பாரத நாட்டு அரசியல்.
பாரதநாட்டின் அரசியல் ,
பாமரனை குழப்பத்தில்
வைத்து குளிர்காயும்
அரசியல்.
இருபெரும் அரசியல் கட்சி.
இரு பெரும் மாநில கட்சிகள்.
இவர்களின் மேல் குற்றம் சாட்டும்,
சிறு சிறு அரசியல் தலைவர்கள்.
சிறு சிறு ஜாதிக்கட்சிகள்.
தங்கள் சுயநலம் நிறைவேற
பெருந்தலைவர்கள் ஊழல்,ஊழல்,
என்று சொல்லி
யார் மேல் குற்றம்
சாட்டினார்களோ அவர்களையே
ஆட்சி யாளர்களாக்க ,
வாழ்க போடும் கூட்டம்.
குற்றம் சாட்டி இன்றுவரை எதுவும்
நிரூபிக்கப் படவில்லை.
யாரும் தண்டனை பெறவில்லை.
கூட்டணியில்
சிறுகட்சிகள் மாறி மாறி சேருவதும்
பிரிவதும் ,
மக்களை குழப்பத்தில்
ஆழ்த்துவதும்,
ஊழல் கட்சிகள் வாக்குகள் பெற்று
ஆட்சியில் அமருவதும்
குற்றம் சாட்டியவர்கள்
குளிர் காய்வதும்
அரசியல் தலைவர்களின்
அற்புத விளையாட்டு.
அனைவரும் போற்றும் தலைவர்கள்,
காந்தி;நேரு,அண்ணா.
தூற்றும் தலைவர்கள்
சோனியா;அத்வானி;
லாலுஜி,மாயாவதி ,
கலஞரவர்கள்;செல்வி புரட்சித்தலைவி.
அனைவரையும் தூற்றுபவர்கள்
அவர்கள் மீது சாட்டும்
குற்றங்கள் நிரூபிக்க உறுதியுடன்
இல்லாத சந்தர்ப வாத
துணிச்சல் காரர்கள்.
நாட்டின் நலம் விரும்பிகளாக
இல்லாமல் இருப்பதால் இந்நிலை.
வாழ்க ஜனநாயகம்.
வாழ்க சோனியா;அத்வானி;
கருணாநிதி ;ஜெயலலிதா.
மற்றவர்கள் கூஜா தூக்கிகள்.
இந்தமுதலாளி இல்லை என்றால்
அந்த முதலாளி.
நடுவில் சுப்ரமணிய சாமி.
வாழ்க ஜனநாயகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக