ஞான மார்க்கம்
கபீர்
மாயை மிக மோசக்காரி.
நாங்கள் அறிந்துகொண்டோம்.(கபீர் )
அது முக்குணங்களை தன் கையில்
வலைவிரித்துச்செல்கிறது.
(சத்வ,ரஜ ,தாமச குணங்கள் )
அது இனிமையான மயக்க மொழி
பேசிக்கொண்டே சுற்றிக்கொண்டே இருக்கிறது .
விஷ்ணுவிடம் இலக்குமி யாக வும்,
சிவனிடம் பார்வதியாகவும்
வீற்றிருக்கிறது.
அது பூசாரிகளிடம்
இறை உருவச் சிலைகளாக,
புனித இடங்களில்
புனித நீராக,
ரிஷிகளிடம் ரிஷியாக,
அரசினிடம் அரசியாக,
மயக்கிக் கொண்டு இருக்கிறது.
அது செல்வந்தனிடம் வைரமாகவும்,
ஏழைகளிடம் காசுகளாகவும்
பக்தனிடம் பக்தியாகவும்,
பிரம்மாவிடம் சரஸ்வதியாகவும்
அமர்ந்து மாயை புரிகிறது.
இந்தமாயை உலகை
ஆட்டிபடைக்கிறது.
இந்த மாயையின்
மயக்கும் கதை
வர்ணனைக்கு அப்பாற் பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக