வெள்ளி, நவம்பர் 11, 2011

pongal pandikai

பொங்கல்

பண்டிகைகள் பல,
பாரத நாட்டில்.
அசுரர்களை அளித்த ,
ஆனந்த பண்டிகைகள் .
நரகா சூரனை
அழித்த
தீபாவளி.
இராவணனை
அழித்த இராம லீலா.
ஹோலிகாவை ,
எரித்த ஹோலிபண்டிகை.
மகாபலி ,
மூன்றடி நிலம்,
அளித்து,
முக்தி பெற்ற,
ஓணப்பண்டிகை.
தீயவைகளை

அழித்த
தெய்வ அவதாரங்கள்
ஜன்ம ஜெயந்தி
என
பாரதப் பண்டிகைகள்.
ஆனால்,
தமிழர்கள்,
பண்டிகை,
உழவின்
பெருமையை ,
உழைப்பின் ,
உயர்வை,
மனித
உயிர் வாழ
உணவை
விளைவித்த,
இயற்கையை
போற்றும்
பொங்கல்
திருநாள்.
பழையன
கழிக்க,
போகிப்பண்டிகை.
புத்தரிசி
பொங்கல்,
ஞாலம்
காக்கும்
ஞாயிருக்குப்
படைத்து,
கார்மேகம்
காட்டி,
நிலதாகம்
தீர்த்து,
கதிர்கள்
தானியம்
செழிக்க
கதிர் வீசும்,
கதிரவனுக்கு,
நன்றி சொல்ல
பொங்கல் பண்டிகை.
உழைப்பிற்கு
ஈடு கொடுத்து,
உழைத்த
மாட்டின் மாடுகளுக்கு,
நன்றி
சொல்ல,
மாட்டுப்பொங்கல்.
உழைப்பின்
உயர்வை,
உழவனின்
பெருமையை
உயர்த்த,
உழவர் தினம்.
மனித
ஆற்றலுக்கு,
மாண்பு தரும்,
பொங்கல் பண்டிகை.
இந்த நன் நாளில்,
இன்பம் பொங்கட்டும்.
மனித நேயம்
பெருகட்டும்.
மனித
ஆற்றல்
ஆக்கமளிக்கட்டும்.
உழைக்கும்
வர்கத்தின்,
ஊதியம்
பெருக,
தமிழகம்
தரணியில்
சிறக்க
"பொங்கலோ"
பொங்கல்
என
கூவி,
மகிழட்டும்.







கருத்துகள் இல்லை: