வெள்ளி, நவம்பர் 02, 2012

கபீர். ஞான மார்க்கம் -3


கபீர்.
ஞான மார்க்கம் -3

நீ அறியாமை என்ற முக்காடை நீக்கினால்,

உன் இறைவன் உனக்கு கிடைப்பார்.
அங்குஇங்கு  எனாதபடி 
அகிலத்தில் எங்கும் வியாபித்து 
இருக்கும் இறைவனை ,
நீ சந்தித்து அருள்பெற விரும்பினால்,
கசப்பான வார்த்தைகள் பேசாதே.
செல்வத்தைச் சேர்த்து 
ஆணவமாக இருக்காதே.
பஞ்ச தத்துவங்களால் ஆன,
இவ்வுடல் பொய்யானது.
(நிலம்நீர்நெருப்புகாற்றுஆகாயம்)
அழியக்கூடியது.
ஆகையால் இந்த வெற்று உடலில் 
ஞானம் என்ற விளக்கு ஏற்று.
ஆசனத்தில் அமர்ந்து 
அசையாமல் இரு.
(ஹட யோகம் )
யோக சாதனையில் 
விலைமதிப்பற்ற 
இறைவனை சந்தித்து 
அருள்பெறுவாய்.
அப்பொழுது 
ஆனந்தம் பரமானந்தமே 
உன்னிடம்குடிகொள்ளும்.
உன்மனதில் 
சதா சர்வகாலமும் 
உடலின் ஆறு சக்கரங்களிலும் 
ஆனந்த பேரிகை
 இசைத்துக்கொண்டே 
இருக்கும்.

(குண்டலினி சக்தி ,(அரவ வடிவான இறை ஆற்றல்)
அதுவே பேரானந்தம்.


கருத்துகள் இல்லை: