ஹிந்தி பக்தி இலக்கியத்தில் "கவி விருந்த் "நீதிநூல் எழுதுவதில்
சிறந்தவர். அவர் ஔரங்க ஜீப் அரச கவிஞர்.
அவர் எழுதிய யீரடிகளின் பதவுரை.
.அவ்வாறே துணிச்சல் உள்ளவர்கள் ,எளிய-பலம் இல்லாதவர்கள் போன்று காரியம் செய்யமாட்டார்கள்.
அவர்கள் தங்கள் துணிச்சலும் ,வீரமும் காட்டும் செயலையே செய்ய விரும்புவர்.
இந்நில உலகில் இனிய பேச்சு/புகழ் வார்த்தைகளை விட,
வெகுமதி அளித்தால் மக்கள் அதிக மகிழ்ச்சி அடைவார்கள்.
உலகநாதர் சிவன் எருக்கம்பூ /ஊமைத்தைபூவில் அர்ச்சனை செய்தால் மகிழ்கிறார்.
விஷ்ணு பகவான் துளசி இலை அர்ச்சனையில் மகிழ்கிறார். வெகுமதியால் தான் சந்தோசம். வீணான இனிமை பேச்சால் அல்ல.
நோய் உள்ளவர்களுக்கு நோய் தீர மருந்து.
அவ்வாறே இல்லாத வறியவர்களுக்கு அழிப்பது தான் சிறந்த தானம். இருப்பவர்களுக்கு கொடுப்பதால் தானத்தின் பயன் இல்லை.இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதே சிறந்த வள்ளல் தன்மை.
சிரிக்காதே.எதற்காக சிரிக்கிறாய். சிரித்ததால் ஒரு அரச குலமே அழிந்துவிட்டது.துரௌபதியின் சிரிப்பால் அழிந்தது கௌரவர் குலம்
.மனிதனுக்கு துன்பமோ ,விபத்தோ வந்தால்,மதி கெட்டுப்போகிறது.விதிவசத்தால் விபத்து ஏற்பட்டால்,ஏழைக்கும்,அரசனுக்கும் மேதைக்கும் அறிவு மழுங்கித்தான் போகும்.பொன்மான் பின்னால் ராமன் சென்றதால்,அவர் தன் அன்பு சீதையை பிரிந்தார்.அந்த மான் மாய மான் என்று அறியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக