செவ்வாய், ஏப்ரல் 02, 2013

இறைவனைப்பற்றிய சிந்தனைகள்.

இறைவனைப்பற்றிய  சிந்தனைகள்.

  1. இறைவன் உள்ளானா? உள்ளான் என்பதே பெரும்பான்மை.
  2. இந்த ஐயம் எழ  காரணம்?=எண்ணங்கள் நிறைவேறாதது.
  3. வேறு?==சமுதாய நிகழ்வுகள்.பொருளாதார/ஆரோக்ய/அழகு  வேற்றுமைகள்.
  4. வேறு :-தவறு செய்பவர்கள் இவ்வுலக சுகங்கள் அனுபவித்தல்.நேர்மையாளன் இன்னல் படுதல்.


  5. வேறு :  அதிகாரிகள்,அமைச்சர்கள் அரசாங்க ஊழியர்கள் ஊழல் கண்டும் காணாமல் இருப்பது, இவைகளுக்குத் துணை போவது.
வேறு : எதிர் பாரா விபத்து./அல்ப ஆயுசு/

     மனிதனுக்குள் இறைவனைப்பற்றிய ஐயங்களை அதிகரிக்கச்செய்யும் ஆன்மிகம்:

  1. ஆலயங்கள் புனிதமானவை.நல்ல எண்ணங்களை /ஆரோக்ய அலைகளை எழுப்பும் இடம்.இன்று நகரங்கள்எல்லை விரிவு படுத்தப்படுவதால் மக்கள் வேலைப்பளு அதிகரிப்பதால் ஆலயங்கள் புதிதாக எழுப்பப் படுகின்றன. அங்குதான் ஆன்மிகம் தழைக்கிறதா ?மனிதனை வேறுபடுத்துகிறதா ? என்ற ஐயம்.
  2. ஜாதிகளின் அடிப்படையில் கோயில்கள்.ஒரு ஜாதியினரின் கோவிலுக்கு வேறு ஜாதியினர் சென்றால்  மனதில் ஒரு சஞ்சலம் தான்.
  3. எந்த இறைவனைக் கும்பிடுவது என்பதில் குழப்பம்.தாத்தா சொல்லும் விநாயகரா?,பாட்டி சொல்லும் காளியா ?,அம்மா சொல்லும் மாரியா ?.அப்பா சொல்லும் ஐயப்பனா?மாமா சொல்லும் சிவனா ?மாமி சொல்லும் விஷ்ணுவா?
  4. விளம்பரங்கள் கவரும் பல சாமியார்களா?அவர்கள் கூறும் தெய்வங்களா?
  5. ஒருமுறை சத்யா சாயிபாபா தன்  சொற்பொழிவில் , ஒவ்வொருவரின் பேச்சு சாதுரியத்தால் ஆன்மீக  சொற்பொழிவுகளால் மனிதமனம் இறைவனை வழிபட இங்கும் அங்கும் அலைபாய்கிறது.இறைவனை வழிபட  மன ஒருமைப்பாடு அவசியம்.அது எங்கே இங்கே நடக்கிறது.எவ்வளவு ஆதர்ஷமான சாயியின் சாய்ராமின் உணர்வுபூர்ணமான  வெளிப்பாடு.
  6. அவர் பிரார்த்தனை,ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை மதங்களை இணைக்கும் பாலமாக இருக்கிறது.மனித உள்ளங்களில் சமத்துவம், சகோதரத்துவம்,மனித நேயம்,மனித ஒற்றுமை காணப்படுகிறது. மத ஒற்றுமை,மதங்களின் நல்லிணக்கம் காணப்படுகிறது.அங்கு ஒழுக்கத்திற்கு முதலிடம். பிரசாத தட்டைக்கண்டு எழுந்து ஓடும் தள்ளு-முள்ளு, தில்லு-முல்லு  கிடையாது.அமைதி, அமைதி, அமைதி.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி  தான்.
  7. திருப்பதி ஆண்டவன் மிகவும் சக்தி வாய்ந்தவன். ஆனால்  அங்கு நடக்கும் மூலஸ்தானம்  செல்லும் இடிபாடுகள் மறுபடியும் செல்லவேண்டாம் என்ற எண்ணம்.ஆனால்...
தரிசனம் முடிந்ததும் அனைவரின் பிரார்த்தனை ஒரு இறை சக்தி ஒரு ஈர்ப்பு

மீண்டும் அடுத்த ஆண்டு வர கருணை புரியவேண்டும் என்பதுதான்.
அவ்வாறே பழனிக்கு செல்வோருக்கும் ஒரு ஈர்ப்பு.

இருப்பினும்  இரண்டு புனித ஸ்தலங்கலுமே மிக சக்திபெற்ற ஸ்தலங்களாக 
இருப்பினும் வணிக ஸ்தலங்களாக மாறிவருவது அலௌகீகத்தைவிட  லௌகீகத்திற்கு  ஊக்கமளிக்கிறதாகவே  தோன்றுகிறது.இதற்கு ஆன்மீகப்பெரியோர்கள்  ஒன்றுபட்டு முயற்சிக்கவேண்டும். இறைவன் உள்ள இடங்கள் புனிதம் கேட்டால் வீட்டிற்கும்,நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் கேடு.
அராஜகங்கள் அதிகமாகும்.

பக்தர்கள் ஆலயங்களுக்குள் இருப்பதைவிட கடைதெருவில் அதிகநேரம் செலவழிப்பது எதிர்கால  வாரிசுகள் அறிவுப்பெருக்கம் உள்ளவர்களுக்கு ஆன்மீக நாட்டத்தை குறைத்துவிடும்.பக்தி அதிகரிப்பது ஒரு மாயத்தோற்ற மாகி  இறைவனின் மேல் உள்ள அன்பு,பற்று,சிரத்தை குறைந்து ஆடம்பர பகட்டு காட்டுவதாக மாறிக்கொண்டுள்ளது.உண்டியலில் பணம் சேர்வதால் பக்தியா?உள்ளத்தில் உண்மைவேண்டாமா?சம்பாதிக்கும் பணம் நேர்மையாக இருக்கவேண்டாமா?

ஊழல் பணத்தில் பிராயச்சித்தம் /ஹோமம்/யாகம் இறைவன் அருள் என்றால்......
ஆன்மீக ஐயங்கள் அதிகரிக்கும்.அதர்மம் தலைத்தோங்கும்.வானம் பொய்க்கும்.



கருத்துகள் இல்லை: