வெள்ளி, நவம்பர் 02, 2012

ஞான மார்க்கம்-1



கபீர்  ஒரு கல்வி அறிவற்ற  கவிஞர்.
 ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக 
அவர்  பாடிய ஈரடிகள், பத்  என்ற பாடல்கள் .

அவர் இறந்தபின் இந்துக்களும் ,முஸ்லிம்களும் 
அவரது உடலை தத்தம் மதச் சடங்குகள் படி 
அடக்கம் செய்ய விரும்பினர்.
ஆனால் அவர் உடல் மறைந்து 
பூக்களாக மாறின.

அவர் இறைவனை அடைய ஞானம் தான் முக்கியம் என்ற 
ஞான மார்க்கம் தோற்றுவித்தவர்.
அவர் கடவுள் ஒன்றே என்ற தத்துவத்தை 
உணர்த்த பாடல் எழுதியவர்.

அவரின் ஒரு பாடல் கருத்துரை கேளுங்கள்:

இரண்டு கடவுள் எங்கிருந்து வந்தார்?
உன்னை, கடவுள்   இரண்டு என்ற பிரம்மையில் 
ஆழ்த்தியவர்  யார்.?
அவருக்கு அல்லா,கேசவன்,ஹரி,ஹஜ் ரத் என்று 
நாமங்கள் வைத்து இருக்கிறார்கள்..
தங்கத்தால் பலவித பெயரில்  நகைகள். 
.
அந்த நகைகளுக்கு தங்கம் தான் மூலப்பொருள்.

அவ்வாறே கடவுளுக்கு ,
பல நாமங்கள் இருந்தாலும்,
கடவுள் ஒருவரே.
ஒருவர் தொழுகை என்றால்,
மற்றவர் பூஜை-அர்ச்சனை. 
இருவரும் ஒருவரே.
அந்த இறைவனை சிலர் மகாதேவன்,
சிலர் முஹம்மது ,
 என்கின்றனர்.
சிலர் பிரம்மம், 
சிலர் ஆதம் என்கின்றனர்.
சிலரை ஹிந்து, 
சிலரை முஸ்லிம் என்கின்றனர்.
எல்லோரும் ஒரே மண்ணில் வாழ்கின்றனர்.
ஒருவருக்கு வேதம் புனித நூல் .
ஒருவருக்கு  குரான்  புனிதநூல்.
ஒருவருக்கு தர்ம குரு  மௌலானா.
ஒருவருக்கு தர்ம குரு பூஜாரி.
ஆனால் எல்லோரும் ஒருவரே.
ஒரே மண்ணில் செய்யப்பட்ட,
பலவித மட்பாண்டங்கள்.
அவைகளுக்குப் பலவித  பெயர்கள்.
ஆனால், ஹிந்து முஸ்லிம் இருவரும்,
கடவுள் ஒருவரே  என்ற உண்மை 
தத்துவத்தை மறந்துவிட்டனர்.
அதனால் இருவரும் 
இறைவனை அ டையவில்லை.
முஸ்லிம் பசுவதை செய்கிறான்/
ஹிந்து  வெள்ளாட்டை வதம் செய்கிறான்.
அதனால் இருவரும்  
தங்கள்  குறிக்கோளை அடையவில்லை.
இந்த வேறுபாட்டினால் இருவரும் 
தங்கள்  வாழ்க்கையை 
வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: