இறைவன் இல்லை-இல்லை.ஏன் ?யாருக்கு?
ஒரு வாடிக்கையாளர் அடிக்கடி ஒரு சிகை அலங்காரக் கடைக்கு செல்வது
வழக்கம்.அங்கு பல விஷயங்கள் பேசப்படும்.அரசியல்,உள்ளூர் பிரச்சனைகள் .ஊழல் மேலும் பல. ஒருமுறை இப்படியே பேச்சு தொடரும்போது
நாவிதர் இறைவனைப்பற்றி பேச ஆரம்பித்தார். வாடிக்கையாளரும் மௌனமாகக் கேட்டார்.
நாவிதர் :- இறைவன் உண்மையில் இருக்கிறாரா?சாமி. இல்லை.இல்லவே இல்லை.இறைவனுக்குமுன் அனைவரும் சமம்.ஏற்றத்தாழ்வு இல்லை.இதெல்லாம் பொய்.கடவுள்னு ஒருத்தர் இருந்தால் அனைவரும் சமமாகத்தானே இருக்கவேண்டும்.பணக்காரர் ,ஏழை,ஆரோக்கியம் உள்ளவர்,நோயாளி,குருடு,செவிடு, ஊமை ,அநாதை,மலடு,
என்ன கொடுமை.கடவுள்னு இருந்தா அநீதி,ஊழல்,கற்பழிப்பு போன்றவை நடக்குமா?யாருக்கு சாமி இறைவனின் மேல் பயம் இருக்கு.தப்பு நடக்குதே?
கடவுள் இல்லை.
வாடிக்கையாளர் மௌனமாக முடி அலங்காரம் முடிந்ததும் வெளி ஏறினார்.
சிறிதுநேரம் ஆனதும் திரும்பி வந்து நாவிதரிடம்
இந்த ஊரில் நாவிதர் இல்லை.நீர் நாவிதர் இல்லை. என்றார்.
நாவிதருக்கு ஒன்றும் புரியவில்லை.நான்தான் இருக்கிறேனே.என்றார் நாவிதர்.
நீர் இருக்கிறீர். அங்கு பாரும்.தாடி,மீசை,பல வருடங்களாக அவர் சுற்றுகிறார்.
நாவிதர் இல்லை. நீர் நாவிதர் இல்லை.இருந்தால் ஏன் அப்படி அவர் தாடி -மீசை உடன் சுற்றவேண்டும்.
நாவிதர்: அவர் என்னிடம் வந்தால் நான் அவருக்கு முக சவரம்,முடி அலங்காரம் செய்திருப்பேன், அவர் வரவில்லை.
வாடிக்கையாளர்:-அவர் வரவில்லை.நீர் வெட்டவில்லை.ஆனால் நாவிதர் இருக்கிறார். இல்லையா?நீர் இருக்கிறீர்?
அப்படித்தான் இறைவன் இருக்கிறார். அவரை அணுகி உள்ளன்போடு
வணங்குபவர்கள் இல்லை. உமக்குத் தெரியுமா?மனிதர்கள் யாரும் முழு மகிழ்ச்சியுடன் இல்லை. காரணம் அனைவருமே பாவிகள்.ராமாவதாரம்,கிருஷ்ணாவதாரம் மனித உருவில் இறைவன்.அவர்களும் தர்மத்தை வெல்ல அதர்மம் செய்துள்ளனர்.
அறிவு,ஞானம், மெய் ஞானம் அனைத்தும் பெற்ற மனிதன் செய்யும் செயலுக்கேற்ற தண்டனை அனுபவித்துவருகிறான்.செல்வச் செழிப்புடன் இருப்பவர்களும் ஆனந்தமாக இல்லை.அவர்கள் ஆலய உண்டியல்,பரிகாரம்,ஹோமம் போன்று வெளிப்பகட்டில் கௌரவம் பக்தி என்று வாழ்கின்றனர்.மனதில் வேதனை இல்லாதவர் யார்?கடவுள் படைத்த முள்ளை ஒதுக்கும் மனிதன் ,மலரை விரும்புகிறான்.ஆனால் ,
தன சுய நலத்தால் தவறான செயல்கள் செய்கிறான். தவறான வகையில் சொத்து சேர்க்கிறான்.
முற்றும் துறந்த முனிவர்களுக்கும் துன்பம்.அப்படி இருக்க இறைவன் மேல்
என் குற்றம் சாட்ட வேண்டும்.மனிதன் விஷம் என்றால் ஒதுங்குவதுபோல் ,
தீயவைகளை ஒதுக்கி தனக்கு இறைவன் கொடுத்த கடமையை பாரபட்சமின்றி செய்தாலே இறைவனுக்கு ஆற்றும் தொண்டு.
ஊழல் செய்த பணத்தை உண்டியலில் போட்டாலோ பரிகாரம் செய்தாலோ பலன் இல்லை.பல யாகங்கள் செய்த தசரதருக்கு நிம்மதி இருந்ததா?பாண்டவர்களுக்கு இருந்ததா?ராமருக்கு கிருஷ்ணருக்கு இருந்ததா?
கடவுள் இருக்கிறார்.
உண்மையாக அவரை அணுகுபவர் இல்லை.
மனத்தூய்மை,மனசாட்சிப்படி
நேர் வழியில்
அறவழியில் ஆண்டவனை
துதித்தால் துருவன்,பிரஹலாதன் ,
கண்ணப்பர்,நந்தனார்,தியாகராஜர் போன்று
இறைவனின் அருட்பார்வை,
நேர்காணல் கிட்டும்.
இறைவன் உள்ளான்.
;-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக