாவிதர் இல்லை.இருந்தால் ஏன்  அப்படி அவர் தாடி -மீசை உடன் சுற்றவேண்டும்.
நாவிதர்: அவர் என்னிடம் வந்தால் நான் அவருக்கு முக சவரம்,முடி அலங்காரம் செய்திருப்பேன், அவர் வரவில்லை.

வாடிக்கையாளர்:-அவர் வரவில்லை.நீர் வெட்டவில்லை.ஆனால் நாவிதர் இருக்கிறார். இல்லையா?நீர் இருக்கிறீர்?
அப்படித்தான் இறைவன் இருக்கிறார். அவரை அணுகி உள்ளன்போடு 
வணங்குபவர்கள் இல்லை. உமக்குத் தெரியுமா?மனிதர்கள் யாரும் முழு மகிழ்ச்சியுடன் இல்லை. காரணம் அனைவருமே பாவிகள்.ராமாவதாரம்,கிருஷ்ணாவதாரம்  மனித உருவில் இறைவன்.அவர்களும் தர்மத்தை வெல்ல அதர்மம் செய்துள்ளனர்.
அறிவு,ஞானம், மெய் ஞானம் அனைத்தும் பெற்ற மனிதன் செய்யும் செயலுக்கேற்ற தண்டனை அனுபவித்துவருகிறான்.செல்வச் செழிப்புடன் இருப்பவர்களும் ஆனந்தமாக இல்லை.அவர்கள் ஆலய உண்டியல்,பரிகாரம்,ஹோமம் போன்று வெளிப்பகட்டில் கௌரவம் பக்தி என்று வாழ்கின்றனர்.மனதில் வேதனை இல்லாதவர் யார்?கடவுள் படைத்த முள்ளை  ஒதுக்கும்  மனிதன் ,மலரை விரும்புகிறான்.ஆனால் ,
தன சுய நலத்தால் தவறான செயல்கள் செய்கிறான். தவறான வகையில் சொத்து சேர்க்கிறான்.
முற்றும் துறந்த  முனிவர்களுக்கும் துன்பம்.அப்படி இருக்க இறைவன் மேல் 
என் குற்றம் சாட்ட வேண்டும்.மனிதன் விஷம் என்றால் ஒதுங்குவதுபோல் ,
தீயவைகளை ஒதுக்கி  தனக்கு இறைவன் கொடுத்த கடமையை பாரபட்சமின்றி செய்தாலே இறைவனுக்கு ஆற்றும் தொண்டு.
ஊழல் செய்த பணத்தை உண்டியலில் போட்டாலோ பரிகாரம் செய்தாலோ பலன் இல்லை.பல யாகங்கள் செய்த தசரதருக்கு நிம்மதி இருந்ததா?பாண்டவர்களுக்கு இருந்ததா?ராமருக்கு கிருஷ்ணருக்கு இருந்ததா?
கடவுள் இருக்கிறார்.
உண்மையாக அவரை அணுகுபவர் இல்லை.
மனத்தூய்மை,மனசாட்சிப்படி
 நேர் வழியில் 
அறவழியில் ஆண்டவனை 
துதித்தால் துருவன்,பிரஹலாதன் ,
கண்ணப்பர்,நந்தனார்,தியாகராஜர் போன்று 
இறைவனின் அருட்பார்வை,
நேர்காணல் கிட்டும்.
இறைவன் உள்ளான்.


;-

திங்கள், ஏப்ரல் 01, 2013

நீயா நானா ,தனிக்குடித்தனமா? கூட்டுக்குடித்தனமா/?என்ற வினா?

நீயா நானா ,தனிக்குடித்தனமா? கூட்டுக்குடித்தனமா/?என்ற வினா?

  எனது  குடும்பம் பெரிய கூட்டுக் குடும்பம். என் அம்மா. பெரியம்மா,சின்னம்மா
பெரியப்பா,சித்தப்பா,அப்பா,இதில் அப்பா மட்டும் சம்பாதிப்பவர். அடுப்படியில் தோசை ஊற்றும் போதே பிய்த்து சாப்பிடுதல்,தங்கள் குழந்தைக்கு முதலில் அழைத்தல், தட்டில் அதிகமாக பரிமாறிவிட்டு அந்த மீதியை சாப்பிடுதல்.இதில் சில சமயங்களில் சில குழந்தைகளும் அம்மாவும் பட்டினி.

இதற்குப் பொருளாதாரமும் சுயநலமும் காரணம். பின்னர் ஆடைகள் வாங்குதல்,பக்கத்துவீட்டுடன் நட்பு,எவ்வளவோ கஷ்டங்கள்.

இதில் சுயநலம் என்பதை விட பாதிப்புகள் அதிகம்.சிலர் செய்யும் கொடுமைகள் அவர்கள் பேச்சு, நடத்தை,நடிப்பு ஊரில் உள்ளவர்களும் சோம்பேறியாக  உழைக்காமல் இருப்பவர்களுக்கே.பாவம் நல்லவன். அவன் நேரம் வேலை கிடைக்கலே. அண்ணன் கள்  மனைவிதானே.குழந்தைகள்தானே என்று பேசும் அளவிருக்கு அக்கம் பக்கத்தில் சொல்லி  மயக்கும் உறவினர்கள். உழைக்கும் அப்பா,அம்மா,குழந்தைகள் தான் கஷ்டப்படுகின்றனர்.
நாங்கள் கூட்டுகுடும்பத்தில் தியாகம் தான் அதிகம். வேதனைகள் தான் மிச்சம்.
ரத்தபாசம் காணப்படவில்லை. பஞ்சபாண்டவர்கள் பங்காளிப்பகை  ஏன் ?
ராமன் காட்டுக்குச் சென்றது ஏன் ? ஔரங்க ஜீப் பேரரசர். ஆனால் அவர் கூட்டுக் குடும்பம் அதிகார வெறி.
ஒரு சிறிய குடும்ப சுற்றில்  எப்படி? வருமானம் வேலை இல்லா காலத்தில்
சரிப்பட்டுவந்தது  கூட்டுக்குடும்பம். ஆனால் ஒவ்வொருவரும் சம்பாதிக்கும்
காலத்தில்   சரிப்பட்டுவருமா? ஒருவர் பார்க்கும் தொலைக்காட்சியையே மற்றவர் பார்க்க முடியுமா? ஒருவர் விருப்பம் மற்றொருவர் விருப்பம்...
மிகப்பெரிய சகிப்புத்தன்மை இல்லாமல் இன்றைய சூழலில் கூட்டுக்குடும்பம்
சரிப்பட்டுவராது.



ஞாயிறு, மார்ச் 31, 2013

"பகவானே ! சங்கீதத்தால் முக்தி அடைய முடியுமா?



ரமணர்  தமிழ் நாட்டின் மகான்.திருவண்ணாமலையைத்  தவிர எங்கும் செல்லாமல்  உல்-வெளி நாட்டு சீடர்களைக் கவர்ந்து ஆரதனைக்
குறி யவரானார்.

ஒரு பக்தை :(ரமணரிடம்)  "பகவானே ! சங்கீதத்தால் முக்தி அடைய முடியுமா?

                                          வேறு சாதனையும்  வேண்டுமா?

ரமணர்:(மௌனம் )

பக்தை:-தியகாஜாதிகளைப்போன்ற மகான்கள்  சங்கீதத்தைப் பாடி தானே   முக்தி அடைந்தார்கள்.?

பகவான்: தியாகராஜாதிகளைப்  போன்றவர்கள் மகான்கள் பாடிப் பெறவில்லை.  பெற்றதைப் பாடினார்கள்.அதனால்  அந்தச்  சங்கீதம் ஜீவனுள்ளதாக நிலைத்து நிற்கிறது. அதைத்தான்  நாதோபாசனை என்று சொல்லப்படுகிறது.என்று புன்சிரிப்பு .

எவ்வளவு பெரிய உண்மை.எளிய பொருளாழம்  மிக்க பதில்.

சனி, மார்ச் 30, 2013

மன அடக்கம்


மனிதர்கள்   நடப்பதெல்லாம் நாராயணின் செயல்  என்று இருந்துவிட முடியாது. ஆகையால் தான் ,

"தெய்வத்.தால்  ஆகாதெனினும்  முயற்சி
 தன்  மெய்வருத்தக்  கூலி தரும்" -என்றனர்.

ஆனால் முயற்சி இன்றி வருவதென்பது ,

நோய். இதில் மன நோய் என்பது ஞானக்  கண் பெற்ற மனிதனுக்கு

அக்ஞானம்  என்றே கருதவேண்டும். இருப்பினும் வேதனைகள் அதிகம் தரும்

மனம்  ஏன்?

மனக்கோட்டை  என்பர்.எளிதாகக் கட்டமுடியும்.

நாயகனாக இருந்து  நாயகியின் கற்பனை,அரசனாக கற்பனை,தான் நினைப்பதெல்லாம்  சாதிக்கும் கற்பனை . இவை எல்லாம் எளிது.ஆனால்,
நடைமுறை மனப்பால் குடிபதைப்போல்  இருக்காது.வாயுவேகம் மனோவேகம்  என்பர்.

நாம் ஞானத்தால் மனதை அடக்கவேண்டும்.
மனிதர்கள் வாழ்க்கையில்  பல போராட்டங்களை செய்யவேண்டி உள்ளது.
ஒருவனுக்கு அறிவு பற்றாக்குறை என்றால் ஒருவனுக்கு ஆனந்தம்.
ஒருவனுக்கு  ஆயுள் குறை;ஒருவனுக்கு ஆரோக்கியம்.
ஒருவனுக்கு ஆஸ்தி  இல்லை;ஒருவனுக்கு ஆதரவு இல்லை;
ஒருவனுக்கு நாதி இல்லை .
ஒருவனுக்கு வேலை இல்லை. ஒருவனுக்கு வேலை பளுவால் ஓயவில்லை.
உழைப்பவனுக்கு சோறில்லை;அவனை சார்ந்தோருக்கு ஓய்வும் உண்டு ;சோறும் உண்டு;
பணம் படைத்தோருக்கு  சந்தானம் இல்லை; சந்தானம் உள்ளோருக்கு லக்ஷ்மி கடாட்சம் இல்லை.

நேர்மையில்லை;அதிகாரம் உண்டு; நேர்மை உண்டு அதிகாரம் இல்லை.
இதுதான் வாழ்க்கை;


திங்கள், மார்ச் 25, 2013

jeya/sun/vijay t.v. shows

பாரதம்

இன்று  மக்கள்/அரட்டை  அரங்கத்திலும் சரி, நீ யா நானா? இரண்டிலுமே பாரதத்தின் 

ஊழல்,உணவு முறை இரண்டுமே இளைஞர்களை வெறு படையச்செய்கிறது.

எண்ணெய்  கலப்படம்,அதிரசம்.பஜ்ஜி பிழிந்தால் எண்ணெய்  வழியும். கொழுப்பு அதிகமாகும். ஊழல் .அதில் ஒரு +2 மாணவியின் பேச்சு மக்கள் அரங்கத்தில்  அனைவரையும் கவர்ந்தது. வில்லன்,நாயகன். நாயகன் ராமனின் நற் குணங்கள் .ராவணனின் நற்குணங்கள். ராமனின் பலகீனங்கள்.இவை இருந்தால் தானே நாயகன் உயர்த்தப்படுவான். அப்பொழுது வில்லன் ராவணனின்  வேத ஞானம்,சிவ  பக்தி ,வீரம்,போன்ற உயர் குணங்களையும் அதிகம் சுட்டிக்காட்டவேண்டும் .தடைகளை மீறி முன்னேறவேண்டும் என்ற பேச்சு பாராட்டும் படியாக இருந்தது.அரட்டை அரங்கம்  தொழில் நுட்பக்கல்லூரி பொறியியல் படிப்பின் உயர் கட்டணம்,ஊழல் பற்றி அமைந்தது. கலப்பட உணவு,தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியரின் குறைந்த ஊதியம்,.

  திரு .t.raajendar  அவர்கள் வெல்லம்  சாப்பிடாதே என்ற ஒரு கதை நபிகள் நாயகம்  கூறியதாகக் கூறினார். அது ராமகிருஷ்ண பரமஹம்சர்  கூறியதாக
நான் படித்த நினைவு.

ஒருநாள் ஒரு பெண் தன மகனுடன் பரமஹம்சரை சந்தித்து தன் மகன் அதிகம்
வெல்லம்  சாப்பிடுவதாகவும் சாப்பிடவேண்டாம் என்ற உபதேசம் செய்யும் படியும் வேண்டினாளாம். அதற்கு பரஹம்சர் 10 நாள் கழித்து வரும்படி கூற
அதன் படியே பத்துநாள் கழித்து வந்ததும்
 அந்த சிறுவனிடம் வெல்லம்  சாப்பிடாதே  என்று உபதேசம் செய்தாராம் சீடர்கள் இதைப்பற்றி கேட்டதற்கு தானே அதிகம் வெல்லம்  சாப்பிட்டுவந்தேன்..நான் நிறுத்திய பிறகுதானே உபதேசம் செய்யமுடியும்.

ஞாயிறு, மார்ச் 24, 2013

कंदर अनुभूति --கந்தர் அனுபூதி =அருணகிரிநாதர் =अरुणगिरिनाथर वास्तविक ज्ञान =மெய் ஞானம்

कंदर अनुभूति --கந்தர் அனுபூதி =அருணகிரிநாதர் =अरुणगिरिनाथर

वास्तविक ज्ञान =மெய் ஞானம்

கூஹா! என என் கிளை கூடி யழப்
போகா வகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல !வேலவா!நாலுகவி
த்யாக !கரலோக சிகாமணியே!

மரண சமயத்தில் வருத்தப்படக்கூடாது  என்பது மெய் அறிவு  என்ற உபதேசத்தை  கந்தப்பெருமான் காட்டிய மெய் ஞானத்தை அருணகிரிநாதர்
இப்பாடலில் கூறுகிறார். உற்றார் உறவினர் புடை சூழ அழுகுரல் எழுப்பும் போதும்  அவர்களுடன் சேர்ந்து அழக்கூடாது  என்ற மெய் ஞானம் கந்தன் கருணையால்  கிடைத்தது என்கிறார்.

नाते-रिश्ते  रोते ,मरणासन्न के वक्त,
तब  बिना रोये,दृढ़ रहने के उपदेश ज्ञान
हे मुरुगा !तूने दिया। कैसे कहूं ?
हे नागाचाल्वासी!बाण दल के नायक
देवलोक  के शिरो मणि !
चार प्रकार की कविताएँ  रचित करने
की कृपा कटाक्ष कर



சனி, மார்ச் 23, 2013

வியப்பு

வியப்பு

நீதிமன்றம்  ஒருவரை குற்றவாளி என்ற பிறகு
பொது மன்னிப்பு என்று அமைச்சரும் ,பிரபலமானவர்களும் குரல் எழுப்புவது
திரைத்துறைக்கு மட்டுமா?குண்டு வெடிப்பு சாதாரண குற்றமா/
புரியவில்லை. வியப்பும் வேதனையும் தருகிறது.
குற்றம் செய்யவில்லை என்று யாரும் கூறாத  பொது,
பொது மன்னிப்பு  கோருவது ஏன் ?
யாராவது விளக்கம் கூறுங்களேன். இதுதான் கருத்து மற்றும் செயல் சுதந்திரமா? பணமும் திரைப்பட புகழும் போதுமா?